Skip to Content

12. அன்னை இலக்கியம்

 

திருவுருமாற்றிய தெய்வீக அன்னை

S. அன்னபூரணி

"In her confirmed because transformed in her"

ஸ்ரீ சக்ர ராஜ நிலயா ஸ்ரீமத் திரிபுர சுந்தரி என்று லதா சகஸ்ரநாம பாராயணத்தை லதா சொல்லிமுடிக்கவும், அவள் சித்தி பர்வதம், லதா, லதா இன்னுமா பூஜை பண்ணுகிறாய்? போதும் சாமியை வேரோடு சாய்க்காதே. எனக்குக் கால் வலி பிராணன் போகிறது. அந்த அமிர்தாஞ்சனத்தை எடுத்துத் தடவி விட்டு சூடாக ஒரு கப் காபி கலந்து கொண்டு வா என்று ஓலமிட்டாள். குரல் கேட்ட மாத்திரத்தில் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தவள் இதோ வந்திட்டேன் சித்தி என்று உடனே பதில் குரல் கொடுத்துவிட்டு வேகமாகப் போய் அமிர்தாஞ்சனத்தை எடுத்து அவள் காலில் பரபரவென்று தேய்த்துவிட்டு, சமையலறையில் நுழைந்து நொடியில் ஆவி பறக்கும் காபியுடன் வெளியே வந்தாள்.

இந்த வயசு வந்த பெண்ணைக் கட்டிக் காக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து விட்டு இவளைப் பெத்த அந்த மகராசி பார்வதி போய்ச் சேர்ந்துவிட்டாள். இவள் அப்பனுக்கு இரண்டாந்தாரமாக வாக்கப்பட்டு என்ன சுகத்தைக் கண்டேன்? ஏதோ பேருக்கு இந்த வீடு இருக்கிறது. கொஞ்சம் பென்ஷனும் வருகிறது. எப்படியோ இவற்றை வைத்துக் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். விலை வாசியோ நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கிறது. இதில் இவளுக்கு எங்கே மாப்பிள்ளை தேடி எப்படிக் கல்யாணத்தைப் பண்ணுவது?

இதுவே ஒரு ஆண் குழந்தையாய் இருந்திருந்தால் இவள் அப்பா மாதிரி கோயில் குருக்களாகவாவது போயிருக்கலாம்" என்று வழக்கமான பல்லவியைப் பாடிக்கொண்டே காப்பியைக் குடித்துவிட்டு தம்ளரை தொப்பென்று வைத்தாள். லதா எதற்கும் முணுமுணுக்காமல், வாயைத் திறக்காமல் டம்ளரை எடுத்துப் போய்க் கழுவி வைத்துவிட்டுத் தோட்டத்துக்குப் போய் மிஞ்சியிருந்த பூக்களைப் பறித்து மாலையாக்கி அம்பாளுக்கு சாத்தலாம் என்று கிளம்பிப் பின்புறமாகப் போனாள்.

அன்று வந்திருந்த வாரப் பத்திரிகையை எடுத்து சுவாரஸ்யத்துடன் படிக்க ஆரம்பித்தாள் பர்வதம். போன வாரம் தொடர்கதை எங்கு முடிந்தது என்று யோசித்தவாறு பக்கத்தைப் புரட்டியவள் வாசல் நிழலாடுவதைக் கண்டு தலை நிமிர்ந்தாள்.

அட பங்கஜமா வா வா. உன்னைப் பார்த்து எத்தனை நாளாச்சு? எங்கே இவ்வளவு தூரம்?

என் புக்காத்து சொந்தக்காரர்கள் வீட்டில் சதாபிஷேகம். இங்கே திருக்கடையூர் கோவிலில் பண்ணினார்கள். அப்படியே உன்னையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்.

நீ எப்படி இருக்கே பர்வதம்?

பங்கஜத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் மலர்ந்திருந்த அவள் முகம் கூம்பியது. புலம்ப ஆரம்பித்தாள்.

