Skip to Content

"அன்னை இலக்கியம்'' தமிழாசிரியர்

(மே 2000 இதழ் தொடர்ச்சி)

இல.சுந்தரி

"நம்ம தெரு திரும்புற இடத்தில வயக்காடு இருக்கே, அங்கே நெறைய எருக்கஞ்செடியிருக்கு'.

"சரி, நீ சிறிது எருக்கம்பூப் பறித்துக் கொண்டு வா. பறிக்கும்போது கவனமாயிரு.அதன் பால் கண்ணில் பட்டால் கண் பார்வை போய்விடும்.பூவைக் கொண்டுவந்து அம்மாவுக்கு வைத்துவிட்டுச் சிறிது பூவை பையில் வைத்துக்கொள்.பயமே வராது. எந்தத் தீயதும் உன் பக்கம் வராது' என்றார்.

"இதோ ஒரு நொடியில் எருக்கம்பூ கொண்டு வந்திடறேன் சார்'' என்று ஓடினான்.பறித்து வந்து தட்டில் வைத்து கண்மூடித் தியானித்து சில பூவைச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு சென்றான்.

மதியம் காரியரில் சாருக்குச் சாப்பாடு கொண்டு கொடுத்துவிட்டு மாடுகளை ஓட்டிப் போனான்.சார் சொன்னது மெய்தான்.பயமேதும் தோன்றவில்லை.

மறுநாள் திடீரென உறவினர் வீட்டிலிருந்து செட்டியாருக்கு அழைப்பு வந்தது.இராப்பயணம் குறித்து எஜமானியம்மாள் அஞ்சினாள்.முதலாளியோ உடனே புறப்படவேண்டிய அவசியத்தில் இருந்தார்.வேலு குறுக்கே வந்து, "வாத்தியார் சார் வீட்ல இருக்கற அம்மா சாமிக்கு எருக்கம்பூ வைச்சு அதைக் கையில எடுத்துக்கிட்டா கெட்டது வராது.பயமே இருக்காதுன்னு வாத்தியார் சார் சொன்னாரு. நாங்கூட உச்சிப்போதுல காட்டுப்பக்கம் போறப்ப இப்பல்லாம் எருக்கம்பூ எடுத்திட்டுத்தான் போறேன்.பயமேயில்ல, உங்களுக்கும் ஒரு பூ கொண்டு வரேன் ஐயா'' என்றான்.

இது என்ன புதுசாயிருக்கு என்று எண்ணிய செட்டியார் இப்போது செல்ல வேண்டிய அவசியத்தை வேண்டி, "சரி சரி ஏதாவது

 

செய்' என்று சொல்லிவிட்டு, "கருப்பா!வண்டி கட்டு'' என்றார்.

மறுநாள் செட்டியார் திரும்பும்வரை எஜமானியம்மா கவலையால் புலம்பினார்.வேலுதான், "பயப்படாதீங்கம்மா, வாத்தியார் சார் வீட்டு அம்மாவுக்கு வெச்ச பூவை ஐயா கொண்டுகிட்டு போயிருக்காரு. அம்மாவுக்கு சக்தி அதிகம்.ஐயா நல்லபடியா வந்திடுவாரு'' என்று தைரியம் கூறினான்.

மறுநாள் சிரித்துக் கொண்டே வந்த செட்டியார், "எலே வேலு நல்ல வேலைதான் செஞ்ச.நேத்து அடுத்த டவுன்ல மந்திரி பேச வராருன்னு வழியெல்லாம் லைட்டுப்போட்டு போலீஸ் காவல் வேற. ஒரு பயமும் இல்லாம போய்வந்தேன்' என்றார்.

"அதான் ஐயா.வாத்தியார் சார் வூட்ல அம்மா தெய்வம்னு ஒண்ணு இருக்கு.அதுக்கு ரொம்ப சக்தினு சார் சொல்வாரு, அது நெசந்தான்' என்றான் கையைக் கட்டியவண்ணம்.

"அப்போ சரி.நாளைக்கு டவுன்ல பம்பு செட்டு வாங்கனும். கெடைச்சா அதிஷ்டம்தான்' என்றார் செட்டியார்.

"நானும் ஒங்ககூட வரேன் ஐயா.சார் வீட்டு அம்மாவை வேண்டிக்கிட்டு பூ எடுத்துவரேன்'' என்றான்.செட்டியாருக்கு லேசாய் ஒரு நம்பிக்கை ஓடிற்று.

