Skip to Content

12.பொறுப்பு

பொறுப்பு

அன்னையை நாடி வருபவர்கள் பலர். அவர்கள் உலகிலுள்ள எல்லா வகையினராகவுமிருப்பார்கள். மனிதத்தன்மையின் சிறப்பான உதாரணமானவர் அன்னையை நாடி வந்தால், ஒரு துளி மனிதத்தன்மையுமில்லாதவரும் அவருடன் வருவார்கள். அப்படி வந்தவர்களில் சில வகையினர்:

- பிச்சைக்காரன் சாப்பிடும்பொழுது அதில் மண்ணை வாரிப் போட்ட சிறுவன்.

-தான் செய்யாத குற்றத்தைப் பிறர் தூண்டியதால் செய்ய ஆரம்பித்து, விடமுடியாது தவிப்பவன்.

-ஆயுள்வரை அனுபவிக்க வேண்டியவற்றை அரை க்ஷணத்தில் முடிவு செய்து ஏற்றவன்.

-இழந்த வேலையை வலிய வந்து பெற்றுக் கொடுத்தவருக்கு நன்றியும் சொல்ல நினைப்பில்லாதவன்.

-பெரிய, முழுச்சுயநலமிகட்கு நெடுங்காலம் சேவை செய்து, அவர்களே விலகும் வரை விலக முடியாதவன்.

-அடுத்தவர் பொய் சொல்வார் என அறிய முடியாத பிறவி.

-தன் மனதிலுள்ளதை செயல்படுத்தும் தம்பதியைத் தவறு என நினைப்பவன்.

-சுயநலமி கழுத்தை அறுப்பான், துரோகம் செய்வான், அப்படிச் செய்யப் பிரியப்படுவான், பெருமையும் படுவான்என அறிய முடியாதவன்.

-பிள்ளை என்பதால் தாயார் துரோகம் செய்யமாட்டாள் என நம்பும் மடைமையுடையவன்.

-கேட்காமல் உதவி செய்யப் போனால் உள்ளதும் போகும் என்று அனுபவத்தாலும் அறிய முடியாதவன்.

-பிறரையும், தன்னையும், சூட்சுமத்தையும், அன்னையையும் அறிய முடியாத அப்பாவி.

****


 



book | by Dr. Radut