Skip to Content

7. யோக வாழ்க்கை விளக்கம் V

 யோக வாழ்க்கை விளக்கம் V

(மார்ச் 2008 இதழின் தொடர்ச்சி....)
 

கர்மயோகி

916) அது போன்ற பத்து வருஷ உழைப்பு அடுத்த பத்து வருஷச் சிந்தனைக்கு ஜீவனைத் தயார் 

        செய்கிறது.

          பத்து வருஷ உழைப்பு பத்து வருஷ சிந்தனையைத் தயார் செய்யும்.

  • சிந்தனை உடல் எழுகிறதுஎன்று பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். அதாவது செயல் சிந்தனை எழுகிறது; செயலால் சிந்திக்க முடிகிறது. இன்றைய உழைப்பு நாளைய யோசனை.
     
  • எண்ணம்என்பது நம்முடையதன்று. உலகில் நடமாடும் எண்ணம் நம்முள்ளே நுழைவதை நாம் நம் எண்ணம் என்கிறோம்.
  •  நாம் மூச்சுவிடும் காற்று வெளியிலிருந்து உள்ளே சென்று வெளியே உலகத்து எண்ணம் உலகத்துச் செயல் எழுந்தது.
  • மனிதன் நெடுநாளாக வாழ்ந்தான் 
  • வாழ்வுஎன்பது உழைப்பு

  • உலகில் மனிதகுலம் உழைத்தது, எண்ணத்திற்கு அடிப்படை

  • அந்த எண்ணங்கள் உலகில் உலவுகின்றன.

  • அப்படி உலவும் எண்ணங்கள் லட்சோபலட்சம்

  • நம் மனத்திற்கு இதமான எண்ணம் நம்முள் நுழைகிறது.

     

    நாம் அதை நம் எண்ணம்எனக் கூறுகிறோம்.

 

  • பொதுவாக அறிஞர்கள், உலகில் வயதானவர்கள், நெடுநாளாக வாழ்க்கையைக் கவனித்து அனுபவப்பட்டவர்கள், அவர்களில் பலர் ஆரம்பக் காலத்தில் கடுமையாக உழைத்தவர்கள்

கடுமையான உழைப்பு,

சிறப்பான சீரிய சிந்தனையாக மாறுகிறது

  • உடல் உழைப்பே சிந்தனைஎன்பது ஏற்க சிரமமான எண்ணம். ஆனால் அதுவே உண்மை.

  • இளம் வயதிலேயே சிந்திப்பவர்கள் முற்பிறவிகளில் கடினமாக உழைத்தவர்கள்.

  • சிந்தனை மனத்தின் உழைப்புஎன்பதை ஏற்க முடியும்.

          மனத்தில் மேற்பகுதி, கீழ்ப்பகுதி (ஜீவியம், பொருள்) என உண்டு.      

          தன்னைத் தானே பூர்த்தி செய்துகொள்ளக்கூடியது.

          மனத்தில் ஓடும் எண்ணங்கள் திறனற்றவை.

          நிலையான எண்ணங்கள் நம் அபிப்பிராயங்கள்.

         வேரூன்றிய எண்ணங்கள் நம் முடிவுகள், தீர்மானங்கள்.

         உலகத்தின் எண்ணத்திருந்து, வேறுபட்டவை நம் சொந்த எண்ணங்கள்.

         ஐன்ஸ்டீன் எழுதிய E = MC2 என்பது அவர் உலகுக்கு அளித்தது.

                            அது அவருடைய சொந்த எண்ணம் (original idea).

         உலகில் original idea  அடிப்படை எண்ணங்கள் 15 அல்லது 20க்கு   

****

917)  வாழ்வைப் பற்றிய சிந்தனை முற்றி, அன்னையின் கோட்பாடுகளைச் சிந்திக்க   வைக்கிறது.

        சிந்தனை, வாழ்வைக் கடந்து அன்னையைத் தொடரும்

  • சிறு குழந்தை சில சொற்களை முதலில் பேசும்முன் இலட்சக்கணக்கான முறை அச்சொற்களைக் காதால் கேட்கிறது.

