Skip to Content

13.வைக்கோல் கட்டு

வைக்கோல் கட்டு

படிக்காத கிராமத்துப் பெண். வயதாகிவிட்டது. கல்யாணப் பேச்சு எழும் நிலையில்லை. டவுனில் வீட்டு வேலைக்கு வந்தாள். பெரிய வீடு, அன்பர்கள் வாழும் இடம். சில ஆண்டுகளில் அவள் வாழ்ந்த வாழ்வுக்கும், இப்பொழுதுள்ள வசதிக்கும் சம்பந்தமில்லாதபடி உயர்ந்துவிட்டாள். அவள் வேலை செய்யுமிடத்தில் அவள் திருமணத்திற்குப் பெரிய உதவி செய்ய முடிவு செய்தனர். அவள் அத்தை அங்கு சமையல்காரி. பெண் ரோஷக்காரி. அடிக்கடி கோபித்துக் கொள்வாள். வீட்டு எஜமானி திருமணத்திற்குப் பெரிய உதவி செய்வதாகக் கூறியபின் அத்தையின் அதிகாரம் அதிகமாயிற்று. பெண்ணுக்கு வசதி, திருமண உதவி எல்லாம் தெரியவில்லை. அதிகாரம் வலுத்தவுடன் கோபம் அதிகமாயிற்று. அத்தை, "இப்படிப் பேசினால் கிராமத்திற்குப் போக வேண்டும். நிலத்தில் வைக்கோல் கட்டு தூக்க வேண்டும் என்று மறந்துவிடாதே'' என்றாள். பெண் வெடுக்கென,

"அதற்கென்ன, வைக்கோல் தூக்க வேண்டும் என்றால் தூக்க வேண்டியதுதான்" என்று கூறினாள்.

அனைவரும் வீட்டில் அன்பர் என்பதாலும், அன்பர்கள் கோபமாக, அறிவில்லாமல், சூடாக, மரியாதையை விடக்கூடாது என நினைத்துக்கொண்டு, அன்னை அதிர்ஷ்டத்தை விட்டு விலகுவதை தினமும் இதுபோல் பார்த்துக் கொண்டிருப்பதால், இவளுடைய சொல்,அறியாமையின் மந்திர ஒலியாக அவர்கட்குக் கேட்டது.

-ஆயிரம் காரணங்களுக்காக அன்பர் அன்னையை விட்டு விலகுகின்றனர்.

-அன்னையை நெருங்க அவர்கள் மனத்தில் "ஒரு காரணமும்"தோன்றுவதில்லை.

 

*******


 



book | by Dr. Radut