மறுநாள் அம்மாவுக்குப் பூ வைத்து வேண்டிக்கொண்டான். ஒரு பூவைச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு எசமானுக்கும் ஒரு பூ எடுத்துக் கொண்டான்."என்ன வேலு?அம்மாவிடம் ஏதாவது முக்கியப் பிரார்த்தனையா?' என்றார் ஆசிரியர்.

"ஆமா சார் எங்க ஐயா பம்புசெட் வாங்க டவுனுக்குப் போறார். கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டேன்' என்றான்.

"உன் நல்ல மனதிற்கு அம்மா நிச்சயம் பலிப்பார்'' என்று கூறியனுப்பினார் ஆசிரியர்.தன் எசமானிடம் ஒரு பூவைக் கொடுத்தான்.அவர் அதைத் தம் சட்டைப் பையில் வைத்துக்கொள்ள

 

இருவரும் கிளம்பினர்.பஸ் ஸ்டாண்டிற்குப் போனவுடன் ராவுத்தர் ஓடிவந்து நாற்காலி போட்டு உபசரித்தார்."இன்று பஸ் வராதுன்னு பேசிக்கிறாங்க.டவுன்ல ஏதோ கலாட்டாவாம்' என்றார் ராவுத்தர்.

"என்ன இது கிளம்பும் போதே தடை என்று எண்ணினார்.

அதே நேரம் ஒரு கார் வந்து இவரருகே நின்றது.காரிலிருந்து இறங்கியது பட்டணத்திலிருக்கும் இவர் மகனுடைய நண்பன். செட்டியாரைக் கண்டதும் இறங்கி அருகில் வந்து, "என்ன ஐயா இங்கிட்டு?எங்காவது போகணுமா?வாங்க நம்ப கார்ல போகலாம்' என்றான்.

"டவுனுக்குப் போகணும், பஸ் வராதுன்னு பேசிக்கிறாங்க'' என்றார் செட்டியார்."நம்ப கார் இருக்கும்போது பஸ் எதுக்கு?வாங்க' என்று வலிய அழைத்துப்போய் போக வேண்டிய இடத்தில் விட்டான். பம்புசெட்டுக்கு மனுச் செய்திருந்த இடத்தில் ஏகப்பட்ட கும்பல்.முதல் 25 பேருக்குத்தான் இன்று டெலிவரியாம்.இவருக்கு அதில் வாய்ப்பில்லை."என்னடா வேலு?' என்று சோர்வாய்க் கூறினார்.

"அதெல்லாம் கவலைப்படாதீங்க எஜமான்.சார் வீட்டு அம்மாவை நெனச்சு ஒரு காரியம் செஞ்சா தோல்வியே கிடையாது. நீங்க ஒங்க சவுகரியத்துக்கா வாங்குரீங்க, .ஊர் மக்களுக்குத்தானே வாங்குரீங்க.ஒங்க நல்ல மனசுக்குத் தடை வராது எசமான்.நான் கொஞ்சநேரம் ஓரமா உட்கார்ந்து அம்மாவை மனசுல நெனச்சுக்கிறேன்.அம்மா உதவி செய்வாங்க' என்று ஒரு ஓரமாகக் கண்ணை மூடி மனதில் முகமெலாம் மலர்ந்து சிரிக்கும் அம்மாவை நினைத்தவண்ணம் உட்கார்ந்துவிட்டான்."அம்மா நெனவு தெரிஞ்ச நாளா எசமானுக்கு உழைக்கறத தவிர எனக்கு ஒண்ணுமே தெரியாதும்மா.ஒங்களை பார்த்தபிறகுதான் எனக்கு, சாமி கும்மிடற எண்ணமே வருது.நீங்க ரொம்ப நல்லவங்கன்னு வாத்தியார் சார் சொன்னார்.எங்க எசமானும் ரொம்ப நல்லவர்.அவர் ஏமாந்துடாமே நீங்கதான் உதவணும்', என்று மானசீக வழிபாடு நடந்தவண்ணம் உள்ளது.

