Skip to Content

07.லைப் டிவைன் - கருத்து

The Life Divine - கருத்து

The Knowledge of the self in the Non-birth and Non-becoming and the changeless spirit within us is immortality.

அக்ஷர பிரம்மத்திலும், க்ஷர பிரம்மத்திலும் ஆத்மாவை அறிவது அமரத்துவம்

. மோட்சம் பெறும் தவசி அக்ஷரப் பிரம்மத்தில் தன் ஆத்மாவை அடைக்கலம் செய்கிறார்.

. கிருகஸ்தன் க்ஷரப் பிரம்மத்தைத் தன் ஆத்மாவாகக் காண்கிறான்.

. வேத ரிஷிகள் கண்ட மோட்சம் மேற்சொன்னவாறு அக்ஷர, க்ஷரப்

பிரம்மங்களில் தங்கள் ஆன்மாவைக் கண்டதாகும்.

. அதுவே இயற்கையோடு இணைந்த வாழ்வு.

. ரிஷிகள் அதை உடலில் கண்டனர்.

. பகவான் அதையே சத்தியஜீவியத்தில் காணவேண்டும் என்கிறார்.

உதாரணம்:

. கோபம் வாராதபொழுது நிதானமாக இருக்கலாம்.

. கோபம் வரும்பொழுது நிதானம் தவறும்.

. நிதானத்தை இழக்காதவர்க்கு உள்ளும் நிதானமிருக்கும்.

. கோபமே வாராதவருக்கு உள்ளும், புறமும் நிதானமிருக்கும்.

. அவருக்கு வேத ரிஷிகள் பெற்றதைப் பெறும் தகுதியுண்டு.

. பணமில்லாதபொழுது மனம் தாராளமாக இருப்பது, பணம் வந்தபின்

இருக்காது. பணம் வந்தபின் முந்தைய தாராளம் அந்நிலையைக் குறிக்கும்.

. போலீஸ்காரனைப் பிச்சைக்காரன் வம்புக்கு இழுத்தால், போலீஸ்காரனுடைய நிதானம் அதுபோன்றது.

. கணவனை மனைவி அதிகாரம் செய்யும்பொழுது எரிச்சல் வாராமலிருப்பது கணவனுக்கு நிதானம்.

. நேருவுக்குப் பொறாமை என M.P..யின் குற்றச்சாட்டு நேருவுக்கு சிரிப்பு மூட்டுவது, அதுபோன்றது.

. ஈராக் அமெரிக்காவுக்குச் சவால் விட்டால், அமெரிக்கா கொதித்து எழாதது, அதுபோன்றது.

. புயல் அடிக்க ஆரம்பித்தால், ஒருவர் மனம் நிதானத்தை நாடிப் போனால், புயல் அந்த நிதானத்தால் அடங்கும்.

. சுத்தமான அதிகாரிக்கு கறுப்புப் பண முதலாளி அவர் சுத்தத்தால் மனம் மாறிப் பணம் தர முன்வாராமல் விஷயத்தைப் பேசுவது வேத ரிஷிகள் பெற்ற யோகத் தகுதிக்கு இவர் உரியவர் எனப் பொருள்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

தன் பழக்கங்களையும், உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் விடுவதே சிரமம். அன்னையை அழைப்பது அத்தனை சிரமம் இல்லை என்பதை அவர் காண்பார்.

அன்னை எளிது. மாற்றம் எளிதன்று.

ஸ்ரீ அரவிந்த சுடர்

நம் நிலை, காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. நிலையை மாற்றவோ, காலத்தைச் சுருக்கவோ, நாம் காலத்தைக் கடக்க வேண்டும். மனத்தையே கடப்பது சிறந்தது.

நிலையை மாற்றுவதற்குப் பதிலாக காலத்தைக் கடப்பது நல்லது.


 


 


 

 


 


 

 



book | by Dr. Radut