Skip to Content

01 யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV

கர்மயோகி

646) நம்மால் பயன்படுத்தும் அளவை மீறிய சக்தி எழுந்தால், அதைத் தீவிரம் என்கிறோம். அதையே இறைவனை நோக்கிச் செலுத்தினால் அது பக்தி, ஆர்வமாகிறது.

ஆண்டவனை நோக்கிச் செல்லும் அளவு மீறிய சக்தி பக்தியாகும்.

மனிதர்கள் பல வகையினர். சாதிக்கப் பிறந்தவர் சிலர். அனுபவிக்கப் பிறந்தவர் பலர். அவையின்றி வாழப் பிறந்தவர் பெரும்பாலோர். எதுவுமின்றி வாழ முடியாமல் தவிக்கப் பிறந்தவர் ஏனையோர்.

தீவிரம் சாதிக்கப் பிறந்தவருக்குடையது. தீவிரமின்றி சாதனையில்லை. தீவிரத்தின் அடிப்படை சக்தி. வாழ முடியாதவன் சக்தியற்றவனாகவும், வாழ்பவன் அளவோடுள்ள சக்தியையும், அனுபவிக்கப் பிறந்தவன் சற்று அதிகமான சக்தியையும் உடையவனாக இருப்பான். சாதிப்பவனுக்கு அடக்க முடியாத சக்தியிருக்கும். சோர்ந்து உட்காரும் மனிதர் சாதித்ததை உலகம் அறிந்ததில்லை.

அளவு கடந்து பீறிட்டெழும் சக்தியைச் சாதனையாக அனைவரும் மாற்றுவதில்லை. அனுபவித்து வீணாக்குபவருண்டு. அறிவில்லாமல் சிதற விடுபவருண்டு. முறைப்படுத்தாமல் (without organising) சக்தி சாதனையாக மாறாமல் போவதுண்டு. இவர்கள் சொல்ல நாம் கேட்பது, "எவ்வளவோ வேலை செய்தேன். பட்டபாடு பெரியது. கடைசி நேரத்தில் ஒருவன் வந்தான். பலனை எல்லாம் அவன் கொண்டு போய்விட்டான்", என்பது போன்றது. சக்தி சாதனைக்கு அஸ்திவாரமாகும். அதுவே பலனை முழுவதும் பெற்றுத் தாராது.

Energy  -

Force  -

Direction

நேர்ப்படுத்துதல்

Power  -

Organisation

முறைப்படுத்துதல்

Results

Skill

திறமை

சக்தி   -

செயலாற்றும் சக்தி -

பலன் தரும் சக்தி -

பலன்

பீறிட்டெழும் சக்தியை நேர்ப்படுத்தினால் செயலாற்றும், முறைப்படுத்தினால் பலன் தரும். திறமை பலனைப் பயன்படுத்தும் வகையாக மாற்றித் தரும். தானே வளரும் குழந்தையைப் படிக்கச் சொன்னால் அதன் சக்தி படிப்பை நோக்கிப் போகிறது. எல்லாப் புத்தகங்களையும் படித்தால் பொது அறிவு வளரும். குறிப்பாக எதுவும் செய்ய முடியாது. முறையாகச் செயல்படும் பள்ளியில் போட்டால் பட்டம் என்ற பலன் தரும் வகையில் அதன் சக்தி உருவாகும். பையன் தன் திறமையைப் பயன்படுத்திப் பட்டம் என்ற பலனைப் பெறலாம்.

பக்தி, ஆர்வம் (aspiration) என்பதற்கு மனித சக்தி அளவுகடந்து தேவைப்படுகிறது. வாழ்க்கைப் பலன் பெற அதைப் பயன்படுத்தாமல், இறைவனை அடைய அதைத் திருப்பினால் அது ஆர்வமாக மாறி, எந்நேரமும் மனம் இறைவனை நினைக்கும். ஆர்வம் முதிர்ந்தால், உடலெல்லாம் உள்ள சக்தி உள்ளத்தில் சேர்ந்து பக்தியாகி ஆர்வம் கனலாக மாறும். பக்தி சிறந்தால் நெஞ்சம் திறந்து, அதன் பின்னுள்ள சைத்தியம் வெளிப்படும். சைத்தியம் இறைவனை மட்டும் நோக்கிப் போவது என்பதால், நம் ஜீவன், வெளிப்பட்ட சைத்தியத்தால் வழி நடத்தப்பட்டு இறைவனை நோக்கிச் செல்லும். பக்தி யோகம் பலிக்க லயம் தேவை. லயித்துவிட்டால் நெஞ்சில் கனலெழுந்து நெஞ்சமே சிவந்துவிடும். ஞானியின் முகம் தேஜஸ் நிரம்பியுள்ளது போல், பக்தன் நெஞ்சம் சிவந்து காணப்படும்.

***

647) ஆர்வம் ஒரு பகுதியிலிருந்தாலும், அடுத்த பகுதிக்கு அதைக் கொண்டு போக முனைந்தால் அது பாதியில் தீர்ந்துவிடும். மனத்தின் ஆர்வத்தை உடலின் ஆர்வமாக்க முனைந்தால் முதலிலேயே தீர்ந்துவிடும்.

