Skip to Content

12. நண்பனும் எதிரியும் பொறாமையும் புகழும்

நண்பனும் எதிரியும் பொறாமையும் புகழும்

கர்மயோகி

  • மனிதஉறவு அகந்தையுள்ள இருவர் உறவு.
  • அகந்தை பணியும் அல்லது எதிர்த்து அழிக்க விழையும்.
  • அன்பான நாணயம் அகந்தையறியாதது.
  • முதலாளி, தொழிலாளி; பெற்றோர், பிள்ளைகள்; கணவன், மனைவி; குரு-சிஷ்யன்; பெரிய பார்ட்னர், சிறிய பார்ட்னர்; அடக்கத்திற்குரிய உறவுகள்.
    இவை இடம்மாறலாமே தவிர மனித சுபாவம் மாறாது.
  • அன்பும் நாணயமும் மனிதத் தன்மைக்குரியவை.
    அகந்தை அழிந்து மனிதன் பிறக்கிறான்.
  • நண்பன் எதிரியாகி அழிக்க விரும்புவது பொறாமை.
    எதிரி நண்பனாகி சேவை செய்வது பிரபலம், புகழ்.
    பொறாமையையும், புகழையும் கடந்த செயல் பிரபஞ்சச் செயல் (impersonal universal action).
    அகந்தையுள்ளவரை நட்பில்லை.
    மனிதத் தன்மையில்லாத நட்பு நட்பன்று, பணிவு.
  • அடக்கம் சமூக உணர்வாக மேற்சொன்ன உறவுகளில் வெளிப்படுகிறது.
    அடக்கம் ஆன்மீக உணர்வானால் மேற்சொன்ன உறவுகள் நாகரீகத்தை வெளிப்படுத்தும்.
  • பிரகிருதி புருஷனாவது பரிணாமம்.
    மாயை பிரம்மமாவதும், பிரகிருதி புருஷனாவதும், சக்தி ஈஸ்வரனாவதும் பரிணாமம்.
    முதலிரண்டும் சிரமம். மூன்றாவது நடைபெற, சிறியது விரும்பி பெரியதிற்குப் பணிய வேண்டும்.
    சிறியது அடக்கத்தால் பெரியதற்குப் பணிய, பெரியது ஆனந்தத்தால் சிறியதற்குப் பணிய வேண்டும்.
    சிறியது பணிவது சுதந்திரம்.
    பெரியது சரணடைவது பரிணாமம்.
    சுதந்திரத்தில் பரிணாமம் நடைபெறுவது பூரணயோகம்.
    கணவன், மனைவி திருமணத்திலாரம்பித்து, பரிணாமத்தைப் பயில்வது துறவறத்தின் தூய்மையுள்ள இல்லறம்.
    அமெரிக்கர்கள் சுயநலத்திற்காகப் பரநலத்தின் உதவியை நாடுவது, வாடிக்கைக்காரர்களைத் திருப்திபடுத்தி, அவர்களை அரியாசனத்தில் இருத்துவது.
    அமெரிக்கா சுயநலம், அதிகாரத்தை (domination) அழிக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகிறது.
    அதனால் அதிகாரம் இடம் மாறுகிறது, அழியவில்லை.
    சந்தர்ப்பத்தால் மாறுவது புறத்தின் முயற்சி.
    அகவுணர்வு ஆழ்ந்து சிறப்பது ஆன்மீகவாழ்வின் தவம்.
    சந்தர்ப்பம் ஒரு யுகத்தில் செய்வதை தவம் க்ஷணத்தில் செய்யும்.
    அமெரிக்கர் 400 ஆண்டில் பெற்ற செல்வத்தை இந்தியா 4 ஆண்டில் பெறும் வழி அது.
    புறத்தை அகமாக்க எதிர்ப்பும், வெறுப்புமின்றி புறத்தை ஏற்பது.
    கூட்டாளி பூஜை செய்கிறார்.
    முதலாளி இலஞ்சம் வாங்குகிறார்.
    நண்பன் அர்த்தமின்றி செயல்படுகிறான்.
    பூஜையும், இலஞ்சமும், அர்த்தமற்றதும் எரிச்சல்பட்டால் பாதிக்கும்.
    எரிச்சன்றி ஏற்றால், அவை நம்மை விட்டு நீங்கும்.
    புரிந்து மலர்ந்தால், நீங்குவதற்குப் பதிலாகத் திருவுருமாறும்.

சிறுசெயல் திருவுருமாறுவது பெரிய நேரம்.
சிறுசெயல் திருவுருமாறும் மனநிலை அன்னையை ஏற்பது.
எதிர்க்காமல் ஏற்பது ஏற்றமான நோக்கம்.
முதலாளியை வெல்லலாம், தொழிலாளியை மாற்றலாம், பெற்றோர் வயப்படலாம், பிள்ளைகள் கட்டுப்படலாம், குருவும் இசைவார், சிஷ்யனும் சிறப்பாவான், எவரும் பிடிபடுவர்.

கணவன் கட்டுப்படமாட்டான்.
மனைவியின் மாற்றம் மனிதனறியாதது.
கணவனை தெய்வமாக்க வந்தவள் மனைவி.
மனைவியை மனுஷியாக்கும் திறன் கணவனுக்குரியது.
திருவுருமாற்றும் திருமணம் திருவுள்ளம்.
புரட்சி மலர்ச்சியாவது திருவுருமாற்றம்.
மலர்ச்சி மகிழ்ச்சியாவது வாழ்வு.
திருமணம் வாழ்வின் சிகரம்.
சிகரம் சிறப்புறுவது சிந்தனை.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பொறுக்கக்கூடாததை அனுமதிப்பது, கட்டுப்பாடான பொறுமை (tolerance). ஞானத்தால் அக்காரியத்தில் இறைவன் திருவுள்ளத்தை அறிந்து அமைதியாக இருப்பது பொறுமை (patience).
 
ஞானம் பொறுமை தரும்.

******



book | by Dr. Radut