Skip to Content

13.பேப்பர் கிளிப்பைக் கொடுத்து ஒருவர் இரண்டு மாடி வீடு பெற்றார்

பேப்பர் கிளிப்பைக் கொடுத்து ஒருவர் இரண்டு மாடி வீடு பெற்றார்

கர்மயோகி

ஒரு பொருளைக் கொடுத்து மறுபொருளைப் பெறும் வழக்கம் மேல்நாட்டில் trade எனப்படும்.

26 வயதுள்ள மான்ட்ரீலில் வசிக்கும் இளைஞன் கூறுவது:

"என் பெயர் கைல் மாக்டொனால்ட். நான் ஒரு சிவப்பு பேப்பர் கிளிப்பைக் கொடுத்து வீடு பெற்றேன். 14 முறை கைமாறி ஜூலை 12ஆம் தேதி 2005இல் ஆரம்பித்து ஜூலை 12, 2006இல் வீடு கைக்கு வந்தது. இந்த வீடு சாஸ்காட்சிவன் என்ற ஊரில் மெயின் தெருவில் 503ஆம் நம்பருடையது. என்னைப் பாராட்டுங்கள். எல்லாச் செய்திகளும் என்னிடம் உள்ளன''.

அவர் செய்தவை:

1.மாக்டொனால்டிற்கு வேலையில்லை. வேலை தேடுவதற்குப்பதிலாக மேஜை மீதுள்ள சிவந்த பேப்பர்கிளிப்பை இன்டர்நெட்டில் கொடுத்து வேறு பொருள் பெற (trade) முடிவு செய்தார்.

2.உடனே பதில் கிடைத்தது. வான்கூவரில் உள்ள இளம்பெண் மீன் போன்ற தோற்றமுள்ள பேனாவைப் பதிலாகத் தர முன்வந்தார்.

3.மீன்பேனாவை சியாட்டலிலுள்ள குயவனிடம் கையால் செய்யப்பட்ட doorknob கதவுப்பிடிக்கு மாற்றிக்கொண்டார்.

4.மாஸஸுஸட்ஸ் ஊரிலுள்ள ஒருவரிடம் அப்பிடியை ஒரு camp stove ஸ்டவுக்குப் பரிமாறினார்.

5.ஸ்டவ்வைக் கொடுத்துவிட்டு 100 watt generator ஒரு சிறிய ஜெனரேட்டர் பெற்றார்.

6.அதை பீயர் விளம்பரப்பலகை beer signக்கு மாற்றினார்.

7.அதை snow mobileக்கு மாற்றினார். இது கண்ணாடி குளோப்.

8.அதை ஒரு சினிமாவில் ஒரு சிறு பாகம் நடிக்க மாற்றினார்.

9.கிப்லிங் என்ற நகரம் 1100 பேருள்ள இடத்தில் இரண்டு மாடி கட்டியுள்ள farm houseயை அடுத்த முறையாக மாற்றிக்கொண்டது.

மாக்டொனால்ட் பிரபலமானார். "இதுவே முடிவன்று. இது தொடரும்''என்கிறார். ஆன்மீகரீதியாக அனந்தம் அணுவிலிருந்து வெளிவரும் (infinite comes out of the finite). இதை நடைமுறையில் இன்டர்நெட் ஓரளவு நிரூபிக்கிறது. இதன் உள்ளுறை தத்துவங்கள்:

.நம் பொருளின் பயன், உயர்வு, உபயோகம் நம்மைவிடப் பிறருக்குத் தெரியும்.

.அப்படி அறிந்தவருடன் நமக்குத் தொடர்புகொள்ள இன்டர்நெட் உதவுகிறது.

.சிறிது சிறிதாகப் பெருகி கிளிப் வீடாயிற்று.

.எந்தப் பொருளிலும் உலகம் அடங்கியுள்ளது.

.அதற்குரிய நேரமும், முறையும் வந்தால் உலகம் அதிலிருந்து எழும்.

.இதிலிருந்து நாமறியக்கூடியவை பல. அவற்றுள் இரண்டு,

.நாம் யார் என அறிந்தால் நம் நிலை 10 அல்லது 100 மடங்கு உயரும்.

.நம் கையிலுள்ள பணம் 10 அல்லது 1000 முறை பெருக இந்த ஞானம் பயன்படும்.

 

****


 


 


 


 


 


 



book | by Dr. Radut