Skip to Content

03.அஜெண்டா

Agenda

'Om Namo Bhagavateh' has a power to calm down everything. Still it is for the outer being.

"ஓம் நமோ பகவதே' எந்த கொந்தளிப்பையும் அடக்கவல்ல மந்திரம். இருப்பினும் அதுவும் புறத்திற்குரியதே.

. இந்து முஸ்லீம் கலவரம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற சமயங்களில் போலீஸால் அடக்க முடியாத கலவரத்தை இராணுவத்தால் அடக்க முடிகிறது. இராணுவத்தாலும் அடக்க முடியாத நேரம் உண்டு.

. கிராமத்தில் இரு கட்சியாகப் பிரிந்து பல மாதங்கள் சண்டை நடந்து,எல்லா ஆண்களும் வெளியேறி, போலீஸ் முகாமிட்டது. பழையபடி வாழ்வை நடத்தப் பல மாதங்களாயின.

இது போன்ற நேரங்களில் "ஓம் நமோ பகவதே' என்ற மந்திரத்தை உச்சரித்தால் கலவரம் அடங்குவதைக் காணலாம்.

. 5 பிள்ளைகள் பெற்றபின் கோடீஸ்வரக் கணவன் குடும்பத்தை விட்டு வெளியேறி 3 பிள்ளைகள் உள்ள ஒருத்தியை பகிரங்கமாக மணந்தால்,வீடு எப்படியிருக்கும்? வீட்டு மனிதர்கள் மனத்தில் பெரும் புயல் வீசும்.அதையும் இம்மந்திரம் அடக்க வல்லது.

. அன்னை இம்மந்திரத்தை விளக்கிக் கூறியது:

ஓம் : இறைவனை நான் இறைஞ்சுகிறேன்.

நமோ : நான் அவனுக்குப் பணிகிறேன்.

பகவதே : என்னை இறைவனாக்குங்கள்.

. வசதியிருந்து மற்ற காரணங்களால் வாழ்க்கை தப்ப முடியாததுபோல் அழியும் நேரத்தைக் கருவாக வைத்து, "புயலும் படகும்" என ஒரு கதை உள்ளது.

. வாழ்வின் ஓரத்திற்கே ஓடிய நேரம்;

. எதைத் தெய்வமாக வணங்கினோமோ அதுவே எதிரியான சமயம்;

. எந்த அஸ்திவாரத்தைக் கட்டி வளர்த்தோமோ, அதுவே அடிவாங்கும் நேரம்;

. எந்த ஸ்தாபனத்திற்கு வாழ்க்கையை அர்ப்பணித்தோமோ அதுவே மாறி வாளாகப் போர் தொடுத்தால்,மனிதன் துவண்டு, கருகி, வாடி, வதங்கி, இருந்த இடம் தெரியாமற் போய்விடுவான். அந்த நேரம் "ஓம் நமோ பகவதே" அமைதி தரும்.

'Mother' என்ற மந்திரம் அமைதியை அற்புதமாக்கி, அற்புதத்தில்

ஆச்சரியத்தை அதிசயமாக எழுப்பி, மனத்தை மகிழ்விக்கும்.

 

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அளவுகடந்த சுதந்திரம், கனவிலும் கருதாத உரிமை, அளவுக்கு மீறிய செல்வம் போன்றவற்றை அவற்றிற்கு உரிமை இல்லாதவனுக்கு விரும்பி, இனிமையாக, வருந்திக் கொடுத்தால், அவை அவனுடைய பிதிரார்ஜிதம், பிறப்புரிமை, சொந்தத் தனியுரிமை, பிறர் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளனர் போன்ற உணர்வோடு பெற்றுக்கொள்கிறான். இவ்வகையில் அவன் "அனந்தனை' வெளிப்படுத்துகிறான். பிறர் பொருளை "அளவிறந்து' அபகரிக்கும் குணம் அது.

இல்லாத உண்மையைக் கண்டால் இல்லாத அதிகாரம் செய்வான்.


 


 


 


 

 


 



book | by Dr. Radut