Skip to Content

11. Consultancy

"வளரும் அருள்"

உபரி என்பது வாழ்வில் குறைவு. எதிர்ப்பார்ப்பதைவிட அதிகமான பலன் உபரியாகும். இல்லாதவர்க்கு இல்லாததைக் கொடுக்க விழையும் மனம் உபரியானது, அதற்குரிய பரிசு அருள்.

அந்த அருளுக்கும் உபரியுண்டு.

உபரி வாழ்வில் குறைவு, அருள் உபரியாவது கேட்டறியாத ஒன்று. அருளுக்கும் உபரியுண்டு, அந்த உபரியும் தொடரும்.

மானேஜ்மெண்ட் முறைகளைக் கற்பது சிரமம். பின்பற்றுவது மிகச் சிரமம். ஜவுளிக்கடையில் ஒரு புடவை வாங்க 4 பெண்கள் போவார்கள். 7, 8 புடவைகளைப் பார்ப்பார்கள், சில சமயங்களில் வாங்குவார்கள், சில சமயங்களில் வாங்க மாட்டார்கள். பிரித்த புடவைகளை மடித்து மீண்டும் அலமாரியில் வைக்க நேரமாகும். அது ஒரு பெரிய வேலை.

கடன் கணக்கு என்றால் முகம் சுளிக்கும். பெரிய இடம் என்றால் அதிகமாகக் கவனிப்பார்கள். மேல்நாட்டு புது மானேஜ்மெண்ட் முறை,

  • பெரியது, சிறியது, வாங்குபவர், வாங்காதவர் அனைவருக்கும் ஒரே மாதிரியாகக் கவனிக்கவேண்டும்.

      அன்னை முறை,

  • ஒரே மாதிரியாகக் கவனிப்பது, உள்ளத்துள் உண்மையாக இருக்கவேண்டும்.

      இவற்றையெல்லாம் படிக்கலாம், நடக்காது".

      அமெரிக்காவுக்குச் சரி, இங்கே நடக்காது".

"செய்யலாம், கொஞ்ச நாளில் பயித்தியம் பிடித்துவிடும்" என்று விமர்சனம் எழும்.

ஒரு பெரிய ஸ்டோர், சேல்ஸ்மேன் அனைவரும் சூட், டையுடன் காட்சியளிப்பர். வருபவர்கள் பெரும்பாலோர் அப்படியே உடுத்தியிருப்பார்கள். இதுபோன்ற கடைகள் பிரம்மாண்டமாக இருக்கும். வீட்டில் பொழுது போகவில்லை என இதுபோன்ற கடைகளுக்கு வந்து மணிக்கணக்காகச் சுற்றிப் பார்ப்பவர்கள் உண்டு, சிறுவர்கள் வேடிக்கைக்காக வருவார்கள். $ 5 அல்லது $ 10 க்கு ரிப்பேர் செய்ய சிறு பொருள்களை வாங்குவார்கள், இதை விற்கும் சேல்ஸ்மேனுக்கு 1 மணிக்கு $ 20 முதல் $ 50 வரை சம்பளம்.

கடைக்கு இரண்டு சிறுவர்கள் வந்தார்கள். புதிய முறைப்படி இவர்களுக்கு ராஜோபசாரம் செய்தனர். 1 மணி நேரம் வியாபாரத்திற்குப் பின் $ 750க்கு speaker ஒலிபெருக்கி வாங்கினர். அது பெரிய வெற்றி. வியாபாரத்தைப் பற்றி விற்றவர், நல்ல வேளை $ 750 வியாபாரமாயிற்று, சிறுவர்களாயிற்றே என்று நினைத்தேன். ஆனால் அவர்களிடம் பேசும்பொழுது மனம் இதமாக இருந்தது என்றார்.

  • அடுத்த நாள் அதே இருவரும் வந்தனர். $ 750க்கு மீண்டும் வாங்கினர்.
  • இது கடையின் அனுபவத்தில்லாதது.
  • அடுத்த நாள் அவர்கள் மீண்டும் வந்தனர். மீண்டும் ஒரு ஸ்பீக்கர் $ 750க்கு வாங்கினர்.
  • தொழில் இல்லாத அனுபவம் பெற்றனர் கடைக்காரர்கள். அருள் செயல்படுவதும், மீண்டும் செயல்படுவதும், மீண்டும் ஒரு முறை செயல்படுவதும் அருளின் உபரியாகும்.

***



book | by Dr. Radut