உடல் பெரியது, மனம் சிறியது.

ஓடியாடி வேலை செய்பவர் சுறுசுறுப்பாக இருப்பவர். இவருடைய சக்தி உடலின் சக்தி, உணர்வின் சக்தி. 8மணி, 10 மணி என சளைக்காமல் அதுபோல் வேலை செய்பவரை, நாற்காலியில் உட்கார்ந்து எழுத்து வேலை செய்யச் சொன்னால், இரண்டு மணி நேரத்தில் களைத்துவிடுவார். கொட்டாவி வரும், தூக்கம் வரும். மாலை வேலை செய்ய தெம்பிருக்காது. செய்தால் வேலையில் அதிகத் தவறு வரும். உடலால் சுறுசுறுப்பாக வேலை செய்பவர், அதே சக்தியை மனதால் பயன்படுத்தினால் (physical energy converts into mental energy) மனம் அதிக சக்தியைக் கேட்பதால், சீக்கிரம் களைப்பு வரும். 5 ரூபாய் நோட்டுக் கற்றையை 50 ரூபாய் நோட்டாக மாற்றினால், கற்றை சிறியதாகும். செயலைப் பொறுத்தவரை மனம் பெரிய கருவி, உடல் சிறிய கருவி.

ஆர்வத்தைப் பொறுத்தவரை மனம் சிறியது, உடல் பெரிய கருவி என்பதால் மனத்தின் ஆர்வம் உணர்வின் ஆர்வமாகவோ, உடலின் ஆர்வமாகவோ மாறினால் அது அளவில் குறைந்து சீக்கிரம் தீர்ந்துவிடும்.

உடல் இருளின் கருவி. காயம் பொய்யடா என்று முன்னோர்கள் சொல்லியதை ஏற்றுக்கொண்ட ஸ்ரீ அரவிந்தர், பொய் நிறைந்த காயம் இருள் நிறைந்ததானாலும், மனத்தைவிடப் பெரிய கருவி எனக் கண்டு, உடல் புறக்கணிக்கப்பட வேண்டியதன்று, திருவுரு மாற்றமடைய வேண்டியது என முடிவு செய்தார். மேலே சொல்லியதை வேறு வகையாக விளக்கினால், ஒளி நிறைந்த மனம் சிறிதளவு ஆன்மீக சக்தியால் திருவுருமாற்றமடையும், இருள் நிறைந்த உடல் திருவுருமாற்றமடைய அதிக ஆன்மீக சக்தி வேண்டும் என்றாகும்.

பூரண யோகத்தின் அடிப்படைகளில் ஒன்று உடலின் முக்கியத்துவம். தனக்குப் பின் வெளியிட வேண்டும் என அன்னை கூறியவை 13 வால்யூம்களாக வந்துள்ளன. அவற்றில் அன்னை உடலின் யோகம் yoga of the body, உடல் திருவுருமாற்றத்தைத் தாம் மேற்கொண்டதை விவரிக்கின்றார்.

நோய் மூலமாகவே உடல் திருவுருமாற்றமடையும் என்ற அன்னை உடல் திருவுருமாற்றத்தை நாடினால் தான் கற்றதை எல்லாம் மறந்து புதியதாக கற்கவேண்டும் என்கிறார். சாப்பிட, நடக்க, பேச, எழுத, பார்க்க, கேட்க நாம் கற்றவற்றை உடல் மறந்து, மீண்டும் புதிய ஜீவியத்தின் மூலம் அவற்றைப் புதியதாக கற்ற வகையை அன்னை விளக்குகிறார்.

உடல் திருவுருமாற்றமடைந்த பின்னரே பூரண யோகம் பூர்த்தியாகும். அதை ஸ்ரீ அரவிந்தர் மேற்கொள்ளவில்லை. அன்னையை மேற்கொள்ளச் சொன்னார். அன்னையின் திருவுடல் மட்டுமே உலகில் அதற்குத் தயாராக உள்ளது என்றார். அதை மேற்கொண்ட அன்னை உடல் வேதனையால் ஓலமிடுகிறது. இந்தத் திருவுருமாற்றத்தை நான் பிறருக்குச் சொல்லமாட்டேன். என்னால் அடுத்தவரை இதை மேற்கொள்ளச் சொல்ல முடியாது என்றார்.

***

648) தீர்ந்தபின் ஆர்வத்தை உற்பத்தி செய்வது பெரும்பாடு. மனம் மறந்துவிடும். வற்புறுத்தினால் "வற்புறுத்துவது தவறு" என மனம் பதில் சொல்லும். அல்லது "புரியவில்லை" என்று சொல்லும்.

ஆர்வம் தீர்ந்தால் செய்வதொன்றில்லை. மனம் வற்புறுத்த அனுமதிக்காது.