 

திடீரென ஆபீஸ் ரூமிலிருந்து வெüயே வந்த ஒருவர் ராதாகிருஷ்ணசெட்டியாரைப் பார்த்தவுடன் "அடடா ஐயாவா நல்லா இருக்கீங்களா?'' என்று அருகில் வந்தார்."நல்லா இருக்கேன் தம்பீ. பம்புசெட்டுக்கு மனுச் செய்திருந்தேன் கிடைக்காது போலிருக்கு' என்றார்."அடடா உங்களுக்கு இல்லாமலா?ஊருக்கு நல்லது செய்பவ ரல்லவா நீங்கள்?உங்கள் உதவி இல்லாது போனால் இவ்வளவு நல்ல நிலை எனக்குக் கிடைத்திருக்குமா?எனக்கு "டெலிவரி'' கிடைத்துவிட்டது.அதை உங்களுக்குத் தருகிறேன்.எனக்கு அவசரம் ஒன்றுமில்லை;' என்று உடனே வண்டியிலேற்றி ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டார்.விடைபெற்ற செட்டியார், "வேலு!உன் தவம் பலிச்சுடுத்து எந்திரிச்சு வா'' என்றார்."என்ன ஐயா, கெடச்சுடிச்சா?'' என்றான் மகிழ்வாக."ஆமாம் வேலு' என்றார் உற்சாகமாக.வேலு மனதில் அம்மாவுக்கு நன்றி சொன்னான். பஸ்ஸைவிட்டு இரங்கியதும் மறவாமல் அம்மாவுக்குப் பக்கத்தில் கிடைத்த பூக்களைச் சேகரித்துக் கொண்டான்.உள்ளூர செட்டியாருக்கும் நன்றி உணர்விருந்தது."வேலு நீ சாமிக்குப் பூ கொடுத்திட்டு வா நான் முன்னால போகிறேன்' என்றார்.சார் வீட்டு அம்மாவைப் பார்க்க ஓடினான் வேலு.

தினமும் சிறிது நேரம் ஆசிரியரிடம் வந்து ஏதாவது நல்ல செய்திகளைத் தவறாது கற்றான்.அன்னைக்கு வாய்த்த போதெல் லாம் கிடைத்த பூக்களையெல்லாம் தவறாது கொண்டுவருவான்.

கவுண்டர் ஐயா மகன் பட்டணத்தில் வேலைக்குச் சேர நேர்முகத் தேர்வுக்குப் போகிறான்.இவன் டவுன் பள்ளிக்கூடத்தில் படித்துத் தேறியிருந்தான்.வேலை கிடைக்கவேண்டும் என்ற படபடப்பில் பஸ்ஸுக்கு நின்று கொண்டிருந்தான்.எஜமானுக்கு வெற்றிலைச் சீவல் வாங்க வெற்றிலைக் கடைக்கு வந்த வேலு மாணிக்கத்தைப் பார்த்ததும் தெரிந்தவன் என்ற முறையில் சிரித்தான்."என்ன அண்ணே வேலைக்குப் போறீங்ளா?' என்று அன்புடன் அருகில் வந்து கேட்டான்."வேலை கெடைக்குமான்னு பார்க்கப் போறேன் வேலு.ஒரே டென்ஷனாயிருக்கு எத்தனை முறை போய் திரும்பி வந்திருக்கேன்', என்றான் சோர்வாய்.

 

"பயப்படாதீங்க அண்ணே.எங்க வாத்தியார்சார் வீட்ல அம்மான்னு ஒரு சாமியிருக்கு அதை வேண்டிக்கிட்டா எல்லாம் நல்லா நடக்கும்'.

"ஆமாம் வேலு எல்லாத் தெய்வத்தையும் வேண்டியது கும்பிட்டாச்சு.ஒவ்வொரு முறையும் வேலை கெடைக்காமல் திரும்புகிறேன்' என்றான்.

"இல்ல அண்ணே இந்த அம்மாவுக்கு எதுவும் காவு கொடுக்கத் தேவையில்லை.நம் மனம் சுத்தமாயிருந்தா போதும்.நம் நியாமான தேவையை அம்மா நெறவேத்தி வைப்பாங்கன்னு வாத்தியார் சார் சொல்லுவாரு.நீ வேணுமின்னா பாரு இந்தா இந்தப் பூவைப் பத்திரமா சட்டைப்பையில வச்சுக்க', என்று தன் சட்டைப்பையிலிருந்து ஒரு மஞ்சள் பூவைக் கொடுத்தான்.தினமும் அம்மாவிடமிருந்து ஏதேனும் பூவை எடுத்து வைத்துக்கொள்வது அவனுக்கு வழக்கமாகிவிட்டது. "அண்ணே நிச்சயமா இந்த முறை உனக்கு வேலை கெடச்சுடும் பாரு' என்றான்.

