Skip to Content

06.சாவித்ரி

சாவித்ரி

P.72,73 Late will he know, opening the mystic script

புதிரான அக்ஷரத்தைக் கண்டு, மெதுவாக அறிவான்.

. புலப்படாத துறையில், இல்லாத துறைமுகம்.

. அவள் எனும் அஸ்திரம் தாங்கி அவனெழுந்து போகிறான்.

. இறைவனின் பெருநகரில் புதுமெருகு பெற்ற உடலின் புதுமனம்.

. பெரியதன் மாளிகையில் அழிவற்றதின் அரியாசனம்.

. அணுவும் அகண்டமும் இணைந்ததின் இயல்பு.

. முடிவற்ற காலமெனும் பெருவெளியில் உப்பான விரயம்.

. வழிதவறிய அவன் கலத்தைக் கடத்தும் கடலெனும் அவள் காற்று.

. பிரபஞ்சத்தின் பிரவாகம் வழிநடத்தும் அவன் பாதை.

. அவனைச் சூழ்ந்த வதந்தி, ஆபத்தின் அழைப்பு.

. பாதை அவளுடையது, பயணம் அவனுடையது.

. வாழ்வும், மரணமும், மற்றவர் வாழ்வும் அவன் கடந்து செல்வது.

. விழிப்பில் ஆரம்பித்த பயணம் தூக்கத்திலும் தொடரும்.

. சூட்சுமத்தைக் கடந்த அவள் சக்தி அவனை உந்தும்.

. புதிரான பயணம் முடிவான முகம் கண்டதில்லை.

. அவள் சிருஷ்டியின் கதி கட்டுப்பட்ட விதி.

. பயணம் பெரியது, ஆரம்பிக்கலாம், முடிக்க முடியாது.

. ஆத்மாவுக்கு இருள் மறையும்வரை இருப்பது அவசியம்.

. இறைவனின் காலை இருளின் மாலையை ஏற்றது.

. இயற்கையுள்ளவரை இருப்பவன் இவன்.

. அவனும் அவளும் ஒன்றென்பது உறுதி.

. தூக்கத்தில் அவளை அவன் மார்பில் தாங்குகிறான்.

. எவர் போனாலும், அவன் போவதில்லை.

. அறியமுடியாத அனந்தத்தில் அவளுடைய அரவணைப்பு.

. செய்ய வேலையுண்டு, அறியும் சத்தியம் உண்டு.

. ஆட்டம் உண்டு, புதிரும் நிறையும்,

. காளியின் களியாட்டத்தில் கணக்கும் உண்டு.

. நினைத்ததுபோல் அவள் ஆடும் பெரிய ஆட்டத்தில் இலக்குண்டு.

. வாழ்வு பிறந்ததிலிருந்து இதுவே அவள் அறைகூவல்.

. இறைவனின் சித்தம் அவள் ஆட்டத்தால் சூழப்பட்டது.

.பெயரறியாத சூன்யத்திலிருந்து பெயர்ந்து எழுந்த பேர்.

. புவியின் தவம் வேரூன்றிய இடத்தில் தட்டி எழுப்பும் சத்தியஜோதி.

. ஊமை உலகத்தின் உள்வெளியில் எழும் பேசாமடந்தை.

. மலைப்பாம்பின் நித்திரையில் எழுந்த அழிந்த சக்தி.

. காலத்தைக்கடந்த கண்கள் காணும் காலம்எனும் திடல்.

. திரை விலகி வெளிவந்த உலகின் இறைவன்.

. தூய்மையான அனந்தம் துவக்கும் காட்சி.

. ஆத்மா தாங்கும் அவனியின் பாரம்.

. மனமழிந்த லோகத்தில் விதையென முளைத்த இறைவனின் தலைப்பு.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

பரம்பொருள் நம்மைத் தீண்டாமல் நமக்குப் பரம்பொருள் சித்திக்காது. அவனால் முடியாததைச் சாதிக்க, சமூகம் உதவாமல் மனிதனால் சாதிக்க முடியாது. தனிமனிதனுடைய ஆர்வமே வளர்ந்து சமூகத்தின்மூலம் அவனிடம் மீண்டும் வருகிறது. மனிதனே ஆரம்பம்.

பரம்பொருளால் சித்திக்கும் பரம்பொருள்.


 



book | by Dr. Radut