Skip to Content

05.உலகம்-மோட்சம்-ஸ்ரீ அரவிந்தம்

உலகம்-மோட்சம்-ஸ்ரீ அரவிந்தம்

                                 (சென்ற இதழின் தொடர்ச்சி....)        கர்மயோகி

--தெய்வீக ஆன்மா பிரம்மத்தின் முன்னிலையை விட்டகல்வது இல்லை.

--பிரம்மத்தையும், பிரம்மம் ஜீவன்களில் உறைவதையும், ஜீவன்கள் பிரம்மத்திலிருப்பதையும், பிரம்மம் ஜீவனில் ஜீவனுக்குத் தனித்தன்மை தருவதையும் தெய்வீக ஆன்மா சிந்தனையாலும், ள்ளுணர்வாலும், உணர்வாலும் அறிகிறது.

தெய்வீக ஆன்மா மூன்று விஷயங்களை அறியும். அவை,

1) Self பிரம்மத்தால் அத்தனை ஜீவாத்மாக்களும் ஆனவை.

2) அத்தனை ஜீவாத்மாக்களும் self, பிரம்மம், இறைவனில் உள்ளன.

3) பிரம்மம் அத்தனை ஜீவாத்மாக்களுள்ளும் உள்ளது.

அறிவு என்பதற்கு 3 நிலைகள் உண்டு. அவை, (1) சிந்தனை, (2) உள்ளுணர்வு, (3) உடல் உணர்வு. சிந்தனை மனத்திற்கும், உள்ளுணர்வு emotions உணர்வுக்கும், உடல் உணர்வு உடலுக்கும் உரியது. இம்மூன்றாம் நிலையை எட்டினால் அறிவு பூரணம் பெறுகிறது. மனிதன் இவற்றை மனிதனாக அறியலாம், தெய்வமாக அறியலாம். தெய்வீக ஆன்மா இம்மூன்று நிலைகளையும் தெய்வீகமாக அறிகிறது.

 

 --வேதம் இம் மூன்று நிலைகளையும்  கடவுள்களுக்குக் கொடுக்கிறது.

அக்னி அனைத்துக் கடவுள்கட்கும் தலைவன்.   
 
எல்லா கடவுள்களும் அக்னியில் சேர்கின்றனர்.
 
அக்னி மற்ற கடவுள்கட்குச் சேவகன். 

மனமும் சத்தியஜீவியமும்

--உலகத்தை சிருஷ்டித்த செயலை இறைவனுக்குப் புறம்பானது என நாம் கருதுகிறோம்.

--சத்தியஜீவியம் இரண்டாகப் பிரியும் பொழுது மனம் உற்பத்தி ஆயிற்று.

--மனம் பிரிவினையாலுண்டானது. இது பிரிக்கும் கருவி.

மனம் பிரிப்பது; முடிவற்றது. அணுவாகும்வரை பிரிக்கிறது.

இனி பிரிக்க முடியாத நிலையில் சேர்க்கிறது.

பிரிவினையும் சேர்ப்பதும் ஒன்றே.

--அடிமனம் மேல்மனத்தை ஆள்வதை அறிவது முதல் சித்தி.

இது பிராணமயப் புருஷன்.

--மனத்திற்குரியது மனோமயப் புருஷன்.

மனோமயப் புருஷனுக்கும் மனத்தின் அறியாமையுண்டு.

வாழ்வு

--உறுதி சக்தியில் மறைந்தால் ஜடம் உற்பத்தியாகிறது.

--வாழ்வு உடல் உணர்வை மனத்திற்குக் கொண்டு போய்   எண்ணமாக மாற்றி, அந்த எண்ணத்திற்கு உடலை கட்டுப்படுத்துகிறது.

--ஆழ் மனம் என்பது சக்தி மறைவதால் ஏற்படுவது.

மரணம், ஆசை, இயலாமை

--மரணம் வாழ்வுக்கு அமரத்வம் தருகிறது.

