Skip to Content

9. சுப சகுனம்

சுப சகுனம்

 

கர்மயோகி
 

  • சுபமாக முடிவதைச் சுப சகுனம் காட்டும்.
  • சுப சகுனம் அர்த்தமுள்ள ஆரம்பம்.
  • அது முடிவைத் தன்னுட்கொண்ட அர்த்தபுஷ்டியுள்ள ஆரம்பம்.
  • ஒருவர் மகாபுருஷனாக உலகில் வாழ்வதை அவர் பிறந்த சமயம் சுற்று வட்டாரம் பெற்ற சுபிட்சம் குறிக்கும்.
  • நம் வாழ்வின் முடிவில் நம் உலகம் செழிப்பாக, இன்று நம்மைச் சுற்றியுள்ளவர் அதன் அறிகுறியைக் காண வேண்டும்.

நம்முள் - அகத்தினுள் - அவ்வறிகுறி நல்லெண்ணம்.

அகத்தின் நல்லெண்ணம் புறத்தின் கலகலப்பான குதூகலம்.

அன்னை அதை cheerfulness சந்தோஷம் என்கிறார்.

  • ஒருவர் சந்தோஷம் அவர் உலக சுபிட்சம்.

        சுபிட்சம் சந்தோஷமாக ஆரம்பிக்கிறது.

        சுபிட்சத்தை நாடுபவருடைய ஆரம்பம் சந்தோஷம்.

  • சாதனையை நாடுபவரின் சந்தோஷம் தெம்பான திறமை.

        தெம்பான திறமை சுறுசுறுப்பால் வெளிவரும்.

        சுறுசுறுப்பு சும்மா உட்கார விடாது.

        சாதனையின் ஆரம்பம் வேலை செய்யும் விறுவிறுப்பு.

  • பெரும் படிப்பின் ஆரம்பம் பார்ப்பதையெல்லாம் படிக்கும் ஆர்வம்.
  • ருசியான சமையல் பிறர் சாப்பிட்டு மகிழ்வதில் பெறும் சந்தோஷம்.
  • தலைமையின் ஆரம்பம் பிறர் விரும்பக் கட்டுப்படுவது
  • சங்கீத மேதையாவதின் ஆரம்பம் இசை குரலாக எழுவது.
  • பெரும் செல்வம் சேர்வதன் ஆரம்பம் அயராத உழைப்பு
  • பிரபலத்தின் ஆரம்பம் இனிமையான சொல்லின் புன்னகை.
  • சுமுகமான திருமணத்தின் ஆரம்பம் பிறர் இனிக்க நடப்பது.

    காதலின் ஆரம்பம் ஜீவன் ஜீவனோடு இணைவது.
  • பண்பின் சிறப்பு பலருக்கும் பயன்படுவதின் ஆரம்பம், கருணை நிறைந்த கனிவான உணர்வு.
  • குடும்பத்தின் பிரபலம் பொறுப்புணர்ச்சியில் ஆரம்பிக்கிறது.
  • ஆரம்பம் அழிவது சரணாகதி யோகமாவது.
  • விஞ்ஞானத்தின் ஆரம்பம் வினோதம் கண்ணில் படுவது.
  • எதிர்காலம் புரிவதின் ஆரம்பம் கடந்தகால சுபிட்சம்.
  • நல்ல முடிவின் ஆரம்பம் இனிமையான மலர்ச்சி.
  • வெற்றியின் ஆரம்பம் பொங்கி வரும் சந்தோஷம்.
  • புரிவதின் ஆரம்பம் படிக்க ஆர்வம்.
  • தெளிவின் ஆரம்பம் நிதானம்.
  • வளரும் செல்வத்தின் ஆரம்பம் நல்லெண்ணம் நயமான நாகரீகமாகி, நாலு பேர் அகமகிழ்தல்.
  • பெருமகசூலின் ஆரம்பம் களை வளராத பயிர்.
  • சுதந்திரத்தின் ஆரம்பம் தியாகம்.
  • பெருவாரியான நண்பர் குழாம், நட்பில் பெறும் பெருமையில் ஆரம்பிக்கிறது.
  • தெய்வ தரிசனத்தின் ஆரம்பம் சத்தியம் நெஞ்சில் இனிப்பது.
  • சொல் நிலைப்பதின் ஆரம்பம் சுருதி ஜீவனை ஆட்கொள்வது.


 

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

ஆத்ம சமர்ப்பணம் பூர்த்தியாகும்பொழுது மனிதன் காலத்தைக் கடந்தவனாகிறான். சிருஷ்டி, தன் பூர்வோத்திரத்தை நாடும் மார்க்கம் அது.
 

என்னை உன் உடமையாக்கிக்கொள்.

 


 



book | by Dr. Radut