Skip to Content

3. லைப் டிவைன்

 

"ஸ்ரீ அரவிந்தம்"


 

லைப் டிவைன்


 

(சென்ற இதழின் தொடர்ச்சி....)


 

கர்மயோகி


 

XVII. The Divine Soul

17. தெய்வீக ஆன்மா

Sachchidananda has a conscious play.

சச்சிதானந்தம் தன் லீலையை அறியும்.

The divine soul will be self-contained.

தெய்வீக ஆன்மா அனைத்தையும் தன்னுட்கொண்டது.

The existence of a divine soul will meet these two conditions.

தெய்வீக ஆன்மா இருப்பதே இந்த இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும்.

The divine soul would be pure.

தெய்வீக ஆன்மா தூய்மையானது.

It would be infinite self-existence in its being.

அதன் சுயவாழ்வு அனந்தமானது. அதுவே அதன் ஜீவன்.

It exists in the becoming too.

அது பிரகிருதியிலும் உள்ளது.

It would be a free play of immortal life.

அழியாத வாழ்வின் சுதந்திரமான லீலை அது.

It would be uninvaded by death and birth.

பிறப்பும், இறப்பும் அதன் வாழ்வில் நுழைய முடியாது.

It would not be affected by change of body.

உடல் மாறுவதால் அது மாறாது.

It would be unclouded by ignorance.

அஞ்ஞானம் அதை இருளாக மறைக்காது.

It will not be involved in the darkness of our material being.

நம் ஜடமான ஜீவனின் இருளில் அது கலந்துகொள்ளாது.

It would be a pure and unlimited consciousness in its energy.

அது தூய்மையானது. அதன் சக்திக்கு அளவில்லை.

It would be poised in an eternal and luminous tranquility.

ஜோதிமயமான அதன் அமைதி காலத்தைக் கடந்தது.

It is its foundation.

அதுவே அதன் அடிப்படை.

Yet it will be able to play freely with forms.

இருந்தாலும் அதனால் ரூபலீலை செய்ய முடியும்.

They are forms of knowledge and forms of conscious power.

ஞானத்திற்கும், அதிகாரத்திற்கும் ரூபமுண்டு.

It will be tranquil and unaffected.

அது அமைதியானது, பாதிக்கப்படாதது.

The stumblings of mental error leave it unaffected.

மனம் தடம் புரள்வதால் அது மாறாது.

The misprisions of our striving will too will not affect it.

நம் உறுதியின் தடுமாற்றம் அதைப் பாதிக்காது.

It never departs from truth and oneness.

சத்தியம், ஒருமையினின்று வழுவாது.

Never does it fall from its inherent light.

பிறப்புடன் வந்த ஜோதியினின்று பிறழாது.

It has its natural harmony of its divine existence.


 

இறைவன் வாழ்வுக்குரிய இயல்பான சுமுகம் உண்டு.

It would be pure inalienable delight.

தூய்மையான விலகாத ஆனந்தமது.

It has its eternal self-experience.

அதன் சுயானுபவம் காலத்தைக் கடந்தது.

In Time it has a free variation of bliss.

காலத்துள் அதன் ஆனந்தம் சுதந்திரமாக மாறக்கூடியது.

It is unaffected by our perversions of dislike, hatred, discontent and suffering.

நம் குதர்க்கம், வெறுப்பு, அதிருப்தி, வேதனை அதைப் பாதிக்காது.

It is undivided in being, unbaffled by erring self-will.

அதன் ஜீவன் முழுமையானது. தவறும் நம் சுய உறுதியால் அது குழப்பமடையாது.
 

It is unperverted by the ignorant stimulus of desire.

ஆசையின் அறியாமை வேகம் அதை குதர்க்கமாக்காது.

Its consciousness would not be shut out from any part of the infinite truth.

அனந்தமான சத்தியத்திருந்து எப்பகுதியும் அதற்கு விலக்கன்று.

Nor is it limited by any poise or status.

எந்த நிலையும் அதைக் கட்டுப்படுத்தாது.

The status permits it to assume a relation.

அந்த நிலை இந்தத் தொடர்பை அனுமதிக்கிறது.

Nor is it condemned to any loss of self-knowledge.