ஒரு புத்தகத்தை இரண்டு மூன்று முறை படித்தபின் புரியாவிட்டால், மீண்டும் ஆர்வமாக அதைப் படிப்பது சிரமம். புத்தகமே மறந்துபோகும். மீண்டும் நம்மை நாமே வற்புறுத்திப் படிக்கச் சொன்னால், இப்படி வற்புறுத்துவது தவறு என்று தோன்றும்.

நம் உடலில் சக்தி தீர்ந்த பிறகு உடலும் மனமும் செயல்படும் வகை இது. 30 மைல் நடந்து ஓர் இடத்தை அடைந்தபின் கால் கெஞ்சும். ஆயாசமாக உட்கார்ந்தபொழுது நாம் பார்க்க வந்தவர் வேறு இடத்திலிருக்கிறார், அது இங்கிருந்து அரை கிலோ மீட்டர் இருக்கும் என்றால், 30 மைல் நடந்தது சிரமமாகத் தோன்றாது. இந்தச் சிறிய தூரம் மலைப்பாகத் தோன்றும். உடல் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராது. 4 முறை பெயிலானவன் ஐந்தாம் முறை பரீட்சைக்குப் படிக்க, 52 வரன் மறுத்துவிட்ட பின் 53வது வரனைப் பார்க்க தயார் செய்ய, போன எலக்க்ஷனில் 36 ஓட்டு வாங்கியவர் அடுத்த எலக்க்ஷனில் நிற்க முயலும் பொழுது உடலும், மனமும் துவண்டு நிற்கும்.

உடல் சக்தியைத் திருவுருமாற்றத்திற்காக ஏற்கும் பொழுது கடல் போலிருக்கும். அகண்ட ஜீவநதியைக் கடல் சலனமின்றி விழுங்குகிறது. NGO வாகப் பணம் சம்பாதித்து 5 ஸ்டார் ஹோட்டல் பில் கொடுக்க சில நாள் இசைந்தாலும், மாதத்து வருமானம் மணிக்கணக்கில் செலவானதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாது.

உடல் பிரபஞ்சம் முழுவதும் பரவி நிற்பதால், நாம் கொடுக்கும் சக்தி பிரபஞ்சத்தை நிரப்பிய பின்னரே தெளிவடையும் என்பதால், நாம் மனத்தால் உற்பத்தி செய்யும் சக்தி மேல் மனத்தில் எழுவதால், பிரவாகமாக நாம் காண்பது உடலை அடைந்தவுடன் சிறு துளியாகிறது. அதைக் கண்டபின் மனம் சலித்து, சோர்வடையும். அன்னை 13,000 பக்கங்களில் தாம் பெற்ற யோகானுபவத்தில் உடலின் விந்தைகளை விளக்கமாக, விபரமாக எழுதியிருக்கிறார். உடலின் பெருமைகளைப் புகழ் மாலையாக உடலுக்குச் சூட்டியுள்ளார்.

உடல் பொறுமையே உருவானது,

எதையும் கேட்காதது,

எதையும் கேட்க விரும்பாதது,

வேலை செய்வதற்கு மட்டும் இசைவது,

தன்னை வலியுறுத்தாதது,

என்று உடலையும், குறிப்பாக தம்முடலையும் அன்னை குறிக்கின்றார். மனம் இதற்கு மாறானது. வீம்பாகப் பேசும், மறுத்துப் பேசும், செயல்படும் எதையும் சந்தேகப்படும், எதையும் கேள்வியுடன் எடுத்துக் கொள்ளும். உடலுக்குரிய இசைவு(docile submission) மனத்திற்கில்லை என்கிறார் அன்னை.

தொடரும்.....

....

ஜீவிய மணி

விஞ்ஞானம் என்பது ஒரு சிறிய சக்தி (inferior power).

Comments

01 யோக வாழ்க்கை விளக்கம்

01 யோக வாழ்க்கை விளக்கம் IV

Extra space after the main heading

646)  from நம்மால்  to ஆர்வமாகிறது. - sub-heading - bold letters

After the above sub-heading from ஆண்டவனை to பக்தியாகும். - separate line after two line space with italics & bold letters .

para no.5, line 7 - போவதுஎன்பதால்  போவது என்பதால்

      do.       do.   -  வழிநடத்தப்பட்டு - வழி நடத்தப்பட்டு

647) from ஆர்வம் to தீர்ந்துவிடும். - sub-heading - bold letters

After the above sub-heading from உடல் to சிறியது. - separate line after two line space with italics & bold letters .

647 ) - line 1 - பகுதியிருந்தாலும் - பகுதியிலிருந்தாலும்,

para 1, line 7 - mentalenergy - mental energy

para 3, line 7 - from பூரண யோகத்தின் to விவரிக்கின்றார். - separate paragraph

648) from தீர்ந்தபின் to சொல்லும். - sub-heading - bold letters

from ஆர்வம் to அனுமதிக்காது. - separate line after two line space with italics & bold letters .

para 3 - after line 1 - extra space.

para 4, line 4 - சத்து - சலித்து

para 4, after line 7 - 5 separate points are there - in bold letters.

After the 5 points, para continuation - after 1st line extra space is there.

 

 

 

 

 



book | by Dr. Radut