மாணிக்கம் திரும்பிவந்து நல்ல செய்தி சொல்லுவான் என்று திடமாக நம்பினான்.மேலும் அவனுக்காக அம்மாவிடம் வேண்டிக்கொண்டான்.

இரண்டு தினங்களுக்குப்பின் ஒரு நாள் பஸ் ஸ்டாண்டுக் கடையில் ஏதோ வாங்கிக்கொண்டு திரும்பும்போது பட்டணத்துப் பஸ் வந்து நின்றது.முகமலர்ச்சியுடன் மாணிக்கம் இறங்கினான். "அண்ணே' என்று ஓடிச் சென்றான் வேலு.

"வேலு உன் வாக்குப் பலித்துவிட்டது.உன்னிடம்தான் முதலில் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.நீயே வந்து விட்டாய்.நீ கொடுத்த பூவைப் பத்திரமாய் பர்சுக்குள் வைத்திருந்தேன்.அத்தனை பேரில் எனக்கு எப்படி வேலை கிடைத்தது என்றே தெரியவில்லை வேலு.நீ சொன்ன அந்த அம்மாதான் துணையிருந்தாங்க' என்றான்.

"அம்மாவிடம் சொல்லிவிட்டால் நடக்காது போகுமா?' என்றான் வேலு பெருமிதமாக.

 

"அது சரி.யார் அந்த அம்மா?' என்றான் வேலுவிடம்."வாங்க அண்ணே போகும் வழியில் சார் வீட்டிற்குள் நுழைந்துவிட்டுப் போகலாம் முன்னறையில்தான் அம்மா இருக்காங்க', என்றான் வேலு.

இவன் யாரைப்பற்றிச் சொல்கிறான் என்று ஆவலுடன் வந்தான் மாணிக்கம்.இவர்களைக் கண்டதும் ஆசிரியர், "வாங்க, வா வேலு' என்று அன்புடன் அழைத்தார்.

"சார் இரண்டுநாளுக்கு முன்னால இந்த அண்ணன் பட்டணத் துல வேலை தேடப் போச்சு.அப்ப நான் நம்ம அம்மா விடமிருந்து எடுத்த பூவைக் கொடுத்தனுப்பினேன்.அண்ணனுக்கு வேலையும் கெடச்சுடுத்து.அதான் அண்ணன் அம்மாவைப் பார்க்க ஆசைப்பட்டுது கூட்டியாந்தேன்' என்றான் வேலு.

"என்ன பூ?மஞ்சள் நிறத்தில் இருந்ததே அந்தப் பூவைக் கொடுத்தாயா?' என்றார்.

"ஆமாம் எப்படிச் சொல்றீங்க.நான் பூ எடுக்கும்போது நீங்க தோட்டத்திலேயில்லே இருந்தீங்க' என்றான்.

"அந்தப் பூவின் பெயரே வெற்றி என்று அம்மா சொல்லியிருக் காங்க.எப்படி வெற்றி வராமல் போகும்?' என்றார் ஆசிரியர்.

அறைக்கதவைத் திறந்து உள்ளே அழைத்துப்போனார்.மாடத்தில் வேலு அம்மா என்று குறிப்பிட்டவரின் திருவுருவப்படம் அதற்கு முன்னால் பெரிய மேசையொன்றில் தூய்மையான துணி விரிக்கப் பட்டு அதன் மேல் ஊரில் உள்ள அத்தனை விதமான மலர்களும் அழகழகாய் அடுக்கப்பட்டிருந்தன.இந்தப் பூக்களெல்லாம் எத்தனை அழகு என்பதே இப்போதுதான் புரிவது போலிருந்தது.அந்த அம்மா வின் கண்கள் இவனைப் பார்த்து "மகிழ்ச்சிதானா?'' என்று விசாரிப் பது போல் தோன்றவே, "ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு அம்மா'' என்று மெய்ம்மறந்து வாய்விட்டுக் கூறினான்."என்ன அண்ணே.அம்மா கிட்டே பேசுறியா?' என்றான் வேலு."ஆமாம் வேலு.வேலை கெடச்சது மகிழ்ச்சிதானேன்னு கேட்கிற மாதிரியே இருக்கு' என்றான்.

