Skip to Content

02.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                          (சென்ற இதழின் தொடர்ச்சி....)          கர்மயோகி
 

XV. The SupremeTruth-Consciousness

Page No.138, Para No.13

15. உயர்ந்த சத்தியஜீவியம்

The Supermind works otherwise.

சத்தியஜீவியம் வேறு வகையாக வேலை செய்கிறது.

Suppose the tree was a separate existence.

மரம் தனித்த அம்சம்எனக் கொள்வோம்.

What would be the process?

எப்படி மரம் வளரும்?

The process cannot be the same.

அது வளரும் வழியோ, வாழும் வகையோ வேறு வகையாகும்.

Forms are determined by the cosmic existence.

ரூபங்களை நிர்ணயிப்பது பிரபஞ்ச வாழ்வு.

In fact, it is fixed by its force.

உண்மையில் அதன் சக்தியை நிர்ணயிப்பது அதுவே.

In the cosmos there are other manifestations.

பிரபஞ்சத்தில் வேறு சிருஷ்டிகள் உண்டு.

The tree has its relations with them.

மரத்திற்கு அவற்றுடன் தொடர்புண்டு.

The growth of the tree is determined by all of them.

மரத்தின் வளர்ச்சியை அனைத்தும் நிர்ணயிக்கின்றன.

There is a universal law and truth of all Nature.

பிரபஞ்சத்திற்குரிய சட்டமும், இயற்கைக்குரிய சத்தியமும் உண்டு.

The separate law is one application of the universal law.

குறிப்பிட்ட சட்டம் பிரபஞ்ச சட்டத்தின் ஓர் அம்சம்.

There is the general development.

பொதுவான வளர்ச்சியுண்டு.

There is the particular development.

குறிப்பிட்ட வளர்ச்சியுண்டு.

The one is determined by the other.

ஒன்றை மற்றது நிர்ணயிக்கிறது.

The tree does not explain the seed.

மரம் விதையை விளக்காது.

The seed does not explain the tree.

விதை மரத்தை விவரிக்காது.

Cosmos explains both.

பிரபஞ்சம் இரண்டையும் விளக்கும்.

God explains cosmos.

இறைவன் பிரபஞ்சத்தை எடுத்துச் சொல்வான்.

The Supermind pervades the tree and the seed.

சத்தியஜீவியம் மரத்தையும் விதையையும் ஊடுருவும்.

It inhabits both.

இரண்டிலும் அது உறைகிறது.

It does so with all objects.

எல்லாப் பொருள்களிலும் அது உள்ளது.

It lives in the greater knowledge.

அதன் ஞானம் பெரியது.

It is indivisible and one.

அந்த ஞானம் தன்னைப் பகுக்க அனுமதிக்காத முழுமையுடையது.

It is a modified indivisibility and unity.

அதன் முழுமை மாறிய முழுமை.

It is not an absolute unity.

அடிப்படையான முழுமையன்று.

This is comprehensive knowledge.

இது அனைத்தையும் உட்கொண்ட ஞானம்.

There is no independent centre of existence.

இங்கு தனியான வாழ்வு மையமில்லை.

There is no individual separated ego.

அகந்தைஎன தனிப்பட்டது ஒன்றில்லை.

We see that in ourselves.

அதை நாம் நம்முள் காண்கிறோம்.

It is self-aware.

அது தன்னையறியும்.

To it the whole existence is an equable extension.

அதற்கு முழுவாழ்வும் ஒரேமாதிரியான நீட்சி.

It is one in oneness.

அது ஒருமையுடைய ஒன்று.

It is one in multiplicity.

அனைத்திலும் ஒருமை பெற்றது.

It is one in all conditions and everywhere.

எங்கும், எந்த நிலையிலும் அது ஒன்றே.

Here the All and the One are the same existence.

இங்கு அனைத்தும் ஒன்றும் ஒரே வாழ்வுடையது.

The individual being has a conscious identity.

தனிஜீவன் தன்னையறியும்.

It is with all beings and with the One Being.

அந்நிலை அனைத்திற்கும் உண்டு. ஒன்றுஎன்ற ஏகனுக்கும் உண்டு.

It cannot lose that identity.

அது தன் ஐக்கியத்தை இழக்கமுடியாது.

That identity is inherent in supramental cognition.

அந்த ஐக்கியம் சத்தியஜீவிய நோக்கில் பிறப்பிலேயேயுள்ளது.

