Skip to Content

8. ஆன்மாவை அழைத்தல்

 

ஆன்மாவை அழைத்தல்


 

N. அசோகன்

 

நாம் ஆன்மாவை அழைக்கும்போது, அது அற்புதம் விளைவிக்கும் வகையில் செயல்படுகிறது. அது எப்படி சாத்தியமாகிறது? மரபு வழி பார்க்கும்பொழுது இதற்குப் பல வழிகளிருக்கின்றன. மந்திரத்தை ஜபிப்பது மிகவும் பரவலாகத் தெரிந்த ஒரு முறையாகும். மந்திரங்களை அவற்றிற்குரிய முறையோடு உச்சரிக்கும்பொழுது, அவை மிகவும் சக்தி வாய்ந்ததாகச் செயல்படுகின்றன. இருப்பதிலேயே மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் "ஓம்' என்பதாகும். இம்மந்திரத்திற்கு "சப்த பிரம்மம்' என்று பெயர். மாற்றமில்லாத ஆன்மா படைப்பிற்குள் வரும்போது மாற்றமுள்ளதாக மாறுகிறது. இம்மாற்றம் மூன்று கட்டங்களாக நிகழ்கிறது. மூன்றாம் கட்டம் துவங்கும்போதுதான் "ஓம்' என்ற சப்தம் பிறக்கிறது. இந்த "ஓம்' மந்திரத்தை உச்சரிப்பதிலேயே அந்தந்த ஆன்மீகப் பிரிவிற்கேற்றபடி வித்தியாசங்கள் உள்ளன. ஒரு வகுப்பினர் "ஓம்' மந்திரத்தை ஒன்றரை கோடித் தடவைகள் உச்சரிக்க வேண்டும் என்று வயுறுத்துகின்றனர்அதற்குரிய பவித்திரத்துடன் உச்சரிக்கும் போது "ஓம்' மந்திரமானது தெய்வங்கள் உறையும் உலகத்திற்கு மேலே உள்ள அகண்ட பிரம்மத்தையே (cosmic consciousness) நமக்குக் காட்டுகிறது.


 

நான் தற்பொழுது எழுதுவது நேர்மையாக வாழக்கூடிய குடும்பஸ்தர்கள் அளவில்லாத செல்வம் பெறுவதைப் பற்றியதாகும். செல்வ வளம் என்பது வாய்ப்புகளிலிருந்து உண்டாவது. ஆனால் மனிதனோ பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டிருக்கிறான்.


 

"எந்த மந்திரத்தையும் என்னை லட்சக்கணக்கான தடவைகள் சொல்லும்படிக் கேட்காதீர்கள். அது என்னால் முடியாது. ஓர் அலுவலகத்தில் வேலை செய்யும் சாதாரண மனிதன் நான். ஆனால் நான் உண்மையாகச் செயல்படுகிறேன். என்னை வாட்டியெடுக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை கொடுக்கும் அளவிற்கு ஆன்மாவை என் வாழ்க்கையில் செயல்பட வைப்பதற்கு ஏதேனும் வழியிருந்தால் சொல்லுங்கள்' என்று பலர் சொல்கிறார்கள். பிரச்சினை நம் மனதில் கவலையூட்டும் எண்ணமாக வருகிறது. எண்ணம் மனதிலிருந்தால், மனதிற்குப் பின்னால் ஆன்மா இருக்கிறது. பிரச்சினை பற்றிய சிந்தனையில் நாம் மூழ்க மறுத்தால், நாம் அறிவைக் கடந்து ஆன்மாவிற்குச் சென்றுவிடுவோம்.


 

வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் ஓர் உறுப்பினர் மட்டும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, கண்ட இடங்களில் விழுந்து கிடப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார். இவருடைய சகோதரர் இப்பிரச்சினை பற்றிய எண்ணங்களையே தம் மனதிற்குள் நுழையவிடாமல் தடுக்கும் முயற்சியை மேற்கொண்டார். தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்ததால் நான்காம் நாள் வெற்றி கண்டார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் உறுப்பினராகவிருந்த விளையாட்டுச் சங்கம்தான் (sports club) இந்தக் கெட்டப் பழக்கத்திற்குத் துணையாக இருந்தது. அச்சங்கத்தில் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு எழுந்து, இரண்டு கட்சிகளாகப் பிரிந்து, குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்த நீக்கம் அவர் குடிப் பழக்கத்தில் இருந்து விடுபட்டு, தன் குடும்பம் நடத்தி வந்த ஒரு தொழிலைத் தாம் பார்த்துக்கொள்ள முன்வர உதவியது.


 

பிரச்சினைகள் எழும்போது மக்கள் தமக்குத் தெரிந்த தீர்வுகளை மேற்கொள்ள முயல்கின்றனர். இத்தீர்வுகள் பக்காதபோது பிரார்த்தனையை மேற்கொள்கின்றனர். பிரார்த்தனையும் பக்காத பொழுது கர்மபலன் என்பது உறுதியாகிறது. இதன்பின் ஜாதகம் பார்க்கின்றனர். ஜாதகம் கர்மபலனை உறுதிபடுத்தும்பொழுது, நம் முயற்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இக்கட்டத்தில்தான் மனிதனுக்கு ஓர் உயர்ந்த ஆன்மீக முயற்சி எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் வருகிறது. அவனுடைய எல்லா முயற்சிகளும் தோற்றுப் போய்விட்டால், கடைசிக் கட்டமாக ஆன்மா செயல்பட முன்வருகிறது. இத்தருணத்தில் கர்மத்தால் கட்டுண்டிருப்பதா அல்லது ஆன்மாவைச் செயல்படச் சொல்வதாஎன்ற இக்கட்டு மனிதனுக்கு எழுகிறது. சரியாக முடிவெடுக்க மனிதன் முன்வருவானா?

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

குரு தன்னைப் பயன்படுத்துவதே சிஷ்யனுக்குப் பரிசு. அவனது தனி உரிமை, குரு அவனைத் தவறாகப் பயன்படுத்துவது; அவனுக்குத் தவறு செய்து தூர எறிவதே ஆகும்.


 

குருவின் அலட்சியம் சிஷ்யனுக்கு வரப்பிரசாதம்.


 


 

 


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

ஆன்மீகக் கட்டுப்பாடெனும் தவம் பல்வேறு காரணங்களுக்காகாக ஒருவருடைய ஜீவியத்தை அளவு கடந்து உயர்த்துகிறது. அவ்வுயரத்தில் உடலால் உழைப்பவருடைய அறிவும்,  திறனும் இயல்பாக அதன் பாகமாக அமைகிறது. சில சமயங்களில் இவ்வுயர்வின் சாரம் கீழே வந்து அவர் உடல் ஜீவியத்தைத் தொடும். தொட்டபின், அவர் செயல்களுக்கும், சொற்களுக்கும், பார்வைக்கும் அத்திறன்  உண்டு. அவர் பார்வை படும் இடத்தில் வாழ்வு நிறையும்.


 

பக்குவமான மனிதனின் பவித்திரமான பார்வையால்

வாழ்வு நிறையும்.


 


 


 


 


 


 



book | by Dr. Radut