Skip to Content

06.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                                       (சென்ற இதழின் தொடர்ச்சி....)                  கர்மயோகி

XIV. The Supermind- As Creator

14. சத்தியஜீவியம் - சிருஷ்டிகர்த்தா

There is the process of differentiation.

இது மாறுபாட்டின் வகை.

It is by the Real-Idea.

இது முழு-எண்ணம்.

It is creative of the universe.

இது பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பது.

It puts forward three things.

அது மூன்றை வெளிக்கொண்டு வருகிறது.

They are principles, forces and forms.

தத்துவம், சக்தி, ரூபம் என அவை மூன்று.

They contain and front.

அவை உள்ளடங்கி, வெளிப்படுகிறது.

The comprehending consciousness contains them.

காலம் கடந்த சத்தியஜீவியம் அவற்றை உள்ளடக்குகிறது.

It contains all the rest of existence within them.

சிருஷ்டியில் மற்ற அனைத்தையும் தன்னுட் கொள்கிறது.

It fronts the apprehending consciousness.

புறமான ஜீவியத்தை அது முன்னிறுத்துகிறது.

All the rest of existence is implicit behind them.

சிருஷ்டியில் மற்றவையெல்லாம் அதன்பின் மறைவாக இருக்கின்றன.

Therefore all is in each.

எனவே அனைத்தும் ஒன்றில் உள்ளது.

And each is in all.

ஒன்று அனைத்திலும் உள்ளது.

These are the seeds of things.

அவை வித்து.

It implies in itself all the infinity.

அனந்தம் முழுவதும் அதனுள் உள்ளது.

It is an infinity of all possibilities.

எல்லாச் சந்தர்ப்பங்களும் நிறைந்த அனந்தம் அது.

But it is kept to one law of process.

என்றாலும், அது ஒரு வழியில் மட்டும் நடக்கும்.

It is kept to one result by the will.

அது ஒரு பலனை மட்டும் வெளிப்படுத்தும்.

It can be said otherwise.

அதை வேறு வகையாகவும் கூறலாம்.

The Conscious-Being has the knowledge-force.

சத்-புருஷனுக்கு சித் சக்தியுண்டு.

He is maintaining himself.

அவன் தன்னை நடத்துகிறான்.

He is sure of the Idea in himself.

தன்னுள் உள்ள எண்ணத்தை அவன் அறிவான்.

He predetermines the result.

முடிவை அவன் முன்கூட்டி நிர்ணயிக்கிறான்.

He does so by his own forms and movements.

தன் ரூபங்களாலும், சலனங்களாலும் அதை அவன் செய்கிறான்.

The seed is the Truth of its own being.

விதை தன் ஜீவனின் சத்தியம்.

This Self-Existence sees the seed in itself.

சத் வித்தைத் தன்னுள் காண்கிறது.

It has a resultant.

அதற்கு ஒரு முடிவுண்டு.

It is a seed of self-vision.

சுயதரிசன வித்து அது.

It is the Truth of self-action.

சுயசெயலுக்குரிய சத்தியம் அது.

It is the natural law of self-development.

சுயவளர்ச்சிக்குரிய இயல்பான சட்டம் அது.

It is the law of formation and functioning.

ரூபம் பெறுவதும், நடைபெறுவதும் அச்சட்டத்திற்குட்படும்.

It follows inevitably upon the Self-vision.

சுயதரிசனத்தால் அது தவிர்க்க முடியாதபடி அது நடக்கிறது.

It keeps to the process.

முறையை அது காப்பாற்றுகிறது.

It is involved in the original Truth.

ஆதிசத்தியத்தில் அது உறைகிறது.

So, All Nature is simply the Seer-Will.

இயற்கை அனைத்தும் ஆண்டவனின் சித்தம்.

It is the knowledge-force of the Conscious Being.

அது சத்புருஷனின் சித் சக்தி.

It is at work to evolve in force and form.

சக்தியாகவும் ரூபமாகவும் அது வெளிப்படுகிறது.

So emerges all the inevitable truth.

எல்லாச் சத்தியங்களும் அப்படி நிச்சயமாக வெளிவருகின்றன.

They are of the Idea.

அவை எண்ணத்தைச் சார்ந்தவை.

Originally it has thrown itself into it.

ஆதியில் அவை எண்ணத்துள் அடங்கின.

Page No,129, Para No.15

 

Ours is the mental consciousness.

நமது ஜீவியம் மனத்துடையது.

There is this Truth-Consciousness.

சத்தியஜீவியம் உள்ளது.

There is a contrast between them.

இரண்டும் வேறுபட்டவை.

It is an essential contrast.

வேறுபாடு முக்கியமானது.

We conceive of this Idea.

நாம் எண்ணத்தைக் கருதுகிறோம்.

It points out the essentail contrast.

அடிப்படையான வித்தியாசத்தை அது காட்டுகிறது.

Thought is there.

கருத்துள்ளது.

To us it is separate from existence.

நமக்குக் கருத்து வேறு; சத் வேறு.

It is abstract, unsubstantial.

கருத்து கண்ணுக்குப் புலப்படாத தத்துவம்.