          ஒரு சொல் எழ ஓராயிரம் முறை கேட்க வேண்டும்

  • 300 ஆண்டுகளாக ஆங்கிலேயர் அனுபவத்தை நாம் அனுதினமும் பார்த்தும், அவர்கள்போல் முழுமையாக வாழ முடியவில்லை.
     

  • மூன்று தலைமுறை கடனில் அழிந்தபின் நாலாம் தலைமுறை "இனி கடன் என வாங்கக்கூடாது' என முடிவு செய்கிறது.
  • 10,000 ஆண்டு விவசாயம் செய்த அனுபவம் (industry) தொழிலை நிர்வாகம் செய்யப் பயன்படுகிறது.
  • வாழ்வுஎன்பது தரைமட்டம். உணவு, உடை, உறைவிடம், அன்னை வாழ்வு என்பது மேல்உலகைக் கடந்த கட்டம். ஆத்ம நிறைவு, அன்பின்நெகிழ்வு, ஒருவர் சிறப்பு உலகை உய்விப்பது, உலகை உள்ளே காண்பது, அவ்வுலகினுள் பிரம்மத்தைக் காண்பது.

           அன்னைக் கோட்பாடுகள் அன்னை வாழ்வைத் தரும்

           சாப்பாடு, துணி, வீடு பற்றிய சிந்தனை வாழ உதவும்.

           உணவும், உடையும், உறைவிடமும் அடிக்கல்.

           அஸ்திவாரம் பலமான பின்னரே ஆகாயத்தில் பறக்கலாம்

          உலக உற்பத்தியில் பிரிட்டன் முதன்மையாக இருந்து 7% உற்பத்தி செய்தபொழுது அமெரிக்கா 

           34% உற்பத்தி செய்தது; அது 1900த்தில்.

           ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜில் படித்தவர்கள் 1930, 1940வாக்கில் அமெரிக்காவைப் பற்றிக்  

            கேள்விப்படவில்லை. முதன்மையான நாட்டைப் போல் 5 மடங்கு உற்பத்தி செய்து, 50 மடங்கு  

            செல்வம் பெற்றிருந்த பொழுதும், அமெரிக்காவைச் சீண்டுபவர் எவருமிலர்

           உலகப்போரை வென்று, மற்ற நாடுகளுக்குப் போரை வெல்ல உதவி செய்து, அவர்கள் பட்ட 

            நஷ்டத்தை மீண்டும் ஈடு செய்ய உதவிய பின்னரே உலகம் அமெரிக்காவைப் பற்றிக் 

            கேள்விப்பட்டது.

  • செல்வத்திற்குச் செல்வாக்குண்டு.

  • ஆனால் செல்வம் பதவியால் முதிர்ந்தபின்னரே அது எழும்.

  • வாழ்வின்சிந்தனை முதிர்ந்தால் அன்னைச் சிந்தனை எழும்.

  • சிந்தனை செயலைவிட உயர்ந்தது.

  • செயல் சிந்தனையைவிட வலுவானது.

  • செயலுக்குச் சிந்தனை இல்லை.

  • சிந்தனைக்குச் செயல் உண்டு.

  • சிந்தனை செயல்பட பூரணம் தேவை.

  • வாழ்வும், அன்னையும் எதிர் துருவங்கள்

  • வாழ்வில் ஆரம்பித்து, அன்னையில் முடிக்க வேண்டும்.

  • வாழ்வின் சிந்தனை அன்னையைச் சித்திக்க வைக்கும்.

  • உள்ளது பூர்த்தியானால், உயர்ந்ததுவந்து பூரணம் பெறும்.

  • சிந்தனை சிறந்த செயலெனப்படும்.

918) இலட்சியப் போராட்டங்கள், கடின உழைப்பு, சீரிய சிந்தனை, உள்ளத்தின்

        முடிந்தபின் சிந்திக்காமல் விளங்கும். உணர்வெழாமல் இன்பம் ஊறும். அசையாமல் 

         சாதிக்கலாம்.

          மூலம் முழுமையானது. 

  • ஸ்தாபனத்தில் ஆரம்பநிலை அடிமட்டத்தில் சேருபவன் இலட்சிய மனப்பான்மையுடன் வருகிறான். வெகுசீக்கிரம் அவனுக்கு எதிரி வெளியேயில்லை, ஸ்தாபனமே எதிரிஎனத் தெளிவு பெறுகிறது.