--பசி அன்பாக மாறும் இடையில் ஏற்படுவது ஆசை.

--இயலாமை பிணக்கால் இருபுறத்தையும் உயர்த்தி அன்பை செய்கிறது.

--பிரபஞ்சத்தில் வாழ்வு தன்னை வலியுறுத்த மரணம், ஆசை, பிணக்கைப் பயன்படுத்துகிறது.

1) மரணம் - வாழ்வு:

மரணத்தால் உடல் அழிகிறது. ஆன்மா அடுத்த உடலில் ஜனிக்கிறது. அழிவது ஓர் உடல். ஆனால் உலகில் "உடல்" அழிவதில்லை. ஒரு ரூபத்தில் அழிந்தவுடல், அடுத்த ரூபத்தில் எழுகிறது. அவ்வகையில் "உடலு"க்கு நித்தியத்துவம், அமரத்துவம் தருகிறது. ஓர் ஆபீசர் மாற்றப்படுகிறார். அடுத்தவர் வருகிறார். ஆபீசர்கள் மாறுகிறார்கள். ஆபீஸ் நிலையாக இருக்கிறது. அவருக்கு வேறு போஸ்டிங் வந்தது; வேலை போகவில்லை. வேலைக்கு நிரந்தரம் தருவது மாற்றல். உடலுக்கு அமரத்துவம் தருவது மரணம். ஒரே ஆபீசர் ஒரே ஊரிலிருந்தால் இலஞ்சம் ஏற்பட வழியாகும். ஒரே உடல் அமரத்துவமடைந்தால் வளரும் ஆன்மாவுக்குரியத் தகுதியை அதனால் தரமுடியாது. ஒரு பிறவியில் ஆன்மா பெற்ற அனுபவத்தை அப்பிறவியில் உடல் ஆதரித்தது. ஆன்மா வளர்ந்தபின் அவ்வுடல் தொடர்ந்து சேவை செய்ய முடியாது. பள்ளி முடித்த பையன் கல்லூரி போகவேண்டும். படிப்பை பள்ளியிலேயே தொடர முடியாது.

2) பசி - அன்பு:

வாழ்வுக்கு மனத்தைப்போல், உடலைப்போல் வேகம் உண்டு. உடலின் வேகம் செயலுக்குரியது. மனத்தின் வேகம் அறிவை நாடும். வாழ்வின் வேகம் பசியில் ஆரம்பித்து அன்பில் முடியும். வாழ்வின் வேகத்தை ஆசை எனலாம். வாழ்வு சிறியது முதல் பெரியதுவரை நீடிக்கும். சிறியதற்கு வேகம் எழுந்தால் எடுத்துக் கொள்ளப் பிரியப்படும்; முயலும். பெரியதற்கு வேகம் வந்தால் கொடுக்கப் பிரியப்படும். எடுத்துக்கொள்வது பசி. கொடுப்பது அன்பு. பசியும், அன்பும் வாழ்வின் சிறிய முனையிலும், பெரிய முனையிலும் உள்ள ஆசை.

3) இயலாமை - பிணக்கு:

முடிந்தவன் செய்வான். முடியாதவன் சண்டையிடுவான். பிணக்கில் இரு புறம் உண்டு. பிணக்கால் இரு புறமும் ஓரளவு அனுபவம் பெறும். அதனால் உயரும். உயர்வதால் ஏற்படுவது அன்பு.

4) வாழ்வு வலியுறுத்துவது (self-affirmation):

வாழ்வுக்கு மேல் மனமும், கீழே உடலும் உள்ளன. வாழ்வு உயிருடனிருப்பது வாழ்வுக்கு அவசியம். மரணம் வாழ்வுக்கு அமரத்துவம் தருகிறது என்றோம். ஆசையும், பிணக்கும் அன்பை உற்பத்தி செய்ய இருக்கின்றன.

- வாழ்வு உயிருடனிருக்க மரணம் அவசியம்.