 

இவர்களுடைய கள்ளமில்லாத மனங்களைக் கண்டு ஆசிரியர் ரசித்தார்.

"வேலு எல்லார் துன்பமும் தீருதே.என் துன்பம் ஏன் தீரலை?'' என்றாள் வேலைக்காரப் பொன்னம்மா.இவள் மகன் வீட்டை விட்டு ஓடிவிட்டான்.10 வருடங்களாக மகன் வருவான் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தாள்.காüயாயிக்கு எத்தனை முறை நேந்துகிட்டேன்.எதுவும் நடக்கலியே என்று விம்மினாள்.

"வாத்தியார் சார்கிட்ட சொல்லி உனக்கொரு வழி கண்டுபிடிக்கிறேன்' என்றான் வேலு.

மறுநாள் காலை பொன்னம்மா வீடு கூட்டும்போது "ஐயா, அறை வீட்ல அம்மா படம் வெச்சிருக்கீங்களாமே அவங்ககிட்ட வேண்டிக்கிட்டா எல்லாம் பலிக்கும்னு வேலு சொல்லுதே' என்றாள்.

"ஏன்?உனக்கு என்ன பலிக்கவேண்டும்?' என்றார்."என் மகன் சின்ன வயசுலே வீட்டைவிட்டு ஓடிட்டான்.10, 12 வருஷமாச்சு இன்னும் ஒரு தகவலும் தெரியல.திரும்பி வரமாட்டானான்னு மனசு ஏங்குது சாமி' என்றாள்.

"சரி உன் மகன் ஏன் வீட்டைவிட்டுப் போனான் என்ற காரணத்தை யோசித்துப் பார்.நீயோ, உன் புருஷனோ அவன் நோகும்படி ஏதாவது சொல்லியிருந்தால் அதை நினைத்துப்பார்த்து அந்தத் தவற்றை இனிமேல் செய்வதில்லை என்று அம்மாவிடம் சொல்லி உன் மகன் திரும்பி வரவேண்டும் என்று வேண்டிக் கொள் தானாக வந்துவிடுவான்', என்றார்.

தான் தன் மகனைத், "தண்டச்சோறு' என அடிக்கடி கடுஞ்சொல் கூறித் திட்டியதையும், படிக்கும் வயதில் அவன் நிறைய சம்பாதித்து வரவேண்டும் என ஆசைப்பட்டு அடித்ததையும் மனம் உறுத்த, "அம்மா சின்ன புள்ளய நா அப்பிடிப் பேசினது தப்புத்தான்.இனிமே அப்படியெல்லாம் பேசலை தாயி.என் மகனைக் கொண்டுவந்து எங்கிட்ட சேர்த்திடு தாயி'' என்று மனம் உருகி வேண்டிக்கொண்டு தோட்டத்திலிருந்து பூவும் பறித்து வந்து வைத்துச் சென்றாள்.

 

செட்டியார் வீட்டிற்குப் பொன்னம்மா பேருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.என்னவென்று பார்த்தால் தன்னைத் தன் தாய் தண்டச்சோறு என அடிக்கடி திட்டியது பொறுக்காமல் வீட்டைவிட்டு வெüயேறியதாயும் ஆனால் இப்போது ஒரு முதலாளியிடம் வேலையில் சேர்ந்து நன்றாக இருப்பதாகவும் விரைவில் அம்மாவைப் பார்க்க வருவதாகவும் பாசத்துடன் எழுதியிருந்தான் பொன்னம்மாவின் மகன்.

பொன்னம்மாவுக்கு மெய் சிலிர்த்தது.கண்ணீர் வந்தது.நேற்று தான் வேண்டினாள்.இன்று உடனே மகனிடமிருந்து தகவல் வந்து விட்டது."ஐயா, ஒங்க அம்மா தெய்வந்தாங்க'' என்றாள் ஓடி வந்து.

"அது எங்க அம்மா இல்ல.நம்ப அம்மா'' என்று திருத்தினார்.