அதனால் சுயஞானம் குறைய வேண்டும்என்ற அவசியமில்லை.

Self-knowledge is lost by accepting phenomenal individuality.

தோற்றத்திற்குரிய தனித்தன்மையை ஏற்றால் சுயஞானம் போகும்.

Phenomenal individuality comes from the play of practical differentiation.

நடைமுறை வேறுபாடுகள் தோற்றத்தின் தனித்தன்மையை அனுமதிக்கிறது.

The Divine soul has a self-experience.

தெய்வீக ஆன்மாவுக்கு சுய அனுபவம் உண்டு.

In it, it lives eternally in the presence of the Absolute.

அந்த அனுபவத்தில் பிரம்மத்தின் முன்னிலையில் யுகாந்த காலமாக அது வாழ்கிறது.
 

To us the Absolute is an intellectual conception.

நமக்கு பிரம்மம்என்பது சிந்தனையில் எழும் எண்ணம்.

It is of indefinable existence.

அது விவரிக்க முடியாத வாழ்வு.

The Brahman is higher than the highest, paratpara.

உச்சகட்ட உயர்வைவிட உயர்ந்தது பிரம்மம் - பராத்பரா.

The intellect tells us of that Brahman.

நம் அறிவு அப்பிரம்மத்தை நமக்குக் காட்டுகிறது.

It is an Unknowable that knows itself.

அறிய முடியாதது தன்னையறியும் பாணியது.

It knows in another fashion than our knowledge.

நாம் அறியும் பாணியிலிருந்து அந்த பாணி வேறுபடும்.

The intellect cannot bring us into its presence.

நம் அறிவு அந்த தெய்வீகச் சூழலில் நம்மைக் கொண்டு வாராது.

The divine soul lives in the Truth of things.

தெய்வீக ஆன்மா பொருள்களின் சத்தியத்தில் உறைகிறது.

It will always have the conscious sense of itself.

தான் யாரென அறியும் உணர்வு அதற்கு எப்பொழுதும் உண்டு.

In that sense it knows itself as the Absolute.

அந்தக் கோணத்தில் பார்த்தால் தெய்வீகஆன்மா தன்னை பிரம்மமாக அறியும்.

It has an immutable existence.

அதன் வாழ்வு மாற்றமில்லாதது.

It would be aware of its original form, swarupa.

அதற்கு, தன் ஆதியான ரூபம் தெரியும், ஸ்வரூபம்.

It is the original form of the Transcendent – Sachchidananda.

அது கடந்ததின் ஆதிரூபம் - சச்சிதானந்தம்.

It would be aware of its play of conscious being.

தன்னையறியும் ஜீவனின் லீலையை அது அறியும்.

It is a manifestation of That.

அது பிரம்மத்தின் - "அது' - வெளிப்பாடு.

It is in the forms of Sachchidananda it is manifested.

அது சச்சிதானந்த ரூபமாக வெளிப்படுகிறது.

It would be aware of the Unknowable.

அறிய முடியாததை அது அறியும்.

It would be so aware in every state of knowledge.

எல்லா வகை ஞானங்களிலும் தெய்வீகஆன்மாவுக்கு அந்த ஞானமிருக்கும்.

Also in every state of act, it would be aware of That.

எல்லா நிலைக்குரிய செயல்களிலும் தெய்வீக ஆன்மாவுக்கு அந்த ஞானமிருக்கும்.
 

Thus the Unknowable cognizes itself.

அவ்விதம் அறிய முடியாதது தன்னையறியும்.

It does so by a form of variable self-knowledge.

மாறிவரும் ஞானத்தால் தெய்வீகஆன்மா அதைச் சாதிக்கிறது.

It would be aware of the Absolute in its every state or act of power.

எல்லா சக்தி வெளிப்பாடுகளிலும், எல்லாச் செயல்களிலும் தெய்வீகஆன்மாவுக்கு பிரம்மம் தெரியும்.
 

It is equally so in its will or force aware of the Transcendence possessing itself.

உறுதி அல்லது சக்தி கடந்தது தன்னைப் பெற்றிருப்பதிலும் அது உண்மை.

It does so by a form of conscious power of being and knowledge.

தன்னையறியும் ஜீவனின் சக்தியின் ரூபத்தால் அதைச் சாதிக்கிறது.

