Skip to Content

06. சாவித்ரி

சாவித்ரி

 

P.9. All thought can know or widest sight perceive

எண்ணம் அறியக்கூடியதெல்லாம், பரந்த ஞானதிருஷ்டி காண்பதெல்லாம்

  • எண்ணமும், திருஷ்டியும் அறிய முடியாததெல்லாம்,
  • அரிது, கண்ணுக்குப் புலப்படாதது, தூரத்திலுள்ளது, வினோதமானது.
  • அத்தனையும் நெஞ்சை நாடி வருகின்றன, ஆத்ம ஸ்பர்சம் தொடுகிறது.
  • அவனுடைய சுபாவ வாயிலைத் தொட்டுத் தட்டுகிறது.
  • மனத்தின் பரந்த இடத்தை நெருக்கி நிரப்பியது.
  • ஆத்ம தவப்பயனின் தழலாக எழும் சாட்சி,
  • அற்புதம் பிரவாகமாக எழும் அவசியம் தந்தன.
  • புதியதாக அவனுள் பகுதியாக நுழைந்தவர்,
  • ஆத்மாவின் பெருவாழ்வின் புனித மக்கள்.
  • காலத்தின் கதி காட்சியாக நகர்வதன் பேர்உருவம்,
  • புலனெனும் புனிதத்தின் அழகுமிகு ஜரிகை.
  • நெருங்கிய உறவை அவரால் நிரப்பிக் கொண்டனர்.
  • எண்ணத்தின் நெருங்கிய நண்பனாக உள்ளே வந்தனர்.
  • அதுவே அவனது ஆத்மாவின் இயற்கையான சூழல்.
  • தணியாத நெஞ்சம் ஆனந்தத்தை நாடும் அற்புத வீரன்.
  • ஆத்மானந்தத்தின் முடிவற்ற சாம்ராஜ்யம்,
  • சுமுகமான வீணைத் தந்தியின் எண்ணிலா ஸ்ருதி.
  • அகன்று விரியும் பிரபஞ்ச பயணத்தை நாடும்,
  • அனைத்தும் ஒன்றெனும் ஆழங்காணாத உணர்ச்சி.
  • இதுவரை காணாத சிறப்பின் கீதம் வந்தது.
  • சத்தியக் குகையுள் அது ஒளிந்து மறைந்தது.
  • அனந்தனின் புறவீச்சு பெற்ற ஆனந்தம்,
  • ஜீவன் கண்ட கனவும், சாதனையும் அங்குக் காணப்பட்டது.
  • முடிவற்ற ஆச்சரிய அனுபவம் ஸ்பர்சித்த கோயில் மணி.
  • அழகின் செல்வம் பாசமான தீவிரத்தின் மாறுபாடு.
  • இறைவனின் அடிச்சுவடு கணீரென ஒலிக்கும்.
  • காலத்தைக் கடந்த சொல் கண்ணுக்குப் புலப்படவில்லை.
  • ஒரு சொல் தாங்கி வரும் ஓராயிரம் ஆண்டுகள்.
  • எண்ணங்களை சுயம்பிரகாசமாக்கும் பேர் எண்ணம்.
  • ஆத்ம சிறப்பின் தொகையைக் குறிக்கும் எண்.
  • சமமில்லாத அனைத்தும் சமமான ஒன்றுடன்.
  • அத்தனைச் சின்னங்களையும் விளக்கும் ஒரே சின்னம்.
  • பிரம்மத்தின் அடையாளமான பிரம்மச் சின்னம்.
  • அவனுள் அவை அறையறையாக நுழைந்தன.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சிறிய மனிதனுக்குப் பிரபஞ்சத்தை அனந்தன் அளிக்க முன் வந்தால், அனந்தனைத் தன் வாழ்வுள் சுருக்க மனிதன் முனைகிறான். தன்னைக் காப்பாற்றுவதே சரி என்பது அனந்தனுக்கும் மனிதனுக்கும் பொது.
 
சிறியதைப் பெரியதாக்க பெரியது தேடி வந்தால்
சிறியது பெரியதைச் சிறியதாக்க முனைகிறது.

*****



book | by Dr. Radut