"ஆமா சாமி.நம்ப எல்லாருக்குமே அவங்கதான் அம்மா' என்றாள்.இதைக்கேட்டு இவள் புருஷன் கருப்பன் விதண்டாவாதம் செய்தான்.என்னிக்கோ ஓடிப்போனவனுக்கு ஊர் நெனப்பு வந்திருக்கு.கடுதாசு போட்டிருக்கான் இதைப்போய் பெரிசுபடுத்தறியே என்றான் அலட்சியமாக.

இவனுக்கு எப்படி விளக்குவது என்று தவித்தது பொன்னம்மாவின் மனம்.

அப்பொழுதுதான் செட்டியார் பக்கத்து கிராமத்திலுள்ள நண்பர் ஒருவருக்கு அவசரச் செய்தியும் முக்கியமான பொருளும் கொடுத்து வரச்சொல்லி  கருப்பனை வண்டி கட்டச் சொன்னார்.வேலுவைத்தான் கடிதத்தையும் பொருளையும் எடுத்துப்போகச் சொன்னார்.வேலு வண்டியில் ஏறுமுன் சார் வீட்டு அம்மாவிடமிருந்து காகிதப்பூவை எடுத்துவந்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அம்மாவை வேண்டிக்கொண்டு புறப்பட்டான்."இந்தக் காகிதப்பூதான் உனக்குக் காவல் இருக்கப் போகுதா?' என்று கூறிச் சிரித்தான் கருப்பன்.

"ஆமாம் இந்தப் பூ எங்க அம்மாவிடமிருந்து எடுத்தது. இதைப்பத்தி ஒனக்குத் தெரியாது' என்றான் வேலு."சரி சரி

 

காகிதப்பூவே ஒன்னைக் காப்பாத்தட்டும்', என்று கிண்டலாகச் சொல்லி  வண்டியை ஓட்டினான்.போன வேலை முடிந்து திரும்பி வரும்போது பயங்கரமான வளைவு ஒன்றில் திரும்பும்போது எதிர்பாராமல் எதிரே லாரி வர வண்டியை ஓரம்கட்ட முடியாமல் திணறினான் கருப்பன்.மாடு மிரண்டது."அம்மா!காப்பாத்து' என்று கத்தினான் வேலு.ஒரு நூலிழை இடைவெளியில் லாரி கடந்துபோக, சக்கரம் எதிலோ செருகிக்கொண்டு நின்றது.இல்லையென்றால் பள்ளத்தில் கவிழ்ந்திருக்கும்.மாடும் மனிதர்களும் காணாமற் போயிருக்கக்கூடும்.கருப்பன், "வேலு உங்க அம்மாதான் காப்பாத்தினாங்கன்னு புரியுது.அம்மா என்னை மன்னிச்சுக்க'' என்றான்."எங்க அம்மா இல்ல.நம்ப அம்மா'' என்றான் வேலு.

அன்று ஞாயிற்றுக்கிழமை.வார விடுமுறை.ஆசிரியர் குளித்து வேட்டி உடுத்தி மேலே துண்டைப் போர்த்திக்கொண்டு பொறுமையாக பூக்களுடன் வந்து அறையைத் திறந்தார்.வேலு சோகமாய் வந்தான். "என்ன வேலு?' என்றார்.

"எங்க அம்மாவுக்கு ஒடம்பு சொகமில்லை.ராத்திரியெல்லாம் தூக்கமில்லை.ஒரே கவலையா இருக்காங்க சார்.உங்களிடம் அம்மாவுக்கு வச்ச பூ வாங்கிப்போக வந்தேன்' என்றான்.

"வேலு உன் வெள்ளையுள்ளத்திற்கு அம்மா வேண்டியதைத் தருவாங்க.நான் சொல்கிறபடி செய்.பூவரசமரம் எங்கேயிருக்கிறது தெரியுமா?என்றார்.

"ஓ தெரியுமே.அடுத்த தெரு மாணிக்கம் ஐயா வீட்டுக்கு முன்னால இருக்கு.குவளை குவளையா பூப்பூத்திருக்கே'.

"சரி அந்தப் பூவை முடிந்தால் கொண்டுவா'' என்றார்."இதோ ஒரு நொடியிலே வரேன் சார்' என்று ஓடினான்.சற்று நேரத்தில் துண்டில் நிறையப் பூக்களைப் பறித்து வந்திருந்தான்.