         இலட்சியம், போராட்டம் புறத்திலில்லை; அகத்துள் உள்ளதுஎன்று புரிய பல  ஆண்டுகளாகும்.      அகப்போராட்டம் அனைவரும் ஏற்கக்கூடியது இல்லை. அது புறப்போராட்டமாகும்.   அவன்ஸ்தாபனத்தின் பகுதி ஆவான். போராட்டம் உள்ளே என்று புரிந்து, அதை ஏற்றவன் வெற்றி பெற்றால், அவன் ஸ்தாபனத் தலைமைக்கு வருவான். 

  • கடின உழைப்பு, உடல் உழைப்பாகும். ஸ்தாபனத்தில் 8 அல்லது 10 நிலைகள் இருக்கும். இலட்சியவாதியை ஸ்தாபனம் வெளியே தள்ள முயலும். இந்த நிலையில் அவன் இலட்சியம் வெளிப்பட அதிக  ழைப்புதேவை. அவன் இலட்சியம் செயலில் வெளிப்படாவிட்டால், அவனும் ஸ்தாபனத்தின் பகுதியாவான். ஸ்தாபன அவல நிலையை மீறி தன் வேலையை இலட்சியமாகச் செய்ய, உழைப்பு கடினமாகும். அதில் வெற்றி பெற்றால், மனப்போராட்டத்தில் அக்கடினம் எழும்.

        அல்பமானவன் இலட்சியவாதியை அல்பம் என்பான். 8 வருஷமாகக் கட்டிய கோட்டை அன்று   எழும் எரிச்சலில் அழியும். எலும்பே இல்லாதவன் இலட்சியப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துபவனை முதுகெலும்பில்லை' என்பான். அப்படி அவன் அந்த சொல்லைச்  சொல்லும்பொழுது அவலமாக அவனுடைய சொந்த அசிங்கத்திற்கு அல்ப நன்கொடை கேட்டுக்கொண்டிருப்பான். அவனை எதிர்த்துப் பேசினால், அனைவரும் அவனை ஆதரித்துப் பேசுவர். ஸ்தாபனம் "குப்பை' மனிதரால் ஆனது. அட்டைபோல் ஸ்தாபனத்தை உறிஞ்சும் நாதியற்றவர்கள் நிறைந்தது ஸ்தாபனம். இதுவே சமூகத்தின் அங்கம். "இதை எதிர்க்கக்கூடாது; எதிர்ப்பது பலன் தாராது'என்று புரிய சிந்தனை சீரிய சிந்தனையாக மாறவேண்டும்

  • இலட்சியத்திற்கு மனதால், செயலால் சேவை செய்யலாம். அதைத் தனி மனிதனுக்கோ, ஸ்தாபனத்திற்கோ செய்ய முடியாதுஎன விளங்கும்

  • சேவை தெய்வத்திற்கு, தனி மனிதனுக்கில்லைஎனப் புரியும்.

  • உணர்வைக் கடந்த இன்பம் உணர்வெழாமல் ஊறும்.

  • அது அகத்திண்மை, ஆன்மபலன்.

  • ஆன்மபலன் அசையாமல் சாதிக்கும்.

இலட்சியமாகப் போராடியபின்னரே, "போராட்டம் பலன் தாராது' எனப் புரியும். "கடினமாக உழைத்தவனுக்கே பலன்; உழைப்புக்கில்லை' என விளங்கும். மௌனமாகச் செயல்பட "உள்ளே' போக வேண்டும். அது வெளியே' பலன் தரும். உடனுறைபவர்க்குப் பலன் வரவேண்டும் என்றால், அவரனைவரும் ஒன்று சேர்ந்து இலட்சியவாதியை அவலட்சணமாக்குவர்.

  • சேவை மூலவனுக்கு 

  • முழுமை மூலவனுக்குச் சேவை செய்யும்.

தொடரும்.....


 

***

ஜீவிய மணி
 

ஆழ்ந்த மௌனம் ஆன்மாவுக்குரியது.


 


 

 

 



book | by Dr. Radut