Skip to Content

11.அன்னையை அனுப்புதல்

அன்னையை அனுப்புதல்

நாம் ஒரு காரியத்தைச் செய்வதற்குப் பதிலாக அதை அன்னையைச் செய்யச் சொல்வது சமர்ப்பணம். நாம் ஓரிடத்திற்குப் போவதற்குமுன் அன்னையை அங்கு அனுப்புவது நாம் நம்மைவிட அன்னையை அதிகமாக நம்புவதாகும். இது அன்னை கூறிய முறை.

ஓர் அகில இந்தியக் கம்பனி. அது சுமார் 60 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இரண்டாம் தலைமுறையில் கம்பனி இரண்டாகப் பிரிந்தது. பழைய இலாபமில்லை. நஷ்டம் வந்து, சிரமப்பட்டு, மீண்டும் எழுந்துவரும் நேரம். முதலாளிக்கு அடுத்தாற்போல் ஒவ்வொரு பகுதி தலைவருக்கும் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம்வரை சம்பளம். வருமானத் துறைத்தலைவருக்குப் பொறுப்பு அதிகம். கம்பனி வருமானம் ஓராண்டில், சில மாதங்களில் உயர்ந்தும், சில மாதங்களில் மிகக் குறைந்துமிருக்கும்இது தொழிலுக்குரிய சீசனைப் பொருத்தது. பகீரதப் பிரயத்தனம் செய்தால் பெருகும் நஷ்டம் குறையும். இந்நிலையில் வருமானத்துறைத்தலைவர் அன்னையைப்பற்றி அறிந்தார். அன்னையை அனுப்புவது பயன்படும் எனக் கண்டார். துறை வருமான உயர்வுக்கு சிப்பந்திகட்கு (incentives) உபரி ஊதியம் தர முடிவுசெய்தார்கள். அது வருமானம் குறைவதைத் தடுக்கிறது. உயர்வு இருந்தால் 2%, 4%என சிறிதளவு இருக்கிறது. புதிய மானேஜ்மெண்ட் முறைகள் பெரும்பாடுபட்டு சிறுபலனைத் தருகின்றன. வருமானத்துறைத்தலைவர் அன்பரில்லை. அன்னை மீது பக்தியில்லை. ஆனால், பலனுக்காக அன்னையை வாடிக்கைக்காரர்களுக்கு அனுப்ப முடிவு செய்தார். ஊழியர்களுக்கு அன்னையை அனுப்பினார். ஒரு மாதம் நடந்தது கீழ்க்கண்டது:

- கடந்த வருஷங்களில் ஒவ்வொரு மாதத்திலும் வந்த வருமானத்தின் சராசரிப்படி அம்மாதத்திற்குரிய தொகை 1 கோடியே 30 இலட்சம். ஊழியர்கள் இதை உயர்த்த முடிவு செய்தனர் ( average earnings for this month).

- ஊழியர் கூட்டத்தில் ஒவ்வொருவரும் தங்கள் தொடர்பான வாடிக்கைக்காரர்களிடம் வருமானம் அதிகபட்சம் பெற்றால் எவ்வளவு வரும் எனக் கணக்கிட்டு, கூட்டி, 1 கோடியே 60 இலட்சம்என்று கண்டு, அதை எட்டிப்பிடிக்க முடிவுசெய்தனர் (target).

- துறைத்தலைவர் அனைவருக்கும் அன்னையை அனுப்பினார்.

- மாதக்கடைசியில் தொகையைக் கணக்கிட்டனர். அது 1 கோடியே 94 இலட்சம் வசூலாகியிருந்தது.

- வருஷத்தில் குறைவாக வசூலாகும் மாதம் இது. இத்தொகை கடந்த 5, 6 ஆண்டுகளில் காணாத ஒன்று.

அன்பரல்லாதவரும், பக்தியில்லாமல், பலன் கருதி அன்னையை நாடிப் பலன் பெறுவது மேற்சொன்னது. இதுவே அன்னை.

*******



book | by Dr. Radut