"இந்தா, இந்தத் தட்டில் வேண்டிக் கொண்டு நீயே வை' என்றார். "அம்மா உன்னத் தெரிஞ்ச நாளிலேருந்து உன்னைத்தவிர எனக்குத்

 

துணை எதுவும் தெரியல.இப்பவும் எங்க அம்மா, ரொம்ப நல்லவங்க. அவங்களுக்கு ஒரு கஷ்டமும் வரக்கூடாதுன்னுதான் வேண்டிக் கிறேன்'' என்று பூவை அழகுற அடுக்கினான்.தட்டை அம்மாவின் முன் வைத்து கண்மூடி வணங்கினான்.

ஆசிரியர் அவன் செயலை ஆர்வமாய்க் கவனித்தார்.பிறகு ஒரு பூவை எடுத்து அவனிடம் தந்து, "இதை ஒங்க அம்மா கையில கொடு.நம்புவாங்களா?' என்றார்."நம்புவாங்க, நம்பலையின்னா எங்கையில வச்சுகிட்டு அவங்க பக்கத்திலயே நின்னு வேண்டிப்பேன் சார்' என்றான்.

இவனுடைய ஆழமான நம்பிக்கைக்கு அன்னை விரைவில் பலித்துவிடுவார் என்று எண்ணிக்கொண்டு அனுப்பி வைத்தார்.

மறுநாள் காலை மலர்ச்சியாக வந்தான் வேலு.

"என்ன வேலு?அம்மா எப்படி இருக்காங்க?நானே வரலாமென்றிருந்தேன்.வந்தவுடன் முதல்நாள் அன்று பலகாரமும், சாப்பாடும் அனுப்பிய புண்ணியவதி நல்லாகணும்னு நானும் வேண்டிக் கொண்டேன்'' என்றார்.

"நீங்க கொடுத்த பூவரசம்பூவை அம்மாவிடம் கொடுத்து அம்மாவின் பெருமையெல்லாம் சொன்னேன்.சின்னபுள்ளமாதிரி "நானும் நல்லா ஆயிடுவேனா வேலு'' என்றாங்க.பூவை பத்திரமா வச்சிட்டாங்க.காலையல தூங்கிவிழிச்சமாதிரி நல்லா ஆயிட்டாங்க', என்றான்."சரி வா நானும் உங்க ஐயாவைப் பார்த்து விசாரிக்கிறேன்' என்று புறப்பட்டார்.

உள்ளே நுழைந்ததும் ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலின் ஆட்டத்தைக் காலினால் நிறுத்தி எழுந்தார் செட்டியார்."வாங்க சார்'' என்று அன்புடன் வரவேற்றார்.முதன்முதல் வந்தபோதும் அன்பாகவே வரவேற்றார்.ஆனால் ஆசிரியர் வயதில் சிறியவர். தாம் அனுபவசாலி எனவே உட்கார்ந்து வரவேற்கலாம் என்ற எண்ணம் இருந்தது.இப்போது இவரிடம் ஏதோ உயர்வாக

 

இருப்பதாகவும், மரியாதை தரவேண்டும் என்று உள்ளுணர்வு சொல்லவே எழுந்து வரவேற்றார்.

"அம்மாவுக்கு உடம்பு நலமாயிடுத்தா?' என்றார்."நல்லாவே குணமாயிடுச்சுங்க.வேலுதான் உங்கவீட்ல உங்க அம்மா படத்துக்கு பூஜைசெய்து பூ தந்தீங்கன்னு சொன்னான்'.

"அவன் சிறுவன்.அவன் நான் சொன்னதை அப்படிப் புரிந்துகொண்டான்.எங்கள் வீட்டில் இருப்பவர் பெயரே அம்மாதான். அவர்கள் என்னைமட்டும் பெற்றெடுத்த என் தாயில்லை.உலகையே ஈன்ற அன்னை பராசக்தி''.

"அடடா அவன் இதைச் சொல்லவேயில்லையே'' என்றார். "அந்தத் தெய்வத்தைப் பற்றிப் படித்தோ, பரம்பரையாகவோ உணர முடியாது.நம் ஆத்மாவினால்தான் உணரமுடியும்''."நான் ஏதோ கொஞ்சம் படிச்சவன்தான்.ஆனால் ஆன்மாவைப்பற்றியெல்லாம் எனக்கொன்றும் தெரியாது'' என்றார் செட்டியார்.