-வாழ்வு தன் பரிணாமக் கடமையைச் செய்ய ஆசையும், பிணக்கும் அவசியம்.

- வாழ்வின் கடமை உடல் உணர்வை மனத்திற்குக் கொண்டுபோய் எண்ணமாக மாற்றி, அவ்வெண்ணத்தின் ஆட்சிக்குள் உடலைக் கொண்டு வருவது. உடலுக்குரியது செயல், உணர்வுக்குரியது உறவு,மனத்திற்குரியது அறிவு. செயல் அறிவால் உறவை உயர்த்துவது பசியும், ஆசையும், பிணக்கும் அன்பாவது. அன்பு சைத்தியப்புருஷனுக்குரியது. பரிணாமம் சைத்தியப்புருஷனை உருவாக்க வாழ்வு ஓர் அரங்கமாக இருக்கிறது.

வாழ்வின் எழுச்சி

--அணு மனிதனை இரு கூறுகளாகப் பிரிக்கிறது.

--சைத்தியப்புருஷன் என்ற மையம் அன்பால் பிணக்கைச் சுமுகமாக்கக் ‘கொடுத்து வளர்வது’ என்ற கொள்கையை ஏற்கிறது.

வாழ்வின் பிரச்சினை

--வாழ்வு என்பது சச்சிதானந்தத்தின் விழிப்பான சக்தி.

அதன் மையம் துண்டு செய்யும் மனம்.

மனம் எதிரான இரட்டைகளை மோதவிடுகிறது.

இதற்குத் தீர்வு வாழ்வில் மனம் தேடவேண்டும்.

--ஜீவியத்தின் நான்கு முனைகள் சத்தியஜீவியம், மனம், வாழ்வு, உடல்.

--மூன்று தடைகள்:

1) மனிதன் மேல் மனத்தில் வாழ்கிறான்.

2) மனத்தால் மனிதன் பிரிக்கப்பட்டுவிட்டான்.

3) சக்தியும் ஜீவியமும் பிரிந்துள்ளன.

--சக்தியும், ஜீவியமும் சுமுகமாக இணைய மனித ஜீவியம் பிரபஞ்சம் முழுவதும் பரவ வேண்டும். அது சத்தியஜீவியத்திற்கு உரியது. அதுவே நான்காம் நிலை.

இரட்டையான ஆத்மா

--மனம், உடல், உயிர், ஆன்மா ஆகியவை இரண்டிரண்டாகப் பிரிந்துள்ளன.

1)

மனம் -

அடிமனம்

மேல்மனம்

2)

வாழ்வு -

வாழ்வு

சூட்சும வாழ்வு

3)

உடல் -

ஜடமான உடல்

சூட்சும உடல்

4)

ஆத்மா -

வளராத ஜீவாத்மா

வளரும் சைத்தியப்புருஷன்

--சைத்தியப்புருஷன் ஆசையை வென்று, ஆத்மாவை விடுதலை செய்து, சத்தியஜீவியத்தை அடைந்து, மூன்று திருவுருமாற்றங்களைப்  பூர்த்தி செய்ய வேண்டும்.

ஜடம்

--ஜடம் என்பது சச்சிதானந்தம்.

· மனம் புலன்வழி ஆத்மாவை ஜடமாகக் காண்கிறது.

· சத் பிரபஞ்சத்தில் ஆன்மீகப் பொருளாகி, மனத்தால் பிரிக்கப்பட்டும் சேர்க்கப்பட்டும் ஜடமாகிறது.

· மனம், வாழ்வுபோல் ஜடமும் பிரம்மமே.

· ஜடம் என்பது சக்தி பெற்ற ரூபம்

சக்தியைக் கொடுத்தது வாழ்வு.

ரூபத்தைக் கொடுத்தது மனம்.

· சத் தன்னைத் தன்னுள்ளே கிரகித்து சிக்கலாகி, மறந்த  நிலை ஜடம் எனப்படும்.

