Skip to Content

01. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

எனதன்புள்ள அன்னை அவர்களுக்கு மிகுந்த பணிவுடன் எழுதிக்கொள்வது,

நான் இந்த கிளைக்குப் பதவிஉயர்வு பெற்று 6.12.04 அன்று வந்தேன். முழுவதுமாக சார்ஜ் எடுக்கும்முன், ஒரு பார்ட்டி தான் வாங்கிய என்.எஸ்.எல். லோன் பணத்தைக் கட்டிவிட்டு, திரும்ப என்.எஸ்.எல்.ஐக் கேட்டார். ஏற்கனவே இருந்த மானேஜர் விடுப்பில் உள்ளார். இரண்டு நாட்கள் (3.1.05, 4.1.05) முழுவதும் தேடியும், அந்தக் குறிப்பிட்ட என்.எஸ்.எல். கிடைக்கவில்லை. நேற்று மாலை 8 மணிவரை தேடினேன். பிறகு நான் வசிக்கும் வீடு சென்றேன். விளக்கு ஏற்றினேன். தாங்கள் கூறியபடி, ஒரு வெள்ளைத்தாளில் பிரச்சினையை எழுதி ஸ்ரீ அரவிந்தர் படம் முன் வைத்தேன். இரவில் கவலைப்படவில்லை. பிடிவாதமாகக் கவலையை மறந்தேன், தங்கள் அறிவுரைப்படி. இன்று, மீண்டும் மதியம், திரும்ப ஒரு செட் டாக்குமெண்ட் பார்க்கும்போது நான் தேடிய அதே என்.எஸ்.எல். லோன் வேறு ஏதோ ஒரு டாக்குமெண்ட்டுடன் pin செய்யப்பட்டு, அதுவும் பின்புறமாக, மிகவும் ஆச்சரியமாக, என் கையில் சிக்கியது. எல்லாம் அன்னையின் அருள்! என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி!

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

எதை நம்மால் விடமுடியவில்லையோ, அது நாமுள்ள நிலையைச் சுட்டிக்காட்டும் (.ம்.) பாசம், சுபாவம், தமக்குள்ள முக்கியத்துவம்போன்றவை.

விடமுடியாத நம் நிலை.


 


 


 



book | by Dr. Radut