Skip to Content

02. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. நாய் காணின் கல் காணாவாறு.

    [நாயைக் கண்டால் கல்லை காணோம்.
    கல்லைக் கண்டால் நாயை காணோம். (வழக்கிலுள்ள பழமொழி).]

    • பிரச்சினை வரும் பொழுது அன்னை மறந்துவிடுகிறது.
  2. புறஞ் செய்ய செல்வம் பெருகும்.
    அறஞ் செய்ய அல்லவை நீங்கிவிடும்.
    (அல்லவை - தீமை)
    • திறமை பலன் தரும்.
      சமர்ப்பணம் தோல்வியை அகற்றி வெற்றி தரும்.
  3. பசு கறுப்பானால் பாலும் கறுப்பா.
    • மனிதன் சிறியவனானால் பிரார்த்தனை சிறியது ஆகாது.
  4. தோல்வி வெற்றியைத் தருகிறது.
    • தோல்வி ரூபத்தில் வரும் வெற்றி அல்லது
      தோல்வியாக எழும் பெரும்வெற்றி.

    (இயல்பாக வரும் வெற்றியைவிட தோல்வியில் ஆரம்பிப்பது பெரிய வெற்றியில் முடியும். முடிவில் வெற்றி பெறாத தோல்வி உலகில் இல்லை. அன்னை அதை உடனே அல்லது முதலேயே செய்து விடுகிறார்).

  5. அனுபவம் மிகச்சிறந்த ஆசான்.
    • ஆசான் கொடுத்த அறிவுரை தவறலாம்.
      அனுபவம் தருவது தவறாது.

    அனுபவம் வாழ்வு. கையால் செய்த காரியம் தவறினால் மனம் படிப்பினை பெறுகிறது. மனம் உடடமிருந்து அறிகிறது. அது உடல் பரிணாமத்தால் உயர்ந்து மனத்தை அடைவது தவறாது.

தொடரும்....

*****



book | by Dr. Radut