Skip to Content

12.ஆசை வெட்கமின்றிக் கேட்கும்

ஆசை வெட்கமின்றிக் கேட்கும்

-ஆசையென உள்ளே எழுந்தால் அதனுடன் அவசரம் வரும்.

-ஆசைக்கும், அவசரத்திற்கும் வெட்கமோ, பொறுமையோ இருக்காது.

-அறிவற்றவனுக்குத் தேவையெழுவது ஆசையாகும்.

-தேவை தெளிவற்றவனுக்கு வந்தால் ஆசையால் பூர்த்தி செய்ய முயல்வான்.

-ஆசை பூர்த்தியானால், பூர்த்தி செய்தவர் நினைவுக்கு வாராது.

-அவரை நினைவுபடுத்தினால் எரிச்சல் வரும்.

-நினைவு வந்தால் அவர் தனக்குத் தொந்தரவு செய்தவர் என நினைவு கூறும்.

-நன்றியைக் கேட்கும் சமயம் வந்தால் துரோகம் தோன்றும்.

-அந்த துரோகத்திற்கு ஆசைக்குண்டான அவசரம் உண்டு.

-அவசரப்பட்டு ஆசையைப் பூர்த்தி செய்தவரைத் துரோகத்தால் அழிக்க முனைந்து செயல்படுவான்.

-அவன் எண்ணம் விரைவில் பூர்த்தியாகும்.

-அவன் எண்ணம் அவனில் பூர்த்தியாகும் - அவன் தன்னை விரைந்து அழித்துக்கொள்வான்.

*******


 



book | by Dr. Radut