Skip to Content

03. ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

கர்மயோகி

 

IX.The Pure Existent 

9. சத் புருஷன்

We cannot think out the Absolute           

பிரம்மத்தை மனதால் சிந்திக்க முடியாது.

Nor can we describe it

அதை விவரிப்பதும் இயலாத காரியம்

It is not our business.

அது நம் கடமையில்லை

Therefore we must accept the double fact.

எனவே இரண்டு உண்மைகளையும் நாம் ஏற்க வேண்டும்.

We must accept stability and movement; unity and multitude.

சலனம், சலனமற்ற நிலை, ஐக்கியம், பல ஆகிய நான்கையும் நாம் ஏற்க வேண்டும்

We thus accept Shiva as well as Kali.

சிவனையும், காளியையும் ஏற்க வேண்டும்

We must know Time in terms of Timelessness.

காலத்தை, அதைக் கடந்த நிலையால் அறிய வேண்டும்.

We must know Space in terms of Spacelessness

இடத்தை, அதைக் கடந்த நிலையால் அறிய வேண்டும்.

The Existence is Timeless and Spaceless.

சத் புருஷன் காலத்தையும், இடத்தையும் கடந்தவன்.

The Existence is one and stable.

சத் புருஷன் ஒன்று, நிலையானது

Measure and measurelessness are inapplicable to Existence

சத் புருஷன் அளவுக்குட்பட்டவனில்லை

Pure Reason described pure Existence, Sat.

சத் புருஷனைப் பகுத்தறிவு விவரிக்கிறது.

Intuition and experience also did so.

ஞானமும், அனுபவமும் விவரிக்கின்றன

What do they have to say about Force, Movement, Shakti?

சலனம், சக்தியைப் பற்றி அவை என்ன கூறுகின்றன?

 

.               P. No. 79

 Para No. 15

We have a first question to ask

நாம் கேட்க வேண்டிய முதற்கேள்வி ஒன்றுண்டு.

Whether Force is simply a force?        

சக்தி என்பது அசைவைத் தரும் சக்தியா?

Is it simple, unintelligent energy of movement?

எளிய, அறிவற்ற சக்தி அசைவைத் தருகிறதா?

A consciousness emerges out of it.

அதிலிருந்து ஜீவியம் எழுகிறது

It does so in our own material world.

நாம் வாழும் ஜடஉலகில் ஜீவியம் எழுகிறது

Is that consciousness a phenomenal result?

அந்த ஜீவியம் நாமறிந்த நிகழ்ச்சிகளின் பாற்பட்டதா?

Or is it its own true secret nature?

அல்லது பிரகிருதியின் இரகஸ்யம் ஜீவியத்தில் வெளிப்படுகிறதா?

Vedanta says Force is simply Prakriti

பிரகிருதியை சக்தி என வேதாந்தம் கூறுகிறது

Prakriti is only a movement of action and process

பிரகிருதி செயலின் அசைவு.

Is Prakriti really a power of Chit?

பிரகிருதி சித்தினுடைய சக்தியா?

Does Chit have a nature of creative self-conscience?

சித்திற்குத் தன்னையறியும் சிருஷ்டித்திறனுண்டா?

All the rest hinges on this essential problem.

இதற்கு வரும் பதிலைப் பொருத்ததே மற்ற அனைத்தும்.

The end of Chapter IX

9-ம் அத்தியாயம் முற்றும்

 

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

Life Divine நூலில் மேலே போகப் போக கருத்தின் கம்பீரத்தை பகவான் உயர்த்துகிறார். ஆரம்பத்தில் பகுத்தறிவுக்கு விளக்கம் அளிக்கிறார். அடுத்தாற்போல் அறிவு ஞானமாவதைக் காட்டுகிறார். பின் பகுதியில் பரம்பொருளை விளக்குகிறார். அறிவு பரம்பொருளை எட்ட முடியாது. போகப் போக நூல் கருத்தின் நிலையை உயர்த்துவதால் வாசகரும் தம் அறிவு நிலையை உயர்த்த வேண்டும். இல்லை எனில் நூல் விளங்காது.

கருவியை உயர்த்தும் கருத்து.

***** 

ஸ்ரீ அரவிந்த சுடர்

எல்லாச் செயல்களிலும், அசைவுகளிலும் வாழ்வின் எதிரொலியைப் பார்க்கலாம். வேலைக்குரிய நேரம், நிகழ்ச்சிகள் தொடர், அவற்றுள் ஒவ்வொன்றும் பூர்த்தியாவது, சக்தி திறன், பலன், செயல் நடக்கும் நிலைகள், தேவைப்படும் இடம், உணர்வு, சூட்சுமங்கள், சூழல், அதற்குரிய அறிவு, காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் திறன் ஆகியவற்றில் எதிரொலியைக் காணலாம். காரியத்தை ஆரம்பிக்க தேவைப்படும் நேரம் நிபந்தனைகளை நிர்ணயிக்கும்.



book | by Dr. Radut