"ஆன்மா என்பது மனிதனுக்குள் இருக்கும் கடவுüன் பிரதிநிதி. அதன்மூலம் நாம் கடவுளோடு தொடர்பு கொள்ளமுடியும்.அதற்கு உள்ளத் தூய்மை வேண்டும்.வேலுவின் உள்ளம் தூயஉள்ளம். ஆழ்ந்த நம்பிக்கையும் இருக்கிறது.அதனால் பலிக்கிறது' என்றார் ஆசிரியர்."அப்படியா' என்று வியந்தார் செட்டியார்."அந்த அற்புதத்தை அறியாமலிருக்கும் மனிதர்களுக்கு அதை உணர்த்தி வாழும் வழி காட்ட அவதாரம் செய்த தெய்வம் அவர்கள்.அவர்களை மதர் என்று ஆங்கிலத்தில் அழைத்தாலும் சரி, "மா'' என்று இந்தியில் அழைத்தாலும் "அம்மா'' என்று தமிழில் அழைத்தாலும் நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அழைக்க வேண்டியதுதான் முக்கியம்'.

"நம் மனம் சுத்தமாக, போட்டி, பொறாமை, சோம்பல் இல்லாமல் இருந்தால் போதும், அதன்மூலம் அவர்கள் சக்தி நம்முள் செயல்படும்' என்று ஆசிரியர் விரிவாகக் கூறினார்.

"கேட்கக் கேட்க ரொம்ப மகிழ்வாயிருக்கு, அந்த அம்மாவின்

 

படம் ஒண்ணுதான் இருக்கா?'' என்றார் செட்டியார்.

"எதற்காகக் கேட்கிறீர்கள்?' என்றார் ஆசிரியர்."அவங்களை எல்லாரும் பார்த்துக் கும்பிடர்றமாதிரி ஓர் இடத்தில் வச்சா ஊருக்கே நல்லதாகுமேன்னுதான்'' என்றார் செட்டியார்.

"அதனாலென்ன முன்பக்க அறையில்தான் அம்மா இருக்காங்க. அங்கு எல்லோரும் வரலாம்.அறையைப் பூட்டி முன்பக்க மாடத்தில்தான் சாவி இருக்கும்.வேண்டியவர்கள் வந்து பூ வைக்கலாம் வழிபடலாம்'' என்றார் ஆசிரியர்.நடந்தவையெல்லாம் ஊரிலும் அக்கம்பக்கத்திலும் பரவியது.அந்த அதிசய அம்மாவைக் காண பலரும் வர ஆரம்பித்தனர்.கேட்டவர்க்கெல்லாம் ஆசிரியர் அம்மாவைப்பற்றி, பூக்களைப்பற்றி உளம்கொளச் சொன்னார்.அடுத்த சில மாதங்களில் அவருடைய பட்டப்படிப்புக்கு ஏற்ப வேற்றூரில் மேனிலைப் பள்ளிக்கு மாற்றல் உத்தரவு வந்துவிட்டது.அவரை வழியனுப்ப ஊரே வந்தது.அம்மாவை அங்கு நிலைநாட்டிய மகிழ்வுடன் தாம் வழிபட்ட அன்னையை அவ்வூராருக்கே அüத்துவிட்டு மகிழ்வுடன் புறப்பட்டார்.வேலு கண்கள் கலங்க "நம்ப அம்மாவை நான் நல்லா பாத்துக்கிறேன் சார்.நீங்க அடிக்கடி வரணும் சார்' என்றான்.அன்புடன் அவனை அணைத்து வருவதாக உறுதி கூறினார்.

செட்டியார் தம் நன்றியறிதலை எப்படித் தெரிவிப்பது என்று தவித்தார்.

"ஐயா, நீங்கள் வேலுவைப் பள்üக்கனுப்பிப் படிக்கவைத்தால் அதுவே எனக்குச் செய்யும் உபகாரம்.அவன் படித்தால் ஊருக்கே உதவியாய் இருப்பான்' என்றார்.

"கட்டாயமா சேர்த்திடறேன் சார்' என்றார் செட்டியார்.வேலுவின் தூயவுள்ளத்திற்கும், அன்பிற்கும், உழைப்பிற்கும் பரிசாக அன்னை அவனுக்குக் கல்வியை வழங்க ஏற்பாடு செய்துவிட்டார்.



book | by Dr. Radut