· ஜடத்துள் ஜீவியம் ஒளிந்துள்ளது.

ஜீவியத்துள் ஜீவன் ஒளிந்துள்ளது.

ஜடம் ஜீவியத்தை ஜீவனைக் கண்டுபிடிக்கத் தூண்டுகிறது.

· சச்சிதானந்தம் தன்னை மனத்தின் புலன்வழிக் காணும் பொழுது தானே அதற்கு ஜடமாகத் தெரிகிறது.

ஜடத்தின் முடிச்சு

--ஜடம் பரிணாமத்தால் சத்புருஷனாக உள்ள தடைகள்மூன்று.

1) அறியாமை 2) தமஸ் 3) பகுதியாகப் பிரிந்த நிலை.

--பிணக்கின் பின் சுமுகம் உண்டு. அற்புதமான ஐக்கியத்தை நோக்கி உலகம் செல்கிறது.

--வாழ்வு பிரிவினையை அனுமதிக்கிறது. தன்னுள் பொருள்களைக் கிரகித்து விழுங்குவது வாழ்வின் வழி.

--மனமும், சத்தியஜீவியமும் வாழ்விலிருந்தும், ஜடத்திலிருந்தும் பரிணாமத்தால் எழுகின்றன. பிரிவினை ஒழிய முடியும்.

--நம் மனத்தின் கண்ணோட்டம் தடை. பொருள் பல நிலைகளிலிருப்பதால் நம் மனம் மாறினால் பொருள் திருவுருமாறிச் சத்தாகும்.

பொருளின் பல கட்டங்கள்

--பொருள் ஏழு கட்டங்களிலிருந்தாலும் எல்லாம் ஒரே வகையின. அதனால் பரிணாமத்தால் ஜடம் உயர்ந்து சத்தாகும். நாம் காய்கறிகளைச் சாப்பிடுகிறோம். அவை ஜீரணமாகி உடலுடன் கலக்கின்றன. நம் உடலும், காய்கறியும் வேறு வேறு வகையானதானாலும் இரண்டும் ஒரே பொருளால் செய்யப்பட்டதால் அவற்றால் உடலுடன் கலக்க முடிகிறது.

சப்த லோகம்

--வேதம் உலகை 7 அல்லது 8 ஆகப் பிரிக்கிறது. 10 அல்லது 12 ஆகவும் பிரிக்கலாம். பகவான் மரபின் 7 பிரிவை 8 பிரிவாக்குகிறார். அப்படி அவர் புதியதாகச் சேர்த்தது சைத்தியப்புருஷன்.

--சத், சித், ஆனந்தம், சத்தியஜீவியம் மேலேயுள்ளவை. அவை தலைகீழே மாறி ஜடம், வாழ்வு, சைத்தியப்புருஷன், மனமாகின்றன.

தெய்வீக மனத்தின் மாயை

--அறியாமை என்பது முழுமையிலிருந்து பிரிந்து ஒரே விஷயத்தில் நிலைப்பது.

--மேல்மனத்திலிருந்து உள் மனம் சென்று அங்கிருந்து உயர்ந்து ஆன்மீக மனத்தை (முனி, ரிஷி, யோகி, தெய்வம்) அடைந்தால் சத்தியஜீவியத்தையடையலாம். இது சூட்சுமத் தொடர்பு. விவேகானந்தர் பகவானுக்கு சத்தியஜீவியத்தைக் காட்டினார். எப்படி அதை அடைவது எனக் கூறவில்லை. அதைக் கண்டுபிடிக்க பகவானுக்கு 10 வருஷமாயிற்று. மேலே போக உள்ளே போக வேண்டும் என்பது இரகஸ்யம்.

--மேல்மனத்திலிருந்து உள்மனம் சென்றடைந்தால்

1) மனோமயப்புருஷன் தெரியும்.

2) நிர்வாணக் கதவு திறக்கும்.