அதையேன் கேட்கிறாய்? எங்கள் பிறந்த வீட்டு வறுமை நிலை காரணமாய் என்னை இவருக்கு இரண்டாம் தாரமாய்க் கட்டிக் கொடுத்துவிட்டார் என் அப்பா. கடைசியில் இவரும் இந்தப் பெண்ணை என் தலையில் கட்டிவிட்டுப் போய்ச் சேர்ந்துவிட்டார்.

எந்தப் பெண்ணை? என் மூத்தாள் பெண் லதாவைத்தான் சொல்கிறேன்.

ஏய் லதா, அங்கே என்ன பண்ணுகிறாய்?

சிட்டாய்ப் பறந்து வந்த பெண்ணின் முக லட்சணத்தைப் பார்த்து அசந்துவிட்டாள் பங்கஜம். அம்பாள் சித்தாடை கட்டி வந்த மாதிரி இருந்தாள். இந்த வறுமையிலும் என்ன ஒரு செழுமை!

நமஸ்கரிக்கிறேன் மாமி.

நன்றாக இரும்மா.

அவள் உள்ளே திரும்பிப் போனதும் பர்வதம், இந்தப் பெண் மிகவும் பதவிசா அடக்கமா இருக்கா. நீ ரொம்ப கொடுத்து வெச்சிருக்கே. நீ சொல்லாமலே நமஸ்காரம் பண்ணின பாங்கு ஒன்றே போதும்.

போதுமே என்ன இருந்து என்ன? அன விலாசம் இல்லையே."

அதிர்ஷ்டத்துக்கென்ன குறைச்சல்?" என்று கேட்டாள் பங்கஜம்.

நீதான் மெச்சிக் கொள்ளனும். பிறந்த உடனேயே அம்மாவை விழுங்கிவிட்டாள். இப்போது அப்பாவும் இல்லை.

அதற்கு அந்தக் குழந்தை என்ன செய்வாள் பாவம்.

நீ ரொம்ப பரிஞ்சு பேசாதே. என் நிலைமையைக் கொஞ்சம் யோசனை பண்ணிப் பார். நான் இவரைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு என்ன சுகத்தைக் கண்டேன்? இந்த வீடு இருக்கிறது. பென்ஷன் வருகிறது. இவள் தையல் தைத்துக் கொடுத்து சம்பாதிக்கிறாள்.

பின்னே என்ன கவலை?

கூட ஏதாவது வருமானம் வந்தால் சேமித்து வைத்து அந்த வருவாயில் ஏதாவது நகை நட்டு வாங்கி இவள் கல்யாணத்தை நடத்தலாம்.

நான் ஒரு ஐடியா சொல்கிறேன் கேள். உங்கள் இருவருக்கும் இவ்வளவு பெரிய வீடு எதுக்கு?

அப்படி என்ன பெரிய வீடு? ஒரு ஹால், ஒரு கிச்சன் இரண்டு ரூம் அவ்வளவுதான்.

ஒரு ரூமைத் தடுத்து யாராவது பிரம்மசாரிக்கு வாடகைக்கு விட்டுவிடேன்.

ஒரு வயசு வந்த பெண்ணை வைத்துக் கொண்டு இந்த மாதிரி எல்லாம் ரிஸ்க் எடுக்கத் தயாராயில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு பையன் பாங்க்கில் அதிகாரியாக இருக்கிறான். அவனுக்கு வாடகைக்கு ஒரு இடம் வேண்டும். அது தவிர அவனுக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கொள்ளாது. அதனால் வீட்டுச் சாப்பாடு போட்டுத் தங்க இடமும் தேவை. அந்தப் பையனுக்கு நான் கியாரண்டி கொடுக்கிறேன். உனக்குக் கணிசமான வருமானமும் வரும்.

பணம் வருமென்றதும் பர்வதத்திற்கு சபலம் ஏற்பட்டது. ஒரு வழியாகச் சம்மதித்துவிட்டாள்.

லதா உனக்குப் பூ தொடுக்கத் தெரியுமா?

என்ன இப்படிக் கேட்டுவிட்டாய்? குருக்கள் வீட்டுப் பெண்ணுக்குப் பூ தொடுக்கத் தெரியாதா? என்று இடைமறித்தாள் பர்வதம்.

