09.லைப் டிவைன் - கருத்து
லைப் டிவைன் - கருத்து
The Timeless Eternity and Time Eternity are the same Eternity in double status.
காலமும், காலத்தைக்கடந்ததும் ஒன்றின் இரு வேறு
அம்சமான தோற்றங்கள்.
. வியாசபாரதமும், வில்லிபாரதமும் ஒரே கதையின் இரு மொழிக் காவியங்கள்.
. 5 வயதுக் குழந்தை வளர்ந்து 50 ஆண்டுகள் நிரம்பினால், சிறுவனும், பெரியவரும் ஒரே மனிதனின் இரு பிராயங்கள்.
. இராமனும், கிருஷ்ணனும் ஒரே விஷ்ணுவின் இரு அவதாரங்கள்.
. புருஷனும், பிரகிருதியும் ஒரே ஜீவனின் இரு நிலைகள்.
. முதன்மந்திரியும், பிரதமமந்திரியும் ஒரே சர்க்காரின் இரு தலைவர்கள்.
. The Life Divineஉம், Synthesis of Yogaவும் ஒரே யோகத்தின் இரு முகங்கள்.
. அரபிக்கடலும், வங்காளவிரிகுடாவும் ஒரே ஜலப்பிரவாகத்தின் இரு கரைகள்.
. அண்ணனும், தம்பியும் ஒரே பெற்றோரின் இரு பிள்ளைகள்.
. சத்தும், சித்தும் ஒரே பிரம்மத்தின் இரு நிலைகள்.
. காலமும், இடமும் ஒரே ஜீவியத்தின் அகமும், புறமுமான தோற்றங்கள்.
. ஆத்மாவும், சத்தியமும் சத்தின் அகமும், புறமுமான இரு கட்டங்கள்.
. மாம்பலமும், திருவல்லிக்கேணியும் ஒரே சென்னையின் இரு பகுதிகள்.
. எண்ணும், எழுத்தும் ஒரே அறிவின் இரு தோற்றங்கள்.
. இந்தியாவும், பாக்கிஸ்தானும் பாரதமாதாவின் இரு பகுதிகள்.
. இராணுவமும், கடற்படையும் ஒரே சேனையின் இரு அங்கங்கள்.
. கல்லூரியும், பல்கலைக்கழகமும் ஒரே கல்வியின் இரு கட்டங்கள்.
. சரித்திரமும், பூகோளமும் ஒரே படிப்பின் - உலக அறிவு - இருபுறங்கள்.
. குறளும், வெண்பாவும் ஒரே செய்யுளின் இரு உருவங்கள்.
. பேப்பரும், பேனாவும் எழுத்துக்குரிய சாதனங்களின் இரு கட்டங்கள்.
. பிறப்பும், இறப்பும் ஆத்மவாழ்வின் ஆரம்பம், முடிவு என்ற கட்டங்கள்.
. அழகும், அன்பும் ஆனந்தத்தின் இரு வெளிப்பாடுகள்.
. ஏகனும், அநேகனும் - One and the many - ஒரே பிரம்மத்தின் இரு உருவங்கள்.
. கையும், காலும் ஓர் உடலின் இரு பகுதிகள்.
. இடக்கையும், வலக்கையும் கைகளே.
. அதேபோல் காலமும், காலத்தைக் கடந்ததும் அனந்தத்தின் இரு நிலைகளாகும்.
*******
ஸ்ரீ அரவிந்த சுடர்
மனிதமுயற்சி முழுமையானதன்று. தெய்வமுயற்சி முழுமையுடையது. மனத்தின்முயற்சி முழுமையானதன்று. உடலின் முயற்சி முழுமையானது. நம் ஆர்வத்தை உடல் அளவுக்கு உயர்த்தினால், நாம் தெய்வமாகிறோம். எல்லாக் கரணங்களிலும் ஆர்வத்தை உடல் அளவுக்கு உயர்த்தினால்
நாம் முழுமையாகத் தெய்வமாகிறோம்.
உடலுக்கு உயர்ந்த செயலின் உன்னதம்.
- Login to post comments