It is different from reality

அது சத்தியத்திலிருந்து மாறுபட்டது.

We do not know where from it appears.

அது எங்கிருந்து வருகிறது என நாமறியோம்.

It detaches itself from objective reality.

தெளிவான சத்தியத்தினின்று அது தன்னைப் பிரித்துக்கொள்கிறது.

It does so to observe.

உலகை அறிய அது அதைச் செய்கிறது.

Then only it can understand and judge.

புரியவும், தீர்மானிக்கவும் அது அவசியம்.

Our mentality is all-analysing.

எதையும் ஆராய்வது நம் மனப்பான்மை.

It is all dividing.

அது பகுக்கும் தன்மையுடையது.

Thought appears so to our mentality.

கருத்து அதுபோன்று நம் மனப்பான்மைக்குத் தெரிகிறது.

Mind has a first business.

மனத்திற்கு முதற் கடமையுண்டு.

It renders 'discrete'.

மனம் பிரித்தெடுக்கிறது.

It makes fissures.

வெட்டி எடுத்து விலக்குகிறது.

It does not discern.

அது பகுத்துணர்வதில்லை.

It separates thought and reality.

சத்தியத்தையும், கருத்தையும் அது பிரிக்கிறது.

It is paralysing.

அதனால் நாம் நம் நிலையிழக்கிறோம்.

In Supermind it is all one.

சத்தியஜீவியத்தில் அனைத்தும் ஒன்று.

There being is consciousness.

அதில் ஜீவனும் ஜீவியமும் ஒன்று.

Consciousness is being.

ஜீவியமும் ஜீவனும் ஒன்றே.

The idea is a vibration.

எண்ணம் ஒரு கதிர்.

It is a vibration of consciousness.

அது ஜீவியத்தின் கதிர்.

It is equally a vibration of being.

அது ஜீவனின் கதிருமாகும்.

There too it is again pregnant of itself.

அதிலும் அது செறிந்துள்ளது.

It is an initial coming out.

அது முதல் வெளிப்பாடு.

It comes out in creative self-knowledge.

அது படைப்பின் சுயஞானமாக வெளிப்படுகிறது.

It lay elsewhere in potential.

அது வேறிடத்தில் வித்தாக இருக்கிறது.

It was so in uncreative self-awareness.

சிருஷ்டிக்கு முந்தைய சுயதெளிவில் அது இருந்திருக்கிறது.

It comes out as Idea.

அது எண்ணமாக வெளிவருகிறது.

That Idea is a reality.

எண்ணம் சத்தியம்.

That reality evolves itself.

சத்தியம் பரிணமிக்கிறது.

It evolves always by its own power and consciousness.

தன் சொந்த சக்தியாலும், ஜீவியத்தாலும் அது பரிணமிக்கிறது.

It is always self-conscious.

எப்பொழுதும் அது தன்னையறியும்.

It is always self-developing.

எப்பொழுதும் அது தன்னை அபிவிருத்தி செய்யும்.

It does so by the will inherent in the idea.

எண்ணத்திலுள்ள சக்தியால் அதைச் செய்கிறது.

It is always self-realising.

அது தன்னையே சித்திக்கக்கூடியது.

It does so by the knowledge ingrained by every impulsion .

ஒவ்வொரு சலனத்தாலும் பெற்ற ஞானத்தால் அதைச் செய்கிறது.

This is the truth of all creation, of all evolution.

இதுவே சிருஷ்டியின் இரகசியம், பரிணாம இரகசியம்.

Contd...

தொடரும்...

****

****

 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

புறவாழ்வில் எதுவும் உன்னைக் காந்தம்போல் கவரவில்லை என்றால், புறவாழ்வால் உனக்குத் தீங்கு செய்ய முடியாது. i.e.. இறைவனை நோக்கிச் செல்பவனைத் தடுக்கும் ஆசையை அது இழந்துவிடும்.

எது உன்னைக் கவரவில்லையோ அதனால் தொந்தரவு வாராது.

ஸ்ரீ அரவிந்த சுடர்

சத்தியமானவன் பொய்யானவனுடைய உறவில் தன்னை வலியுறுத்துவது பொய்மையைத் தடுப்பதற்காக.

சத்தியம் அசைய மறுத்தால் பொய் மறையும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

சச்சிதானந்தத்திலிருந்து ஜடம் வரை அமைப்பும் (constitution)அதன் சட்டமும் ஒன்றே. வெவ்வேறு நிலைகளில் அது வெவ்வேறாகக் காணப்படுகிறது. நேர் எதிராகவும் காணப்படும்.ஆனால் அடிப்படை ஒன்றே.

அடியிலிருந்து நுனி வரை அமைப்பு ஒன்றே.

ஸ்ரீ அரவிந்த சுடர்

காலம் மனத்தில் ஏற்பட்டது. எனவே சுபமுகூர்த்தத்தில் மனத்திற்குள்ள நம்பிக்கை நம் வாழ்க்கையை நிர்ணயிப்பது இயல்பே.

மனம் முகூர்த்தத்தை சுபம் ஆக்குகிறது.


 


 book | by Dr. Radut