ஒரு உதவி செய்யேன். நான் தங்கியிருக்கும் வீட்டில் இன்று ஒரு விசேஷ தியானம். அவர்கள் பாண்டிச்சேரி அன்னையின் பக்தர்கள். அவர்களுக்குப் பூக்கட்டித் தர உதவிக்கு ஆள் தேவையாம், நீ கொஞ்சம் வந்து கட்டிக் கொடுக்கிறாயா?

வேகமாகத் தலையாட்டி சம்மதித்தாள் லதா.

ஓ வருகிறேனே, எனக்குப் பூக்கட்டுவது என்றால் ரொம்பப் பிடிக்கும்.

அதிகம் வெளியே சென்று பழக்கமில்லாத லதா முதன் முதலில் வெளியே ஒரு பூஜை விஷயமாய் போவதைக் குறித்து அளவில்லாத மகிழ்ச்சியுற்றாள்.

அந்த வீட்டுக்குள்ளே நுழையுமுன்பே உள்ளிருந்து வந்த மலர்களின் வாசனையும் ஊதுபத்தி வாசனையும் கலந்த ஒரு வித நறுமணம் அவளை பரவசப்படுத்தியது. உள்ளே நுழைந்ததும் அங்கே வைத்திருந்த அன்னையின் படத்தைப் பார்த்தவள் ஸ்தம்பித்துப் போய்விட்டாள். படத்தின் மீது வைத்த கண்ணை எடுக்க முடியாமல் சிலையாக நின்றாள். அன்னையின் கண்களிருந்து வந்த கருணைப் பிரவாகம் அவளைக் கட்டிப் போட்டது.

இந்தா இந்த துளசியை மாலையாகக் கட்டு. ஏம்மா உனக்கு பக்தி உண்டா?

ஆமாம் அம்பாள் மேலே எனக்கு மிகவும் பக்தி.

துளசியை அன்னைக்குச் சமர்ப்பித்தால் பக்தி பெருகும்.

லதா மாலை கட்டுவதும் அன்னை படத்தைத் திரும்பிப் பார்ப்பதுமாய் இருந்தாள். அந்தப் படத்திருந்த ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தி அவளை வசீகரித்தது. வாழ்விலேயே முதன் முதலாகச் சோகம் நீங்கி சொல்லொணாத நிறைவு ஏற்பட்டது அவளுக்கு. பர்வதத்திற்கு வாக்களித்தபடி தியானம் முடிந்ததும் அவளை வீட்டுக்குத் திரும்ப அழைத்துப் போய்விட்டாள் பங்கஜம்.

போகும் வழியில் லதா பங்கஜத்தைக் கேட்டாள்.

மாமி எனக்கு ஒரு சிறு உதவி செய்வீர்களா?

என்னம்மா?

நீங்கள் சித்தியிடம் சொல்லி வாரம் ஒரு முறையாவது இந்த வீட்டுக்கு வந்து பூக்கட்டித் தர அனுமதி வாங்கித் தரணும்.

ஏம்மா உங்க சித்தி நீ சொன்னால் கேட்க மாட்டாளா?

சித்தி ரொம்ப நல்லவர்தான் மாமி. ஏதோ அப்பப்ப கொஞ்சம் கோபம் வரும். கோபம் இருக்கும் இடத்திலேதான் குணம் இருக்கும். நீங்க அவங்க கோணத்தில் யோசனை செய்து பாருங்களேன். அப்பா இல்லையென்றால் என்ன பிடிப்பு இருக்க முடியும்? இப்பொழுது அவர்களும் இல்லையென்றால் என் நிலைமை என்ன ஆயிருக்கும்? நான் யாருமில்லாத அனாதையாக அல்லவோ இருந்திருப்பேன்.

சித்தியை கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் பேசியதில் பங்கஜத்தின் மதிப்பில் அவள் மேலும் உயர்ந்தாள்.

கவலைப்படாதே நான் பேசுகிற விதமாய் பேசி உனக்கு அனுமதி வாங்கித் தரேன்.

