Skip to Content

09.அஜெண்டா

“Agenda”

It teaches Mother as one would teach a small child or animal.

அது அன்னைக்கு சிறு குழந்தைக்குக் கற்பிப்பதுபோல - விலங்குக்குக் கற்பிப்பதுபோல- எல்லாச் சிறு விஷயங்களையும் தொடர்ந்து நாம் கற்கும்வரை கற்பித்தது

. அது என்பது சத்தியஜீவியம்.

. புதுவைக்குப் போ' என்ற இறைவன் குரல் பகவான் ஸ்ரீ அரவிந்தருக்கு விபரம் கூறவில்லை.

. அழுத குழந்தை சம்பந்தருக்குப் பார்வதி பால் கொடுத்தார். சிவபெருமான் பரவை நாச்சியாரிடம் தூது சென்றார்.

. ஒரு சொல்லால் உத்தரவு தருவதிலிருந்து விவரமாக என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எப்பொழுது செய்ய வேண்டும், எந்த அளவில் செய்ய வேண்டும் என்பதுவரை சொல்வதும் சத்தியஜீவியத்திற்குரியது. எந்த அளவில் பெறுகிறோம் என்பது நம்மைப் பொருத்தது.

. ஏதோ ஒரு சமயம் இந்த உண்மையை தங்கள் வாழ்வில் பார்க்க விரும்புபவர் இந்த எண்ணத்தை அல்லது ஆசையைச் சமர்ப்பணம் செய்தால், அன்று நம் கை நம்மையறியாமல் எந்த டிரஸ் போட்டுக்கொள்ளலாம் எனக் காட்டுவதையும், அதை ஏன் போட்டுக்கொண்டோம் என்பதையும் காட்டும்.

. 1972இல் பகவான் ஸ்ரீ அரவிந்தர் நூற்றாண்டிற்காக அவர் எழுதியவற்றை 30 வால்யூம் ஆன செட்டாகப் பிரசுரிக்க அன்னை விரும்பினார். தத்துவம் என்பதால் இப்புத்தகங்கள் விற்கா. The Life Divine, Synthesis of Yoga தனிப் புத்தகமாக விற்க 1951இல் அச்சிட்டவை 1970வரை விற்கமுடியவில்லை. இந்த செட்டை யார் வாங்கப் போகிறார்கள், எப்படி விற்பது, எத்தனை செட் அச்சடிப்பது, 100 செட் விற்பதே அரிது என அச்சாபீஸ் சாதகர்கள் தயங்கிய காலத்தில் அன்னை 5000 செட் அச்சடிக்கச் சொன்னார்கள். அவை விற்றுப்போய் அடுத்த செட் 35 vol.இல் தயாராகிவிட்டது.

.சொத்து வாங்குபவர் அன்னையை நம்பினால், இது வேண்டாம், அதை வாங்கு என்பதைக் காட்டுவதை அன்பர்கள் கண்டிருக்கிறார்கள்.

. எந்த வக்கீலிடம் கேஸ் போகவேண்டும் என்பது அன்னை கட்சிக்காரருக்குக் காட்டுவது அற்புதமாக இருக்கும்.

. ஆப்பரேஷனுக்குப் போக இருப்பவருக்கு எந்த டாக்டரிடம் போகவேண்டும் என்பது ஆப்பரேஷன் இல்லாமல் முடிகிறது.

. இந்த விமானத்தில் ஏறாதே, அடுத்த பஸ்ஸில் போ என்பதை அன்னை உணர்த்தும்விதம் அன்பர்கள் அறிந்தது. அந்த விமானம் பற்றி எரிந்தது. அந்த பஸ் விபத்திற்குள்ளாயிற்று.

. பரீட்சைக்கு எந்த கேள்விகளைப் படிப்பது என்பதையும் அன்னை அவருடைய பாணியில் கூறுகிறார்.

*******


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அழைப்பை மீறிய பயம், பெரு முயற்சியை மீறும் எண்ணம் ஆகியவை நம் அடிப்படை நம்பிக்கையை விரிவுபடுத்த வேண்டும் என்று அறிவிக்கின்றன. அதைச் செய்தால் பயம் மறைகிறது. சரணாகதியை எதிர்க்கும் எண்ணம் சரணடைகிறது.

அழிய மறுக்கும் பயம், சரணாகதியை எதிர்க்கும் எண்ணம்

அடிப்படையில்லை என அறிவிக்கிறது.


 


 



book | by Dr. Radut