3) சைத்தியப்புருஷனை அடிமனத்தில் நாடும் வழி பிறக்கும்.

சைத்தியப்புருஷனை நாடினால் அங்கிருந்து உயர்ந்து ஆன்மீக மனம் வழி சத்தியஜீவியமடையலாம்.

--தெய்வீக மனம் One ஏகனுக்கு அனந்தமான வாய்ப்புகளை அளிக்கிறது.

பிரம்ம சிருஷ்டி பிரபஞ்ச சிருஷ்டி

--உலகை சிருஷ்டித்த சித்-சக்தி தன்னை நமக்கு வெளிப் படுத்துவதில்லை.

--விஞ்ஞானி ஜட உலகில் இரகஸ்யத்தைத் தேடுகிறான்.

--ஜீவியம் ஜட இருளினின்று பரிணாமத்தால் வெளி வருகிறது என்ற கொள்கை சரி என நிரூபிக்கப்பட்டது.

--ஏன் விதையிலிருந்து மரம் வருகிறது, ஆக்ஸிஜன், ஹைடிரஜனிலிருந்து ஏன் நீர் உற்பத்தியாகிறது என்று இக் கொள்கை விளக்குகிறது.

--ஜீன், குரோமசோம் என்ற ஜடப்பொருள் எப்படி மனித சுபாவத்தைத் தாங்கி வருகின்றன என அவை நிரூபிக்கின்றன.

--அகம் புறத்தை நிர்ணயிப்பதுபோல் மனம் ஜடத்தை ஆள்கிறது. பகவான் சிருஷ்டியைப் பற்றிக் கூறுவது:

- இறைவன் அனந்தமான ஜீவியஜோதி.

இறைவன் தானே உலகமாக முடிவு செய்து அணுவான ஜடமான இருளானான்.

இறைவன் உலகமானது சிருஷ்டி.

உலகம் மீண்டும் இறைவனையடைவது பரிணாமம்.

ஜடம் வாழ்வாகி மனமெனும் மனிதனாகியது பரிணாம வளர்ச்சி.

உலகில் ஆயிரம் பொருள்கள் உள்ளன.

மரம், செடி, மனிதன், கல், நீர், நெருப்பு போன்றவை அவை.

விஞ்ஞானிகளும், ரிஷிகளும் இவை எப்படி உற்பத்தி ஆயின எனக் கேட்கிறார்கள். (Who determined them to be what they are?)

ஜடம் மரமாக வேண்டும் என முடிவு செய்தது யார்?

ஜடம் முதலில்; மரம் அடுத்தது.

முதலிலுள்ள ஜடம் அடுத்து வரும் மரத்தை நிர்ணயிக்கிறது.

முதலிலுள்ளது அகம், அடுத்து வருவது புறம்.

எனவே அகம் புறத்தை நிர்ணயிக்கிறது.

இந்த ஜடம் அதன் முன்மனத்திலிருந்து எழுந்தது.

எனவே மனம் ஜடத்தை ஆள்கிறது.

--அம்மனம் மனித மனமில்லை, தெய்வீக மனம்.

--சத்தியஜீவியம் சிருஷ்டிக்கிறது. அதன் வழியை மனத்தால் அறிய முடிவதில்லை.

--தெய்வீக மனத்தில் ஐக்கியமில்லை. சத்தியஜீவியத்தில் ஐக்கியமுண்டு. அதனால் அது சிருஷ்டிக்கிறது.

--சத்தியஜீவியம் என்பது சச்சிதானந்தம்; முடிவாக அது பிரம்மம்.

--அஞ்ஞானத்தின் முக்கியத்துவத்தை அறிவது அவசியம்.

--பிரம்மத்திலில்லாதது உலகில் சிருஷ்டியாக வர முடியாது.

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா

--மனம் சத்தியத்தை அறிய முடியாது. அறிவுக்குத் திறனில்லை. ஞானத்திற்கும் ஊடுருவும் பார்வைக்கும் அத்திறனுண்டு.

