Skip to Content

07. லைப் டிவைன் -கருத்து

P.12. Error is the handmaid of Truth

தவறு, குறை என்பவை சத்தியத்தை உருவாக்கும் கருவிகள்

தவறே வாராமல் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமானால் ஏற்கனவே நாம் அறிந்த காரியங்களை மட்டுமே அதுபோல் செய்யமுடியும். புதியதாக இன்று கம்ப்யூட்டர் வந்துள்ளது. இதன் புது அம்சங்களைத் தவறில்லாமல் கண்டுபிடிக்க வேண்டும் எனில் முடியாது. 27 பல்கலைக் கழகங்கள் இருந்த நம் நாட்டில் 220 உற்பத்தி செய்யும்பொழுது தரம் குறையக் கூடாது எனில் விரிவுபடுத்த முடியாது. தரம் குறையக்கூடாது எனில் அபிவிருத்தியில்லை. புதிய ஸ்தாபனங்களில் பழைய ஸ்தாபன ஜுனியர்கள் தலைவர்களாக வருவதால் தரம் அவசியம் குறையும். மாணவர்கள் 50 ஆண்டு முன்பு சமூகத்தின் மேல் நிலையிலுள்ள குடும்பத்திலிருந்து வந்தார்கள். இன்று லட்சியமே அடி மட்டத்திலுள்ளவரை படிக்க வைப்பது. மாணவர்களும், பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் தரம் குறைந்தால் படிப்பின் தரம் குறையும்.

  • இன்று நாட்டில் கல்வித் தரம் குறைவது கல்வி அபிவிருத்திக்கு நாடு இட்ட முதல்.
  • குறையில்லாமல் முன்னேற்றமில்லை.

ஐரோப்பா நாகரீகத்தின் சின்னமாக இருந்து நாட்டை அரசர்கள் ஆண்டபொழுது Log cabin சிறு குடிசையில் பிறந்த படிக்காத லிங்கன் தாமே முன்னேறி வந்து நாட்டில் பிரசிடெண்ட் பதவி ஏற்றார். 1 ஏக்கர் காட்டைத் திருத்தி பயிரிடும் நிலமாக மாற்ற சராசரியாக 3 பேர் இறந்தனர் எனில் நாகரீகம் எப்படிப்பட்டது எனத் தெரிகிறது. அந்தக் குறை இன்று அமெரிக்காவின் நிறைவு.

இன்று இங்கிலாந்தில் படித்தவர் எவரும் பொய் சொல்வதில்லை என்பது அன்று இந்தியாவில் பொய் சொல்பவரில்லை என ஒரு வெளிநாட்டு யாத்திரீகன் தன் குறிப்பேட்டில் எழுதியது போலிருக்கிறது. இதே இங்கிலாந்தில் கொஞ்சநாள் முன் (Chancellor & Exchequer) என்பவரை ஊழலுக்காகக் கைது செய்ய உத்தரவிட்டனர். நம் நாட்டில் மத்திய பொருளாதார மந்திரி (Finance Minister) போன்றவர். அவர் நேரே அரசனிடம் போய் முறையிட்டார். சில நூற்றாண்டுகட்கு முன் நடந்த செய்தியிது. எதிர்ப்புத் தெரிவிக்காமல் Towerக்கு - ஜெயிலுக்கு - போவதே நல்லது என்றான் அரசன். அந்த அரசனே அதிகபட்ச இலஞ்சம் பெற்றவன். அந்தப் பெருங்குறை இன்று நாட்டில் பொய் சொல்பவர்களைக் காண முடியவில்லை, கோர்ட்டில் எவரும் பொய் சொல்வதில்லை, பொய் சொல்லும் கட்சிக்காரனுக்கு கேஸ் நடத்த வக்கீல் கிடைக்கமாட்டார் என்ற நிலை.

குறை, தவறு என்பதால் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் ஏராளம்.

1. பேப்பர் செய்யும்பொழுது குறை ஏற்பட்டது. அதனால் இங்க் ஊறியது, அப்படி ஏற்பட்டதே blotting paper.

2. கோந்து செய்யும்பொழுது கோந்து சரியாக ஒட்டவில்லை. அதைப் பயன்படுத்தி Post It என்றதை செய்தனர். சிறு குறிப்பெழுதி இதில் ஒட்டினால் ஒட்டிக்கொள்ளும். எடுத்தால் வரும். இது ஆபீஸில் பெரிய உபயோகமானது.

3. பென்சிலின் அப்படிக் கண்டுபிடிக்கப்பட்டதே.

****

 



book | by Dr. Radut