Skip to Content

08. Agenda

Vol I P. 69  Three images of total Self-giving to the Divine: 
May your will be done, not mine -- prostration  As you will, as you will -- open from head to foot. 
I am yours for eternity -- to nestle in His arms.

அர்ப்பணத்திற்குரிய ஆன்மிக உருவகங்கள் மூன்று 
அன்னை விருப்பம் நிறைவேறட்டும்,  என்னுடையது அல்ல --   சாஷ்டாங்க நமஸ்காரம்.
திருவுள்ளம் பலிக்கட்டும்,  திருவுள்ளமே பலிக்கட்டும் -  தலை முதல் கால்வரை ஜீவன் மலர்வது.
ஏழேழ் பிறவிக்கும் உனக்கேயுடையவன் -- தெய்வீகக் கரங்களில் குழந்தையாய் தவழ்வது

உரைநடையை விடக் காவியம் மனத்தைத் தொடும். ஒரு மந்திரத்தை உச்சரிப்பதை விட அதை ஓர் உருவமாக்கினால் அதற்கு மனோசக்தியுண்டு. அகந்தை அழிய அன்னை 3 மந்திரங்களையும், அவற்றிற்குரிய உருவகங்களையும் மேலே கூறுகிறார்.

சாதாரண மனிதனுக்கு உறுதியிருப்பதில்லை, சிறப்பானவர்க்கே மன உறுதியுண்டு. அது போன்ற சிறப்பான மன உறுதி மனிதன் முழுவதையும் பிரதிபலித்தால், அவ்வுறுதி மனிதனுடைய முழுப் பிரதிநிதி, அகந்தையின் பிரதிநிதி. அவன் இறைவனுக்கு சரணடைய உதவும் மந்திரம்,

 ‘அன்னை விருப்பம் நிறைவேறட்டும்' என்பது.

மந்திரம் சக்தி வாய்ந்தது. செயல்படும் பலன் தரும். ஆனால் மனித சுபாவம் அதனினும் வலுவுடையது. அதனால் மனிதனே என்னுடைய விருப்பம் நிறைவேற வேண்டாம்" என்று கூறுவது அன்னை விருப்பம் நிறைவேற உதவும். இவற்றிற்குத் துணையாக மனதால் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதாய் கற்பனை செய்ய வேண்டும் என்கிறார் அன்னை.

உருவகத்தின் சக்தி

  • எதிரிக்கும் நமக்கும் இடையே அன்னையை நிறுத்துவது.
  • வலிக்கும் இடத்தை அன்னை வருடிக் கொடுப்பதாக நினைப்பது,

போன்ற பல உருவகங்களை அன்னை கூறியுள்ளார். மந்திரம் சொல்லுடைய சக்தி, உருவகம். கற்பனையின் சக்தி imagination, கற்பனை சொல்லைவிட சக்தி வாய்ந்தது. பேரிலக்கியங்கள் கற்பனையில் உருவானவை.

நம் மனம் குறுக்கிடும். குறுக்கிடாமலிருப்பது அடுத்த உயர்ந்த கட்டம். குறுக்கிடாமலிருக்க receptivity அன்னையை ஏற்கும் திறன் அதிகமாக இருக்கவேண்டும். திருவுள்ளம் பலிக்கட்டும் எனத் திரும்பத் திரும்பச் சொல்வது அடுத்த முறை. இதற்குரிய உருவகம் நம் தலை முதல் கால்வரை இரண்டாகப் பிரிவதுபோல் நினைப்பது. ஜீவன் தன்னைத் திறந்து அருளைப் பெறுவதைக் குறிக்கும்.

எனக்கு என்று ஓர் உறுதி (will) இல்லை என்பவன் இறைவனின் திருவுள்ளத்தை நாடுகிறான். அடுத்த கட்டத்தில் உறுதி, ஞானம் ஆகியவற்றைக் கடந்து ஜீவன் முழுவதையும் சமர்ப்பணம் செய்யும் நிலை. நான் முழுமையாக உனக்குரியவன் என்பது அடுத்த மந்திரம். அதற்குரிய உருவகம் குழந்தையாய் அன்னையின் குவிந்த கைகளில் தவழுவதாகும். முறையாகச் செய்தால் இவை பலன் தரும் என்கிறார் அன்னை. முறை என்பது மந்திரத்தை உச்சரிக்கும் முன் ஜீவனின் ஆழத்தைத் தொடுவது, அர்ப்பணத்தை ஜீவன் முழுவதையும் தழுவச் செய்வது.

****

 



book | by Dr. Radut