--மனம் பிரம்மத்தையறியப் பாடுபடுகிறது. பிரம்மம், புருஷா, ஈஸ்வரா ஆகிய மூன்றையும் இணைத்து ஏகனையும், அநேகனையும் ஒரே சமயத்தில் காணும்படி முயன்றால் மௌனமும் சலனமும் ஒன்றாகும். ரூபமும் அரூபமும் மௌனமும் சலனமும் ஒன்றாகும். ரூபமும் அரூபமும் ஒன்றாகும், கண்டமும், அகண்டமும் ஒன்றாகும். மனத்தின் தடையைக் கடக்கலாம்.

--மாயையால் எதையும் செய்ய முடியும். தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். தன்னுள் தன்னைக் கிரகித்துக் கொள்ள முடியும்.

--இதனால் பாதாளமும், பரமாத்மாவும் ஏற்படுகின்றன.

--நாம் சத்திலிருந்தால் அனைத்தையும் செய்வது மாயை என அறிகிறோம். அங்கிருந்து சாட்சிப்புருஷனையடையாமல் ஆன்மாவின் தீவிரச் செயலின் அனுபவத்தையடைந்தால், மாயை ஜீவனின் சக்தியாகக் காணப்படும்.

மாயை, பிரகிருதி, சக்தி என்பவை பிரம்மம், புருஷா, ஈஸ்வரனுடைய சக்திகளாகும்.

மாயை

-

சிந்தனையால் சிருஷ்டி செய்வது.

பிரகிருதி

-

தீவிரமாகச் செயல்படுவது.

ஈஸ்வரன்

-

இவையிரண்டையும் சேர்த்துச் செய்ய வல்லது.

சிந்தனையால் சிருஷ்டித்து, தீவிரமாகச் செயல்படுவது.

ஈஸ்வரன், பிரம்மம், புருஷனைத் தன்னுட்கொண்டது.

சக்தி, மாயை, பிரகிருதியைத் தன்னுட்கொண்டது.

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயை, பிரகிருதி, சக்தி இவற்றிடையே எந்த முரண்பாடும் இல்லை.

--ஆன்மீகம் யதார்த்தம், தெளிவானது. தத்துவ ஆராய்ச்சி ஏட்டுச் சுரைக்காய். யோகம் செய்தால் தெளிவு ஏற்படும்.

--ஏகன் என்பது அடிப்படை. அகந்தை இதை மறைக்கிறது. ஆத்மா பிரம்மத்திற்குரியது.

--சமர்ப்பணத்தாலும், சரணாகதியாலும் நாம் சத்தியத்தை அடையலாம். ஆத்மாவையும், சுபாவத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வோம்.

--சத் புருஷனில் சிருஷ்டிக்கும், அதற்கு முன்நிலைக்கும் வித்தியாசமில்லை.

--காலம், காலத்தைக் கடந்தது என்பவை ஒன்றே. நித்தியத்தின் இரு நிலைகள் அவை.

--காலத்துள், காலத்தைக் கடந்தது வந்து உடனுறைந்தால் மூன்றாம் நிலைக் காலம் - அற்புதம், அதிசயம், ஆச்சரியம் - ஏற்படுகிறது.

பரமாத்மாவும், ஜீவாத்மாவும்

--அஞ்ஞானம் என்பது என்ன என்று தெரிவது முக்கியம்.

--ஜீவன், நமது ஜீவனுடைய ஆத்மா என்பது பிரபஞ்ச ஆத்மாவில் உள்ளது. அது பிரம்மத்தில் உறைகிறது. அமர வாழ்வு அவனுக்கே.

--மூன்று தவறுகள்:

1) சிருஷ்டிக்கும் பிரம்மத்திற்கும் இடையே வெளி உள்ளதாக நினைக்கிறோம்.

2) முரண்பாட்டை முடிவானதாகக் கருதுகிறோம்.

3) சிருஷ்டி காலத்தால் ஏற்பட்டது எனக் கருதுகிறோம்.

