Skip to Content

03.சாவித்ரி

"சாவித்ரி"

மனிதன் ஆசாரம் எனக் கருதுவது ஆண்டவனை விலக்கும்

சுமார் 100 ஆண்டுகட்குமுன் தஞ்சாவூர் ஜில்லாவில் ஓர் ஆசாரமான குடும்பத்தில் சிரார்த்தம் நடந்தபொழுது தோட்டத்தில் தீண்டாதவன் வந்து பசிக்கிறது, சாப்பாடு போடுங்கள் என்றான். வீட்டுக்காரர் ஆசாரத்தில் சிறந்தவரானாலும், உண்மையான பக்திமான். தீண்டாதவனாக வந்தது யார் என அவர் உள்ளூர அறிவார். சாப்பாடு போடச் சொன்னார். அவர் மனைவி சாப்பாடு போட்டார். வந்த விருந்தினர் அனைவரும் எழுந்து சாப்பிடாமல் போய்விட்டனர். அன்று மாலை அவர் கிணற்றில் நீர் மட்டம் தானே ஏறி, வழிய ஆரம்பித்தது. ஆச்சரியம் நடப்பதை ஊரார் வந்து கண்டு வழியும் நீரைப் பிரசாதமாகப் பருகினர். தர்மபுரியில் மழைக்காகப் பிரார்த்தனை செய்தனர். மழை பெய்யவில்லை. 10 நாட்கள் கழித்து 15 மைல் தூரத்திலுள்ள வற்றிய கிணற்றில் நீர் மட்டம் ஏறியது. அது உப்பு நீர். எவரும் பயன்படுத்த முடியாது. அடுத்த, அடுத்த நாட்களில் பல கிணறுகளில் நல்ல தண்ணீர் 10 அடி, 15 அடி ஊறியது.

. சங்கரர் சண்டாளனை விலகச் சொல்லியபொழுது, "யாரை விலகச் சொல்கிறாய், சண்டாளனையா, அவனுள் உள்ள பெருமானையா?''என ஆண்டவன் கேட்டார்.

. அதுவே இராமானுஜருக்கும் நடந்தது.

. ஆண்டவன் வேறு, ஆசாரம் என நாம் அனுஷ்டிப்பது வேறு.

. உசிலம்பட்டியில் மழையில்லை, பிரார்த்தனை பலிக்கவில்லை என்று செய்தி வந்தபொழுது, "அன்னையை விட்டு மனதாலும், செயலாலும் விலகிய எவருடனும் தொடர்புகொள்ள மாட்டேன்'' என்று உறுதிபூண்டு பிறகு பிரார்த்தனை செய்தால் பலிக்கும் என்று கூறினேன். அப்படியே செய்தனர். மழை பெய்தது.

. மகாபாரதத்தில் சாவித்திரி எமனிடமிருந்து சத்தியவானை மீட்டாள்.

. ஸ்ரீ அரவிந்தத்தில் சாவித்திரியிடம் அவள் உள்ளிருந்து பல்வேறு ஆத்மாக்கள் வந்து, "நானே முழுமுதற் கடவுள். நான் சொல்வதைக் கேள்'' என்றனர். "நீ என் ஆத்மா என்பது உண்மை. ஆனால் நீ என் முழு ஆத்மா இல்லை. எனது ஆத்மாவின் பகுதி; அதனால் நீ கூறியதை நான் முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது'' எனப் பல கட்டங்களைச் சாவித்திரி தாண்டி வருகிறாள். எமனைச் சந்திக்கிறாள். நீண்ட வாதம் செய்கிறாள். எமன் கரிய இருளாக இருந்தவன் ஒளிமயமாக மாறிக் கரைகிறான். கரைந்தபின்னும் பழைய பாஷையைப் பேசுகிறான்.சாவித்திரி எமனை அழித்து சத்தியவானை மீட்கிறாள்.

. ஸ்ரீ அரவிந்தம் ஆண்டவனின் சக்தி. வற்றிய கிணற்றில் ஏராளமாக நீர் ஊறும் சக்தி. பட்ட மரம் துளிர்க்கும் சக்தி.

. நம் வாழ்வில் அச்சக்தி செயல்பட மனம் சத்தியத்தை முழுமையாக ஏற்று, முழுமையாகப் பின்பற்ற வேண்டும். அன்னையை விட்டு செயலாலும், மனதாலும் விலகிய எவருடனும் தொடர்புகொள்ளக் கூடாது.

******
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

சமூக மாறுதல், மனநிலை மாறுதல், ஜீவியம் மாறுதல் ஆகியவற்றை மேல்மனம் ஏற்றுக்கொள்ள விரும்பினால் உடனே ஏற்றுக்கொள்ளும். ஆழ்ந்த மனம் அதுபோல் எளிதில் ஏற்றுக்கொள்ளாது.

மேல்மனம் ஏற்பதை ஆழ்மனம் மறுக்கும்.


 



book | by Dr. Radut