லதாவுக்குச் சந்தோஷம் தாளவில்லை.

பர்வதம், லதா நன்றாகப் பூக்கட்டுகிறாள். ஆகவே வாராவாரம் நடக்கும் தியானத்தின் போது பூக்கட்டித் தர அவளை அனுப்பித்தர வேண்டும் என்று அவர்கள் வீட்டில் கேட்டார்கள். அதற்கு நான் என் தோழிதான் அவள் சித்தி. அவள் அதற்குச் சம்மதிக்க மாட்டாள். இவள் இங்கு வந்து போகும்வரை அவள் எப்படித் தனியாக இருப்பாள்? என்று சொல்லிவிட்டேன்.

அதெல்லாம் ஒன்றுமில்லை. இவள்தான் எனக்குப் பெரிய துணையா? எனக்குத் தனியாக இருப்பது என்ன கஷ்டமா? வீட்டிலே சும்மா இருப்பதிற்குப் பதிலாக அட்லீஸ்ட் இந்த சேவையாவது செய்து விட்டு வரட்டும்.

லதாவிற்குப் பங்கஜத்தின் பேசும் திறமையைக் கண்டு உள்ளுக்குள் ஒரே சிரிப்பு. கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டாள். தன் சித்தியை இந்த மாமி எப்படி எடை போட்டு வைத்திருக்கிறாள்? எப்படி சாமர்த்தியமாகப் பேசினால் இவள் சம்மதத்தை வாங்கலாம் என்று நன்கு தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாள். பங்கஜத்திற்குக் கண்ணாலேயே தன் நன்றியைத் தெரிவித்தாள்.

பங்கஜம் ஊருக்குப் போய் ஒரு மாதம் ஆகிவிட்டது. வாரா வாரம் தவறாமல் அன்னை தியானத்திற்குப் போய் வந்து கொண்டிருந்தாள். அந்த ஞாயிற்றுக்கிழமையை நினைத்துக் கொண்டே மற்ற நாட்களை ஓட்டி விடுவாள்.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் தலைக்குக் குளித்துவிட்டு ஈரத்தலையை நுனி முடிச்சிட்டு அபிராமி அந்தாதியை முணு-முணுத்துக் கொண்டே கோலம் போட்டு விளக்கேற்றிக் கொண்டிருந்த போது திடீரென்று வாசலிருந்து ஓர் ஆண் குரல் கேட்டது. வெளியில் வந்து எட்டிப் பார்த்தவள் முன்பின் தெரியாத ஒரு வாலிபன் கம்பீரமான தோற்றத்துடன் நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் சற்றுத் தடுமாறி நீங்க யாரு? என்ன வேணும்?என்றாள். பர்வதம்மாள் வீடு இதுதானே?

அவனை உள்ளே அழைக்கலாமா கூடாதா, சித்தி என்ன சொல்வாளோ என்று யோசித்தவாறு உள்ளே ஓடிப்போய் சித்தி யாரோ வாசலில் வந்திருக்கிறார்கள் என்றாள். யார் அது? என்று கேட்டபடி வெளியே வந்தாள். பங்கஜம் மாமி என்னை அனுப்பி வைத்தார்கள். என் பெயர் சங்கர்.

ஓ நீதான் பாங்கில் வேலை செய்யும் அந்த பிள்ளையாண்டானா? வா வா உள்ளே வா.

உள்ளே நுழைந்தவன் தான் கொண்டு வந்திருந்த சூட்கேஸை ஓர் ஓரமாக வைத்துவிட்டு கையிருந்த கூடையிருந்து வாங்கி வந்திருந்த பழம், பூ, வெற்றிலை பாக்கு எல்லாவற்றையும் எடுத்தான். லதா போய் ஒரு தட்டு கொண்டு வா என்றாள் பர்வதம். தட்டில் எல்லாவற்றையும் எடுத்து வைத்தான். விளக்கேற்றவும் அம்பாளுக்குப் பூ வரவும் நல்ல சகுனமாகப் பட்டது லதாவுக்கு. இதோ பாருப்பா சங்கர் சுற்றி வளைத்துப் பேச எனக்கு விருப்பமில்லை. இதோ இந்த அறைதான் உனக்கு. இங்கே டேபிள் பேன்தான் இருக்கிறது. காலையில் காபி, டிபன். மத்தியானம் சாப்பாடு. இரவு சாப்பாடு. வாடகையும் சாப்பாட்டுச் செலவும் சேர்ந்து ரூ. 1500/-மாதா மாதம் நீ கொடுத்துவிட வேண்டும், என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசினாள்.

