Skip to Content

06.அஜெண்டா

"Agenda"

Gandhji's method is moral violence, worse than physical violence.

மகாத்மா காந்திஜி பயன்படுத்தியது வன்முறை. அதாவது,

மனத்தை வலுக்கட்டாயப்படுத்துவது;

உடலை வருத்துவதைவிட அது அதிகக் கொடுமை.

. "இன்றுபோய் நாளை வா'' என்றான் இராமன், எதிரியான இராவணனை. நிராயுதபாணியிடம் போர் தொடுப்பது அதர்மம் என்பது அன்றிலிருந்து இன்றுவரை உலகம் பின்பற்றும் யுகதர்மம்.

. ஹிட்லர் இராட்சசன். ஐரோப்பிய நாடுகள் அவனை எதிர்த்து நிற்கத் திராணியற்றவை. சரணடைந்து விட்டன. அத்தனை நாடுகளும் ஹிட்லர் பக்கம். இங்கிலாந்தின் உற்ற நண்பன் பிரான்ஸ் தோற்றது. இங்கிலாந்தும் சரணடையும்என உலகம் எதிர்பார்த்தது. இங்கிலாந்திடம் விமானம் இல்லை, tank இல்லை, பணமில்லை,ஆள் பலமில்லை. அமெரிக்கா ஆயுதங்களை விலைக்கு விற்கிறது.போரில் இன்னும் நேரடியாகச் சேரவில்லை. இங்கிலாந்தும் தோற்றால் உலகம் ஹிட்லருக்கு அடிமையாகும். 60 இலட்சம் யூதர்களை உயிருடன் கொளுத்தியவன் ஹிட்லர். அவன் ஆட்சிக்கு வந்தால், அடுத்த 500 ஆண்டுகட்கு மக்கள் அடிமைகளாவார்கள். ஈசல் போல்அழிக்கப்படுவார்கள்.

. இங்கிலாந்து இந்திய தேசீயக் காங்கிரஸின் ஒத்துழைப்பைக் கேட்டது. மகாத்மா மறுத்துவிட்டார். மேலும், அந்நேரம் போராட்டம் தொடங்கினார்.

. எதிரியின் எதிரி என் நண்பன் என்ற சட்டம் அறிவுடையதன்று.

. எதிரி சிக்கலில் மாட்டியுள்ள பொழுது அவனை பின்முதுகில் குத்துவது தர்மமில்லை, வன்முறை என ராஜாஜி கூறி, மகாத்மாவை எதிர்த்து, காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்து, எதிர்ப்பிரச்சாரம் செய்தார்.

. இங்கிலாந்து தோற்றால், இந்தியா அழியும்.

. வன்முறை என்பது உடல் வலிமையுள்ளவன் அடுத்தவனுக்கு விடும் சவால்.

. அது நேரடியான சவாலானால், அது சட்டத்திற்குட்பட்ட போராட்டம்.

. போர் சூரியன் மறைவுக்குப்பின் இல்லை. பெண்களும், குழந்தைகளும் விலக்கு.

. நிராயுதபாணியிடம் போர் தொடுக்கக்கூடாது. இவை போருக்குரிய தர்மம்.

. உடலைவிட மனம் உயர்ந்தது.

. Gentleman உயர்ந்தவன் என்பவன் பிறர் மனம் புண்படச் செயல்படமாட்டான்.

. உடல் கருணையை அறியாது. மனம் கருணையை அறியும்.

. கருணையான மனம் வன்முறையை மேற்கொள்வது கடுமையான உடல் அதை நாடுவதைவிடத் தவறானது.

. காந்திஜியின் முறை பிறர் மனம் மாறும் முறை. நடைமுறையில் அவர்களை வலுக்கட்டாயப்படுத்துவது. அதனால் அது வன்முறையைச் சேரும்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

உணர்வு சிந்தித்தால் எதிர்பார்க்கிறோம்.


 


 


 


 


 

51


 


 


 



book | by Dr. Radut