Skip to Content

14. ஆயிரம் காலத்துப் பயிர்

 ஆயிரம் காலத்துப் பயிர்

60 வயதிற்கு மேலானவர்கட்கு ஆயிரம் அனுபவங்கள் இருக்கும். எல்லா வகுப்புகளிலும் முதலாக வந்தவன் நல்ல வேலைக்குப் போய் சிறப்பாக இருப்பது ஒரு அனுபவம். படாதபாடுபட்டு வயதானபின் திருமணமாகி அன்பான குடும்பம் நடத்துவது நல்லதும், கெட்டதும் கலந்துள்ள அனுபவங்கள், எந்தப் பெரிய நல்லது நடந்தாலும் பின்னாலேயே ஒரு சிறு குறை ஏற்படுவது, அல்லது ஒரு பெரிய குறை ஏற்படுவது. சிறியதாக ஆரம்பித்துப் பெருமுயற்சி செய்து பெரியதாக வந்தது மற்றோர் அனுபவம். நாடு முன்னேறும்பொழுது கூடவே நமக்கும் முன்னேற்றம் வருவது. வெறும் மனிதனெல்லாம் பெரும்புள்ளியாகும் பொழுது எதுவும் கூடிவாராத அனுபவம் போன்றவை பல. இவற்றிலிருந்து மாறுபட்ட அனுபவம்,

"படிப்பு, திருமணம், வேலை, வெளிநாட்டுப் பயணம், பெரிய வேலைகள், குடும்பம், குழந்தைகள் என என் பெரிய மகனுக்கு நான் செய்ய முயன்றனவெல்லாம் முயற்சி எடுக்கும் முன் கூடிவந்து, பெருகி, பல நிலைகளாக வளர்ந்து, அனைவரும் பெருமகிழ்வு கொண்டது போன்ற நிகழ்ச்சியை நான் பார்த்ததில்லை'' என அரிபொருளாக நாம் கேள்விப்படுவதுண்டு. ஆரம்பத்தை நினைவுகூர்ந்தால் அங்கு சம்பந்தப்பட்ட அனைவரும் உயர்ந்த நல்லெண்ணத்தால் செயல்பட்டிருப்பது தெரியும். "இது அனைவரும் பிரியப்பட்டு செய்தது, இந்த விஷயத்தில் கோணல், குறை என்ற பேச்சுக்கே இடமில்லை'' என்று அன்று அனைவரும் பேசியது நினைவு வரும்''.

- நிறைவான நல்லெண்ணம் ஆயிரம் காலத்திற்கும் பயிராகும் பெரும் பலனாக வரும்.

- நல்லெண்ணம், தெய்வீக சக்தி.

- குறை என்பவரேயில்லை என்பது கிடைக்க அன்னை அருள் தேவை.

- அன்னையை அருளாக அறிந்து ஏற்று, எவர்மீதும் நமக்குக் குறையில்லாவிட்டால், எவரும் குறையின்றி நிகழ்ச்சியில் பங்குகொள்வர்; அது வெறும் பயிரை ஆயிரம் காலத்துப் பயிராக்கும்.

****


 



book | by Dr. Radut