எனக்குச் சம்மதம்தான் என்று கொஞ்சமும் முகம் சுளிக்காமல் சங்கர் சொன்னது பர்வதத்திற்கு ஆச்சரியமாயிருந்தது.

இரவு 9 மணிக்குள் வீட்டுக்குள் வந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வாசல் கேட்டைப் பூட்டிவிடுவேன்.

சரி -பர்வதத்திற்குச் சங்கரைப் பிடித்துவிட்டது.

சங்கர் வந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. வீட்டில் அமைதி நிலவியது. சங்கர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தான். பர்வதத்திற்கும் இந்த அதிகப்படி வருமானம் தெம்பைக் கொடுத்தது. லதாவிற்கும் வாராவாரம் தியானத்திற்குப் போவதில் மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

பங்கஜத்திடமிருந்து திடீரென்று ஒரு நாள் கடிதம் வந்தது. நான் முக்கியமான ஒரு விஷயமாக அங்கு வருகிறேன். ஓர் ஆனந்த அதிர்ச்சிக்கு நீ தயாராக இரு.

பர்வதத்திற்கு ஒன்றும் புரியவில்லை. என்னவாக இருக்கும்? பங்கஜம் வந்து இறங்கினாள். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு மெல்ல விஷயத்திற்கு வந்தாள்.

லதாவுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு. கல்யாணத்திற்கு நீ சம்மதிக்கிறாயா?

தூக்கிவாரிப் போட்டது பர்வதத்திற்கு.

கல்யாணமா? பணத்துக்கு நான் எங்கே போவேன்? கையில் கால் காசு கிடையாது.

நீ ஒன்றும் செலவு செய்யவேண்டாம். கட்டிய புடவையோடு லதாவை அனுப்பி வைத்தால் போதும்.

என்னால் நம்ப முடியவில்லை. யார் பையன்? என்ன வேலை செய்கிறான்?

பையன் வங்கியில் அதிகாரியாக இருக்கிறான். பாங்க் ஆபிஸரா? இதிலே எனக்கு சந்தேகமா இருக்கு. பாங்க் ஆபிஸருக்குப் பெண்ணா கிடைக்காது? போயும் போயும் இந்த குருக்கள் வீட்டுப் பெண்ணை ஏன் கல்யாணம் செய்துக்கணும்?

காரணம் இருக்கு. லதாவிடம் பணம், அந்தஸ்து இல்லையே தவிர அழகு, அடக்கம், திறமை, பொறுமை எல்லாம் இருக்கிறது. அந்தக் காலத்திலெல்லாம் நல்ல மாப்பிள்ளை கிடைப்பதுதான் கஷ்டம். இப்ப காலம் மாறிவிட்டது. நல்ல பெண் கிடைப்பது கூடக் கஷ்டம். கணவனுக்கு ஒத்துப்போய் நன்கு வாய்க்கு ருசியாக சமைக்கக் கூடிய பெண் கிடைப்பது அருமை.

சரி போகட்டும். லதாவின் திறமை, அழகு எல்லாம் அந்தப் பையனுக்கு எப்படித் தெரியும்? அப்படியானால் ஏற்கனவே தெரிந்த பையனாகத்தானிருக்கும்.

ஆமாம் சரியாக யூகித்துவிட்டாய். நம்ம சங்கர்தான்.

சங்கரா? குரலை உயர்த்திக் கத்தினாள் பர்வதம்.

பங்கஜமே ஒரு கணம் ஆடிப்போய்விட்டாள்.

