Skip to Content

07.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                             (சென்ற இதழின் தொடர்ச்சி....)                       கர்மயோகி
 

XIII. The Divine Maya

Page No.117, Para No.12.

13. தெய்வீக மாயை

Ours is an ascending point of view.

நமது பார்வை பரிணாமத்திற்குரியது.

We may say the Real is behind all that exists.

உலகின் பின்னால் சத்தியம் உண்டுஎன்று அது கூறும்.

It expresses itself immediately.

அது உடனடியாக வெளிப்படும்.

It is expressed as an ideal.

அது இலட்சியமாக வெளிப்படும்

The Ideal is a harmonised truth of itself.

இலட்சியம் என்பது சத்தியத்தின் சுமுகம்

The Ideal throws out a phenomenal Reality.

இலட்சியத்திலிருந்து

தோற்றம் எழுகிறது.

It is a variable of conscious being.

அது சத்புருஷனுடைய மறுஉருவம்.

It is drawn towards the essential Reality.

மீண்டும் அது தன் ஆதி சத்தியத்தை நாடும்.

It is inevitable.

அது தவிர்க்க முடியாதது.

At last tries to recover it entirely.

இழந்த சத்தியம் முடிவாகத் தன்னை மீண்டும் பெற முயல்கிறது.

It may be through a violent leap.

அதைத் தீவிரமாகச் செய்யலாம்.

Or it may be normal.

சாதாரணமாகவும் செய்யலாம்.

It can be through the Ideal.

இலட்சியம்மூலமாகவும் செய்யலாம்.

The Ideal put it forth.

ஆரம்பத்தில் அது இலட்சியத்திலிருந்துதான் வெளிப்பட்டது.

Human existence is imperfect.

மனிதவாழ்வு குறையுடையது.

The phenomenon explains that imperfection.

இத்தோற்றம் அக்குறையை விளக்கும்.

Human existence is seen by the Mind.

நாம் வாழ்வை மனத்தால் காண்கிறோம்.

Mind has an instinctive aspiration.

மனத்திற்கு இயல்பான ஆர்வமுண்டு.

It moves towards perfectability.

அது பூரணத்தை நாடும்.

It is ever beyond itself.

பூரணம் இலட்சியத்தைக்கடந்தது.

Harmony is concealed in the Ideal.

இலட்சியத்துள் சுமுகம் உண்டு.

The Spirit has a supreme surge.

ஆத்மாவின் வேகம் அதிதீவிரமான வேகம்.

It aims at the transcendental.

அது பரமனை நாடுகிறது.

It lies beyond the ideal.

பரமன் இலட்சியத்தைக் கடந்தது.

Our consciousness has some facts.

நமது ஜீவியத்திற்கு விவரம் உண்டு.

It has a constitution.

அதற்கொரு சட்டம் உண்டு

They compel us to a suppostion.

சட்டத்தை ஏற்றால் ஓர் அடிப்படையை ஏற்கவேண்டும்.

We assume a triple order.

நாம் கூறுவது மூன்று நிலைகளில் உள்ளது.

The antithesis we see is thus neglected.

நாம் காணும் முரண்பாடு அப்பொழுதிருக்காது.

It is irreconciliable.

அதைச் சேர்க்கமுடியாது.

It is the antithesis of a mere Absolute and a reality.

பிரம்மத்திற்கும், சிருஷ்டிக்கும் உள்ள முரண்பாடு அது.

Page No.118, Para No.13


 

Universe exists.

பிரபஞ்சம் உண்டு.

It is an expanding infinite.

அது பரந்து விரியும் அனந்தம்.

Mind is a dividing instrument.

மனம் துண்டு செய்யும் கருவி.

It cannot explain existence.

மனத்தால் சத்தை விளக்கமுடியாது.

There is Infinite consciousness.

அனந்த ஜீவியம் உள்ளது.

It creates the world.

அது உலகை சிருஷ்டிக்கிறது.

It must become a faculty.

அது திறனாக வேண்டும்.

It becomes an infinite faculty of knowledge.

அது ஞானத்தை அனந்தமாக அறியும்.

That is what we call omniscience.

அதை நாம் எல்லாம் அறியும் திறனென்கிறோம்.

Mind is not a faculty of knowledge.

மனம் ஞானத்தின் கருவியன்று.

It is not an instrument of omniscience.

எல்லாம் அறியும் கருவியுமில்லை

It seeks knowledge.

மனம் ஞானத்தைத் தேடுகிறது.

It has the faculty for it.

அதற்குரிய திறன் மனத்திற்குண்டு.

It gains by expressing the knowledge gained.

பெற்ற ஞானத்தை வெளியிடுகிறது.

That expression is a form.

அது ரூபம்.

It is form of relative thought.

அதற்கு எண்ணத்தின் சாயலுண்டு.

The expression creates capacity for action.

அதனால் செயல்படமுடியும்.

Often Mind finds knowledge.

சில சமயங்களில் மனம் ஞானம் பெறுகிறது.

But it cannot possess the knowledge it found.

பெற்றதை வைத்துக்கொள்ளும் திறன் அதற்கில்லை.

It retains a form of knowledge.

ஞானத்தின் ஓருருவத்தை மனம் பெறுகிறது.

Sri Aurobindo calls it a current coin of Truth.

ஸ்ரீ அரவிந்தர் அதை எண்ணத்தின் நாணயம் என்கிறார்.

It is not Truth itself.

அது முழு சத்தியமில்லை.

Mind keeps them in Memory.

பெற்றதை மனம் நினைவில் வைத்திருக்கிறது.

Mind does not know.

மனம் அறியாது.

Mind tries to know.

மனம் அறிய முயல்கிறது.

It knows in a dark shadow.

நிழல்போல் நிகழ்ச்சியை மனம் அறிகிறது.

It is a power of universal existence.

மனம் பிரபஞ்ச சக்தி.

It is a power of practical use.

அது பயன்படும்.

It creates an order of things.

அதனால் முறைப்படுத்தமுடியும்

Mind is not a power that knows.

அறியும் திறனதற்கில்லை.

It is not a power that guides.

அதனால் உலகை நடத்த இயலாது.

Mind has no power to manifest existence.

உலகை சிருஷ்டிக்கும் சக்தி மனத்திற்கில்லை.

Contd....

தொடரும்.....


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதன் சர்வஆரம்பப் பரித்தியாகியானால், ஜீவியம் தானே செயல்படும். சர்வஆரம்பத்தையும் பரித்தியாகம் செய்தபொழுது மேற்சொன்ன மூன்று சமர்ப்பணத்திற்கும் சேர்ந்த பலன் ஏற்படும்.

தானே ஜீவியம் செயல்படும் சர்வஆரம்பப் பரித்தியாகம்.


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

சர்வம் பிரம்மம். கல்லை சிருஷ்டிக்க இறைவன் மனிதனை சிருஷ்டிக்கும் அளவு முயல்கிறான். ஒரு வேலையின் கடைசிச் சிறுபாகத்தில் நுணுக்கம் வெளிப்பட்டால், நமக்கும் அது சற்றுத் தெரியும். இங்கு, பெரியவேலையும், சிறுவேலையும் சமம் என மனிதன் காணலாம். இது பிரம்மஞானம்.


 


 


 


 


 


 


 


 


 



book | by Dr. Radut