--பிரம்மம் சொல்லைக் கடந்தது.

--வேண்டியது உயிர்வாழ வேண்டாதது வேண்டும். வேண்டாதது வாழ வேண்டியது வேண்டும். அவற்றிடையே முரண்பாடில்லை.

--தனித்தன்மை, பொதுத்தன்மை, சாரம்.

--முத்தும், வைரமும் வேறு என்பது முதல் நிலை சத்தியம். இவையிரண்டும் பொது என்பது விஞ்ஞானம் கூறுவது.

தனித்தன்மை தெரிந்தால் பயன்படுத்தலாம்.

பொதுத்தன்மை தெரிந்தால் அவற்றைச் செய்யலாம்.

சாரம் (பிரம்மம்) தெரிந்தால் ஒன்றை மற்றதாக மாற்றலாம். அது ரஸவாதம் எனப்படும்.

--பிரம்மத்திற்கும் சிருஷ்டிக்கும் வேறுபாடுண்டுஎனக் கருதுவது விஞ்ஞானத்தின் குறை. வேறுபாடில்லை.

இறைவனும், அசுரனும்

--நாம் அறியாமையால் வாழ்கிறோம். அறிவால் வாழலாம். அறிவால் வாழ்வது இறைவன். அறியாமையில் வாழ்வது அசுரன்.

--குறை பிரிவினையிலிருந்து எழுகிறது. அது லிமிட்டாகவும், குதர்க்கமாகவும் தெரிகிறது.

--உலகை இறைவனின் அற்புதமாக அறியும்வரை எந்த விளக்கமும் பயன்தாராது, நம்மை இறைவனாக நாம் அறிய வேண்டும்.

--லிமிட்என்பது நமக்கு, ஜீவனுக்கில்லை.

--இறைவனது சிருஷ்டியில் அஞ்ஞானமே பெரிய சக்தி.

--வலி ஆனந்தத்தை முழுமையாக அனுபவிக்க உதவும்.

--முழுமையை மனம் அனுபவிப்பதைத் தடை செய்கிறது. அதனால் எதிரானதையும் அனுபவிக்க முடியும்.

--தீமையை விலக்கினால் நன்மையையும் விலக்க வேண்டி வரும். (நாட்டில் லஞ்சத்தை முழுமையாக விலக்க முடியுமென்றால் எல்லா development activitiesஉம் உடனே நின்றுவிடும்.)

--லீலைக்கு ஜீவாத்மாவின் அனுமதியும், பரமாத்மாவின் அனுமதியும் தேவை. (எந்தக் காரியத்திற்கும், சிறியது பெரியதானாலும், இந்த இரண்டு அனுமதியில்லாமல் நடக்காது.)

--பிரம்மத்திற்கு எதையும் சுயமாக வெளிப்படுத்தும் உரிமை உண்டு.

சிரமம் அதிகமானால், ஆனந்த அனுபவமும் அதிகமாகும்.

பிரபஞ்ச மாயை

--ஜடமனம் எதையும் நம்ப மறுக்கும்.

- உயிரின் மனம் மாயையை நம்பும்.

சிந்தனைக்குரிய மனம் பிரம்மத்தை நாடும்.

- ஜடம் என்பது உடல்; தொட்டால் அறியும்; தொடாவிட்டால் அறியாது. கண்ணை மூடிக்கொண்டால் எதிரிலுள்ள ஸ்டூல் தெரியாது. தெரியாது என்பதால் இல்லை என்கிறோம். கையால் தொட்டுப் பார்த்தால் ஸ்டூல் இருக்கிறது என்கிறோம். ஜடமான உடலுக்குத் தான் தொட்டுப் பார்க்க முடியாத எதுவும் இல்லை என நம்பும். எதையும் நம்பமுடியாத தத்துவத்திற்கு agnosticism எனப் பெயர்.