ஏய் லதா இங்கே வா. கத்தல் கேட்டுப் பதறிப் போய் ஓடி வந்தாள்.

எத்தனை நாட்களாக நடக்கிறது இந்த நாடகம்? கடைசியில் நான் பயந்த மாதிரியே ஆகிவிட்டது. இதற்குத்தான் வயசுப் பெண்கள் இருக்குமிடத்தில் பிரம்மச்சாரிப் பையனாகக் குடி வைக்கக் கூடாது என்று சொன்னேன்.

லதா விதிர்விதிர்த்துப் போய் என்ன சித்தி சொல்கிறீர்கள்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்றாள். பருந்தைக் கண்ட கோழிக்குஞ்சுபோல் அவள் உடல் நடுங்கியது. பர்வதம் இருக்கும் ஆவேச நிலையைப் பார்த்தால் எங்கே அவள் லதாவை அடித்துவிடுவாளோ என்று பயமாக இருந்தது. அவளைச் சமாதானப்படுத்தி இதோ பார் பர்வதம், லதா பாவம் வெகுளி. அவளுக்கு இந்த விஷயமே ஒன்றும் தெரியாது. சங்கர் இது விஷயமாக எனக்கு எழுதிய கடிதத்தைப் படிக்கின்றேன், கேள். எனக்கு இதுவரை திருமணம் வேண்டாமென்று சொல்லிக் கொண்டிருந்தேன். பர்வதம் மாமியின் பெண் லதா மாதிரி ஒரு பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்ளலாமென்று தோன்றுகிறது. அவர்கள் சம்மதித்தால் சரி. இல்லாவிட்டாலும் பரவாயில்லை. சிம்பிளாகக் கல்யாணத்தை ஒரு கோவிலில் வைத்து நடத்தி தாலிகட்டினôலும் போதும். கல்யாணத்திற்குப் பிறகு பர்வதம் மாமியை வைத்துக் காப்பாற்றும் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். நானே நேரில் போய் பெண் கேட்டால் மரியாதையாக இருக்காது. என்னைப் பொறுத்தவரை எனக்கு இருக்கும் ஒரே தூரத்து உறவினர் நீங்கள்தான். ஆகவே நீங்கள் என் சார்பாக வந்து பேச வேண்டும். மாமி, லதா இருவரும் இதற்கு சம்மதித்தால்தான் மேற்கொண்டு திருமணப் பேச்சைத் தொடரலாம். இவர்கள் இருவரில் யாராவது ஒருவருக்கு விருப்பமில்லாவிட்டாலும் இதைப் பற்றிப் பேச வேண்டாம். அதற்காக நான் கோபித்துக் கொள்ள மாட்டேன் .வழக்கம்போல் paying guestஆகத் தொடர்ந்து அவர்கள் வீட்டில் இருப்பேன். தொந்தரவுக்கு மன்னிக்கவும்."

தொடரும்......

 

Comments

12. அன்னை இலக்கியம்Between

12. அன்னை இலக்கியம்

Between themain heading and sub-heading extra space is there.

The word லலிதா is as லதா throughout the full article. - The albhabet 'லி' is missing.

para 2,  after line 7 - extra space is there.

para 3, line 3 - வாசல் - வாசலில்

para 16 - அன - 'அ' ன

para 35, line 5 - கண்களிருந்து - கண்களிலிருந்து

para 39, line 2 - படத்திருந்த - படத்திலிருந்த

para 53, line 3 - வாசலிருந்து - வாசலிலிருந்து

para 56, line 2 - கையிலிருந்த கூடையிலிருந்து - கையிலிருந்த கூடையிலிருந்து

  do.       do. 5 - from இதோ to பேசினாள். - separate para

  do. 59 - சரி -பர்வதத்திற்குச் - சரி - பர்வதத்திற்குச்

para 74 - from கத்தல் to வந்தாள். separate line or para

 do.  77 - தாலிகட்டினôலும் -  தாலிகட்டினôலும்

  do.     line 18 - paying guestஆகத் - paying guest ஆகத்

 



book | by Dr. Radut