In its every state or act of delight, joy or love, aware of the Transcendence embracing itself by a form of conscious self-employment.

அதற்குப் பல அனந்தமான செயல்களுண்டு. அது கடந்ததை அறியும். தன்னை அறியும் சுயஆனந்தத்தால் அதைச் செய்கிறது.

The presence of the Absolute will always be with the divine soul.

தெய்வீகஆன்மாமுன் பிரம்மம் எப்பொழுதும் இருக்கும்.

It is not an act of an occasional glimpse.

ஏதோ ஒரு சமயம் மின்னலாக வெளிப்படுவதில்லை.

Nor is it arrived at finally at the end of a long process.

நீண்ட பெருமுயற்சியால் செய்து முடிக்கும் காரியமுமில்லை.

The divine soul will not hold it with difficulty.

தெய்வீகஆன்மா தன்னைச் சிரமப்பட்டுக் காப்பாற்றிக்கொள்வதில்லை.

It is neither an addition nor an acquisition or culmination.

புதியதாகச் சேர்ந்ததோ, முடிவாக ஏற்பட்டதோ, தானே பெற்றதோ இல்லையது.
 

Nor is it superimposed on its ordinary state of being.

சாதாரணநிலைமீது திணிக்கப்பட்டதுமில்லை.

It would be the very foundation of its being.

ஜீவனின் அஸ்திவாரமிது.

It is the foundation in unity and in difference.

அது ஒருமையில் பன்மைஎன்ற அஸ்திவாரம்.

It would be present to it in all its acts.

எல்லாச் செயல்களிலும் அது இருக்கும்.

In its knowing, willing, doing, enjoying it will be there.

அறிவது, முயல்வது, செய்வது, அனுபவிப்பது ஆகியவற்றுள் அது இருக்கும்.

It will not be absent from its timeless self.

காலத்தைக் கடந்த புருஷனில் அது இல்லாமலிருக்காது.

Nor from any moment of Time, will it be absent.

காலத்தின் செயலும் அது இல்லாமலிருக்காது.

It will not be absent from its spaceless being.

இடத்தைக் கடந்த நிலையிலும் அது இருக்கும்.

Nor is it absent from any determination of its extended existence.

அதன் வாழ்வின் வீச்சின் முடிவிலும் இருக்கும்.

It has an unconditioned purity beyond all cause and circumstance.

எல்லா சந்தர்ப்பங்களைக் கடந்த நிலைகளிலும் அது இருக்கும்.

Nor is it in any relation of circumstance, condition and causality.

காரண, காரியம் உள்ள இடங்களிலும் அது இருக்கத் தவறுவதில்லை.

This constant presence of the Absolute would be the basis of its infinite freedom and delight.

அதற்கு அனந்தமான சுதந்திரமும், ஆனந்தமும் உண்டு. அதன் அடிப்படை இதுவே.
 

It ensures its security in the play.

அதன் லீலை அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கிறது.

It provides the root and sap and essence of its divine being.

வேர், சாரம், சத்தை அது தரும்.


 தொடரும்.....

 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

ஒவ்வொரு நிலை அதிர்ஷ்டத்திற்கும் வேறு பெயருண்டு.

ஜடத்தில் அது அதிர்ஷ்டமாகும். உணர்வில் புகழாகும்.

மனதில் ஞானோதயமாகும். ஆன்மாவில் அருள் எனப்படும்.

சத்தியஜீவியத்தில் அதைப் பரிணாமம் என்போம்.


 

புகழும், அருளும், பரிணாமமும்

அதிர்ஷ்டத்தின் பல நிலைகளாகும். .


 

 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

உடலின் தேவை, உணர்வின் ஆசை, மனத்தின் அபிப்பிராயம் ஆகியவற்றைப் பூர்த்தி செய்தால் மனிதனுக்கு மனதில் பிணக்கொழியும். கொஞ்சம் தேவைகள் குறைவதால், கொஞ்சம் சக்தி சும்மாயிருப்பதால் மனிதனுக்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.


 

கரணங்கள் குறைவாக, நிறைவது பிரச்சினைக்கு அஸ்திவாரம். .


 


 


 


 


 


 



book | by Dr. Radut