- உயிர் உற்சாகமுள்ளது. எதையும் கற்பனை செய்யும் திறனுள்ளது. கற்பனையில் தெரிந்தால் அதற்கு உயிர் வரும்; அதை நம்பும். அது உண்டா, இல்லையா என்பது கேள்வியில்லை. கற்பனை மகிழ்ந்தால் கருத்து ஏற்கும். உள்ளதையே இம்மனம் கற்பனையால் மட்டும் ஏற்க வல்லது. அதனால் இதற்கு மாயை இதமாக ஏற்புடையது.

- சிந்தனையின் இலட்சியம் இருப்பதன் அடிப்படையைக் காண்பது. ஆராய்ச்சியை நடுவில் நிறுத்தாவிட்டால் சிந்தனை பிரம்மத்தில் முடியும்.

--பகவான் மாயை என்ற தத்துவத்தை மறுத்து அனைத்தும் சத்தியம் என்ற கொள்கையை நமக்களிக்கிறார்.

--கனவு பொய்யன்று, ஆவி ரூபங்களும் பொய்யல்ல.

கனவு அடிமனத்திற்கு உண்மை.

ஆவிரூபங்கள்ள்ளதின் பிரதிநிதிகள்.

--ஆதியான ஜீவியம் மாயையை உற்பத்தி செய்யும். அஞ்ஞானத்தின் கருவியாக மனத்தை உற்பத்தி செய்யும். மனம் மாயையைக் கைவிட்டு, பிரம்மத்துடன் இணைய வல்லது.

இக்கொள்கையை பகவான் ஏற்கிறார்.

சத்தியமும், பிரபஞ்ச மாயையும்

--மனிதன் மறுக்கலாம். பார்ப்பதை மறுக்கலாம். பார்வையை மறுக்கலாம். பார்ப்பவனையும் மறுக்கலாம்.

--உலகில் தூய்மையான அக்ஷரமான சத்தியம் உண்டு. மாயையான உலகமும் உண்டு.

--பிரம்மத்தின் நிலைகள்:

1) ஜீவன் (Self) என்பது பிரம்மம்.

2) உலகிலுள்ள அனைத்தும் பிரம்மம்.

3) ) உலகில் உள்ள அனைத்தும் ஜீவன்; ஜீவனால் பார்க்கப்படும் ஜீவன் - அதை 4 நிலைகளில் காண்கிறது.

--உபநிஷதம் கூறும் மூன்று நிலைகள்

1) அகம், புறமற்ற பரமாத்மா.

2) ஒளிமயமான சமாதியில் பரமாத்மா திரளான ஜீவியமாகிறது.

3) அகமும் புறமுமான ஜீவன்.

--புத்தர் போட்ட முட்டுக்கட்டையை உடைக்க சங்கரர் வாதம் பயன்பட்டது. ஆனால் அதனால் முடிவான தீர்வைத் தர இயலாது.

--அறிவு கட்டிய அத்தனைக் கோபுரங்களும் தீர்க்கமான ஆன்மீக அனுபவத்தால் மாயமாய் மறையும்.

--தெய்வீக மனத்திற்கும் சத்தியஜீவியத்திற்குமிடையே ஒரு சுமுகம் உண்டு.

தொடரும்...

****.
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

தனிமனிதனுடைய சுயநலம், இலாபம், அகந்தைக்கு ஆதரவு இல்லாத எதுவும் பூர்த்தி அடையாது. இறைவனுடைய பணிக்கு இவையெல்லாம் விலக்கு. அகந்தைக்குரிய வேலை எதுவும் இறைவனுக்குச் சேவை செய்யாது. அகந்தையை அழித்தே அதைச் செய்ய முடியும். அழிக்க உரிமையுள்ள அகந்தை நம் சொந்த அகந்தை மட்டுமேயாகும்.

அகந்தையை அழிப்பதே சேவை.

அழிக்கவேண்டியது சொந்த அகந்தையே


 

 

 

 
 



book | by Dr. Radut