It is a part of the supramental self-evidence.

அது சத்தியஜீவிய வாழ்வின் பகுதி.

Page No.139, Para No.14

 

The Supermind enjoys a spacious equality of oneness.

சத்தியஜீவியத்திற்கு இடத்தில் சமத்துவம் உண்டு.

The Being is not divided and distributed.

ஜீவன் பகுக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படவில்லை.

It is equally self-extended.

ஜீவன் தன்னை பிரபஞ்சத்தில் நீட்டிக் காண்கிறது.

It pervades its extension as One.

தன்னிலிருந்து நீண்டெழுந்தவற்றை அது ஏகஜீவனாக ஊடுருவுகிறது.

It inhabits as One the multiplicity of forms.

பல ஆயிரம் ரூபங்களை அது ஏகனாக அடைந்து வதிகிறது.

It is everywhere at once the single and equal Brahman.

எங்கும் அது எளிய சமத்துவமான பிரம்மம்.

This extension of Being is in Time and Space.

இந்த நீட்சி காலத்திலும், இடத்திலும் ஏற்பட்டது.

This pervasion is in intimate relation with the absolute Unity.

இவ்வூடுருவல் பிரம்ம ஐக்கியத்துடன் நெருங்கிய தொடர்புள்ளது.

So also is its indwelling.

அதனுள் உறைவதும் அப்படியே.

It has proceeded from this Unity.

இந்த ஐக்கியத்தினின்று அது புறப்பட்டு வெளிப்படுகிறது.

It is that absolute indivisible.

பகுக்கமுடியாத அந்த ஐக்கியம் பிரம்மத்திற்குரிய ஐக்கியம்.

There is no centre in it or circumference.

அங்கு மையமில்லை, எல்லையான பரிதியில்லை.

Only the timeless spaceless One remains.

காலத்தையும் இடத்தையும் கடந்த ஜீவன் மட்டுமே உள்ளது.

At the begininning there is the unextended Brahman.

ஆரம்பத்தில் வெளிப்படாத பிரம்மம் மட்டுமேயிருந்தது.

There is that high concentration of unity.

ஐக்கியத்தின் தீவிரம் அங்குள்ளது.

It has to translate itself in the extension.

அது நீட்சியில் அதற்குத் தகுந்தவாறு வெளிப்படவேண்டும்.

It becomes the equal pervasive concentration.

அது சமத்துவமுடைய ஊடுருவும் தீவிரமாகும்.

It becomes the indivisible comprehension of all things.

அது பகுக்கமுடியாத பரவலான ஞானமாகும்.

Also, it is this universal undistributed immanence.

மேலும் அது பிரபஞ்சத்திற்குரிய விநியோகிக்கப்படாத உடன்பிறந்ததாகும்.

This unity is undiminishing and unabrogated.

இது குறைவற்ற, குறைக்கமுடியாத ஐக்கியம்.

No play can tamper with that unity.

எந்த லீலையும் இந்த ஐக்கியத்திற்குக் குந்தகம் விளைவிக்க முடியாது.

"Brahman is in all things."

"பிரம்மம் அனைத்திலும் உண்டு."

"Brahman contains all things."

"பிரம்மம் அனைத்தையும் உட்கொண்டது."

"All things are in Brahman."

"எல்லாம் பிரம்மம்."

This is the triple formula.

மூன்று அம்சமுள்ள சூத்திரம் அது.

It is a formula of the comprehensive Supermind.

அது முழுமையான சத்தியஜீவிய சூத்திரம்.

There is a single truth.

இது ஒரு தனித்த சத்தியம்.

It is a truth of self-manifestation.

சுய-சிருஷ்டியின் சூத்திரம் இது.

It emerges in three aspects.

இது மூன்று அம்சங்களாக வெளிப்படுகிறது.

It holds it together.

மூன்றையும் இது சேர்த்துப் பிடிக்கிறது.

It does so inseperably in its self-view.

தன் சுயநோக்கில் அவை பிரியாமல் அணைத்துப் பிடிக்கிறது.

It is the fundamental knowledge.

இது அடிப்படை ஞானம்.

It proceeds from it to the play of the cosmos.

இதிலிருந்து அது பிரபஞ்ச லீலைக்குப் போகிறது.

Contd...

தொடரும்

****

****


 


 


 


 


 


 


 


 


 


 


 


 book | by Dr. Radut