Skip to Content

09.சாவித்ரி

சாவித்ரி

P.63 A glance can make his whole day wonderful.

ஒரு பார்வை ஒரு முழு நாளையும் அற்புதத்தால் நிரப்பும்.

. உதடசைந்தால் உள்ளம் சிறகடித்துப் பறக்கும்.

. அவன் செயலுக்கும் வாழ்விற்கும் அவளையே அவன் நாடுகிறான்.

. அவள் பரிமாறும் உபரி அவன் நாட்களைப் பெருமைப்படுத்தும்.

. மயிலிறகு போன்ற வாழ்வின் மகிழ்ச்சி அவனைத் தொடர்கிறது.

. அவள் புன்னகையின் புதுமணம் அவனுக்கு சூரிய ஜோதி.

. அரசியின் ஆட்சிக்கு ஆயிரம் வகைகளாக அவன் ஆட்படுகிறான்.

. அவள் சித்தம், அவன் பாக்கியம் என்பது அவன் தாரக மந்திரம்.

. அவள் நினைவு அவனுக்கு சட்டம். அதுவே லீலை.

. அகண்ட உலகம் அவனும் அவளுமாகும்.

. நட்சத்திரங்களைக் கட்டிப்போட்ட முடிச்சு இது.

. ஒருவரேயான இருவர் உலகத்தின் அதிகார இரகஸ்யம்.

. ஒருவரேயான அவ்விருவர் உலகின் தர்மமும், சக்தியுமாவர்.

. அவன் ஆன்மா மௌனமாக அவளையும் உலகையும் ஆதரிக்கிறது.

. அவன் செயல் அவள் உத்தரவைத் தாங்கிவரும் பதிவேடுகள்.

. ஜடமாக அவள் காலடியில் கிடக்கும் சந்தோஷம்.

. அவள் பிரபஞ்ச நடனத்திற்கு அவன் அகன்ற மார்பு அன்பு காணிக்கை.

. நடுங்கும் நம் வாழ்வு அவள் நடனத்தின் அரங்கம்.

. அவன் அகத்தின் ஆழத்தின் வலிமை தவிர மற்றதால் அதைத் தாங்க முடியாது.

. அனைத்தும் அவ்வானந்தத்தால் கட்டுண்டன.

. அவன் எண்ணமும் செயலும் அவளால் செப்பனிடப்பட்டவை.

. அகண்டமான அவளைப் பிரதிபலிக்கும் கண்ணாடி அவன்.

. சுறுசுறுப்பான அவன் சொல்லும் உற்சாகமான அவன் பேச்சும் அவளில் உதித்தவை.

. இடாத கட்டளையை ஏற்ற அவன் செயல்.

. உலகத்தின் தாக்குதலை ஊமையாக உள்ளே பெற்ற அவள்.

. அவள் கைவண்ணமான அவன் ஆத்மாவும் அவன் வாழ்வும்.

. சூரிய ஜோதியான அவள் நடை அவன் யாத்திரை.

. அவளுடைய சாலை அவனுடைய பாதை.

. சிஷ்யனான சாட்சி அவள் சந்தோஷமான பிரசாதம்.

. அவன் கொடுமையில் பங்கு அவள் புண்ணியத்தின் பாகம்.

. அவள் தீவிர வேகத்தின் தீட்சண்யமான தீரம்.

. அவள் இனிமையின் கடுமை அவனை நடத்தும் சாட்டை.

. அவனிட்ட உத்தரவு அவளிட்ட முத்திரை.

. அவள் செயலை செவ்வனே ஏற்கும் அவன் மௌனம்.

. அவள் நாடகத்தின் நளினம் அவன் நல்லுருவம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

காரியத்தினின்று விலக விலக, தைரியம் அதிகமாகும். நடக்க முடியாத பெரிய திட்டத்தில் நெருக்கம் அதிகமானால் நம்பிக்கை உயரும்.

. தூர இருந்தால் தைரியம் வரும்.

. நெருங்கி வந்தால் நம்பிக்கை உயரும்.

. வளர்ச்சி நின்றால், சாவு ஆரம்பிக்கும்.


 


 



book | by Dr. Radut