Skip to Content

4. அன்பர் கடிதம்

 

அன்பர் கடிதம்


 

ஓம் மதர் ஸ்ரீ அன்னை!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்தியமயி பரமே!


 


 

ஸ்ரீ அன்னையின் பாதகமலங்களில் பணிந்து இக்கடிதத்தை சமர்ப்பிக்கின்றேன்.


எனக்கு ஸ்ரீ அன்னையை, 1991ஆம் ஆண்டில் என் வீட்டின் அருகில் இருந்த அன்னைஅன்பர், அறிமுகம் செய்து புத்தகங்கள் கொடுத்தார். அவ்வமயம் என் மகன் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவன் படிப்பில் பின்தங்கியிருந்த நேரம் ஸ்ரீ அன்னையின் புத்தகங்கள் ஆறுதலாக இருந்தது. அதன் பிறகு என் மகனின் கல்வியில் சிறிது சிறிதாக முன்னேற்றம் காணப்பட்டது ஸ்ரீ அன்னையின் அருளால்தான். அவன் +2 தேர்வில் total marks 82%, main subjectல் 85% எடுத்ததும் ஸ்ரீ அன்னையின் திருவருளே. அதன் பிறகு அவனுக்கு B.E.இல் admission கிடைத்தது.

B.E. முதலாம்ஆண்டு முடிவு சமயத்தில் அவனை மஞ்சள் காமாலை நோய் தாக்கி, சுமார் ஒரு மாத காலம் சிகிச்சை செய்தும் குறையவில்லை. மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் நிலைக்கு வந்துவிட்டது. அப்போதெல்லாம் சாவித்ரியைப் படிப்பது, அன்னையைப் பிரார்த்திப்பதுமாக இருந்தேன். மனம் மிகவும் வேதனையுற்று அன்னையிடம் கூறினேன். ஸ்ரீ அன்னையின் கருணையால் அவனுக்கு மறுஜென்மம் கிடைத்தது. அது முதல் அவனை அன்னையின் குழந்தையாகவே வரித்துவிட்டேன். உயிர் கொடுத்த அன்னைக்குத்தான் அவன் சொந்தம்என்று தினமும் அன்னையிடம் கூறுவேன். இவ்வருள் பிரவாகம் என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாதது.

ஒரு சமயம் எங்கள் வீட்டில் ஏ.சி. வாங்கி பொருத்த உத்தேசித்து, ஸ்ரீ அன்னையிடம் சமர்ப்பித்து, அவர் உத்தரவுக்காகக் காத்திருந்தோம். 3 நாட்கள் கழித்தபின்னர் என் கணவர் ஸ்ரீ அன்னையின் பதில் கிடைக்கவில்லையேஎன சொல்லிக்கொண்டு இருந்த சமயம், என் சகோதரன் திடீரென்று எங்களுக்கு போன் செய்து, ஏர் கூலர் வேண்டாம், .சி. பொருத்திவிடுங்கள்எனச் சொன்னான். இதனை அன்னை பதிலாக ஏற்று மகிழ்ச்சி அடைந்தோம்.

என் மகனுக்கு B.E. ல் 72% கிடைக்கப் பெற்றது ஸ்ரீ அன்னையின் அருளே. 2002இல் B.E. முடித்ததும் வேலைக்கு மனு செய்துகொண்டிருந்தான். ஏதும் கிடைக்கவில்லை. அவ்வமயம் என் சகோதரியின் கணவர் அவருக்குத் தெரிந்த கம்பெனியில் Traineeஆக சேர்த்துவிட்டார். சம்பளம் ஏதும் இல்லைஎன்றும் சொன்னார். ஆனால் மகன் experience கிடைத்தால் போதும்என அக்கம்பெனியில் வேலை செய்ய ஆரம்பித்தான். ஒரு வருடம் கழித்து அவர்கள் salaryகொடுக்க ஆரம்பித்த சமயம் (2003ஆம் ஆண்டு) அவனுக்கு சிங்கப்பூர் University மேற்படிப்புக்கு (M.S.) அட்மிஷன் கிடைத்தது. இது எங்கள் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. M.S. முடித்து 2 மாதங்களில், 2005ம் ஆண்டில், அங்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதுவும் அன்னையின் அருளால் தான்.

இப்போது எங்களுக்குத் தெரிந்த குடும்பத்திலிருந்து ஒரு பெண் அவனுக்கு நிச்சயம் செய்ய உள்ளோம். திருமண நிச்சயதார்த்தம் 25.11.07 அன்று நடைபெற்றது. அப்பெண் நல்ல பெண். M.Sc. படித்து வருகிறாள். இந்த ஆண்டு அவனுடைய திருமண நிச்சயதார்த்தம் நடக்கும்என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நல்ல குடும்பத்திலிருந்து, நல்ல படித்த பெண்ணை ஸ்ரீ அன்னை அவர் குழந்தைக்கு நிச்சயம் செய்கிறார்என்று மகிழ்ச்சி அடைகிறோம். இன்று என் மகன் சிங்கப்பூரிருந்து போன் செய்தான்.

அவனுக்கு Intel Computer நிறுவனத்தில் 3400 டாலர் சம்பளத்தில் வேலை கிடைத்திருப்பதாகச் சொன்னான். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் எங்கள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று தமது அருள் மழையை எங்கள் மேல் பொழியும் அன்னைக்கு நன்றி கூற இந்த ஒரு ஜென்மம் போதாது.

அவனுடைய ஆரம்ப நிலைக்கும், தற்போதுள்ள நிலைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் அன்னையின் பேரருளே! அது ஸ்ரீ அன்னைக்கு உரித்தானது. முடிந்தவரை அன்னையின் அறிவுரை, Life Response ஆகியவற்றைக் கடைப்பிடிக்கிறேன்.

ஸ்ரீ அன்னையின் பாதகமலங்களில் பணிந்து கோடானுகோடி நன்றியையும், வணக்கத்தையும் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.


******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

பெரிய நல்லது நம் குறையை மீறி நடப்பது. நம்

குறைகளைத் தாண்டி அதிகபட்சம் நடக்கக்கூடியதே.

சொல்லப்போனால், நம் குறைகள் நம் கண்மூடித்தனத்தால்

திசை மாறிய நேரம் நல்லவை நடக்கின்றன.


 

பெரிய நல்லது நம் குறையை மீறி நடப்பது.


 


 



 



ஸ்ரீ அரவிந்த சுடர்


 

சமூகம் மனிதனுக்கு எந்த அளவு பாதுகாப்பளிக்கிறது,

அவன் ஆசைகளையும் அபிலாஷைகளையும் எந்த

அளவுக்கு ஆமோதிக்கிறது என்பவை மனிதனுடைய

ஆழ்ந்த நோக்கங்களை நிர்ணயிக்கின்றன.


 

ஆழ்ந்த நோக்கங்களை ஆமோதிப்பது சமூகம்.


 


 


 



book | by Dr. Radut