Skip to Content

15.நடக்காதவை நடக்கின்றன

நடக்காதவை நடக்கின்றன

சத்தியஜீவிய சக்தி புவியில் வந்தால் மரணம் அழியும்; தீமை, கொடுமை கரையும்; மரணப்படுக்கையிலுள்ளவர் எக்காரணமுமின்றி பிழைத்துக்கொள்வார்; எதிரி மனம்மாறி எதிர்பாராமல் நடப்பான் என்றெல்லாம் பகவான் ஸ்ரீ அரவிந்தர் எழுதியதை சாதகர்கள் புரிந்துகொண்டார்கள். அவர் கூறியபடி 100 பேரோ, 12சாதகர்களுடைய தவத்தால் அது நடக்கவில்லை. பகவான் உடலை நீத்து சூட்சும உலகில் தவத்தைத் தொடர்ந்ததால் அது 1956இல் புவியில் இறங்கி, படிப்படியாய் வளருவதாக அன்னை கூறினார். அதன் விளைவாக சர்வதேச அரங்கிலும், சாமான்ய மனித வாழ்விலும் நடக்காதவை நடப்பதை நாம் காண்கிறோம். பல முறை எழுதியவற்றை மீண்டும் இந்த சந்தர்ப்பத்தைக் கூற எழுதுகிறேன்:

- குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆர்வமாக அடம் பிடிக்கிறார்கள். லீவு வந்தால் ஏமாற்றமடைகின்றனர்.

- பணம் ஏழையைக் கடன் பெறும்படி வருந்திக் கேட்கிறது.

- ஏழைகளுக்குக் கொடுத்த பணம் ஒருவர் தவறாமல் திருப்பித் தருகிறார்.

- ஓய்வுபெற்றபின் முழுச்சம்பளமும் ஓய்வு வயது வரை மொத்தமாக இன்றே கையில் கொடுத்து golden shake என வழி அனுப்புகிறார்கள்.

- பள்ளிக்கூடங்களில் 5 வகுப்புவரை பரீட்சையில்லையென சட்டம் வருகிறது.

- ஒரு பேப்பர் கிளிப்பிற்குப்பதிலாக இரண்டு மாடி வீடு வருகிறது .

- போன் பேச கட்டணமில்லை. லண்டனுக்குப் பேசினாலும், கலிபோர்னியாவுக்குப் பேசினாலும் கட்டணம் (சில கம்பனி போன்களில்) ஒரு பைசாகூட இல்லை.

 

****


 



book | by Dr. Radut