Skip to Content

1. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

 தமிழ்நாட்டுப் பழமொழிகளும், ஸ்ரீ அரவிந்தமும்

(மார்ச் 2008 இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

31. கற்றன் கேட்டலே நன்று.

  • கேள்வியைவிட ஞானம் உயர்ந்தது.

 32. குலவிச்சை கல்லாமல் பாகம்படும்.

  • பயில வேண்டிய பகுதியை எடுத்து மௌனத்திற்கு சமர்ப்பித்தால் பலன் இதை விளக்கும்.

33. பாம்பறியும் பாம்பின் கால்.

  • சமர்ப்பணம் பிரச்சினையின் வழியையும், மூலத்தையும் அறியும்

 34. அறிவில்லாதவர்களுக்கு நகரமும் காடு போன்றதே.

  • ஆர்வமற்றவர்க்கு அன்னைச் சூழலும் அர்த்தமற்றதாகும்.

35. பரிசழிந்தாரோடு தேவரும் ஆற்றல் இலர்.

(கொடை கொடுப்பவர்முன் தேவரும் தங்கள் ஆற்றலை இழப்பார்கள்).

  • தம்மை அர்ப்பணம் செய்பவர் (Self-giving) முன் தலைவரும் பணிய வரும்.

தொடரும்....

************

 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

கண்ணுக்குத் தெரிந்த சேவை நம்மை உயர்த்தும்.


 

தெரியாமல் செய்யும் சேவை புனிதப்படுத்தும்.


 


 


 


 
 

ஜீவியத்தின் ஓசை

  • எண்ணம் எழுந்து வெளி வரும் பொழுது மீண்டும் அதை உள்ளே அனுப்ப முடிவது மௌனம்.

  • எண்ணம் எழாத மௌனம் மனதைக் கடந்த மௌனம்.

  • தானே வருவதைத் தவிர்க்கக் கூடாது என்பது அன்னை சட்டம்.

  • எப்படிப் போனாலும் அன்னை சம்பந்தப்பட்ட விஷயம் நல்லதாகவே முடியும்.


  


 



book | by Dr. Radut