Skip to Content

14. வாழ்வின் பெருவழிகள்

வாழ்வின் பெருவழிகள்

கர்மயோகி

நம் நாட்டுப் பரம்பரை கர்மம். அன்னை கர்மம் முடிவானதில்லை என்கிறார். அவரை ஏற்றவுடன் நம் கர்மம் திறனிழந்துவிடுகிறது. கர்மம் ஒருவர் வாழ்வில் அவர் அனுமதியின்றி செயல்பட முடியாது. ஒரு கர்மத்திலிருந்து விடுபட அது எந்தக் குணம் வழியாக வெளிவருகிறதோ அதை நாம் மறக்க வேண்டும் என அன்னை கூறுகிறார். ஒருவர் "நான் செய்யும் வேலை எதுவும் கூடிவருவது இல்லை. அது என் கர்மம்'' என்றால், அவர் கர்மம் அவர் கோபத்தால் வெளிப்படுகிறது எனில், அவர் கோபப்படவில்லை எனில், அவருக்குத் தோல்வியில்லை. சுமார் 10 வருஷங்களாக நான் அன்னை கோட்பாடுகளை Pride and Prejudice மூலம் எழுதி வருகிறேன். சமீபத்தில் அக்கதையில் வரும் வாழ்வின் பெரு வழிகளை நுணுக்கமாகக் கவனித்து எழுத ஆரம்பித்தேன். சிறிய சட்டங்கள், பெரிய சட்டங்கள், குறிப்பானவை, அதிர்ச்சி தரக்கூடியவை, ஆச்சரியப்படக்கூடியவை என Volume Iஇல் 1553 சட்டங்களை எழுதினேன். இதுவரை பாதி புத்தகத்தில் 10,000 சட்டங்களை எடுத்து எழுதியுள்ளேன். கதை முழுவதையும் ஆராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளேன். இக்கதை படமாக வந்துள்ளது. மார்க்கட்டில் விற்கிறது. உரையாடல்களை ஆங்கிலத்தில் ஒவ்வொரு காட்சியிலும் எழுதியுள்ளனர். இந்த உரையாடல்களை தமிழில் எழுத முடியும். அது வெளிவர சில மாதங்களாகும். சென்னையில் படத்தைப் போட்டு ஒவ்வொரு காட்சியாக விவரமாக தமிழில் விளக்க ஏற்பாடாயுள்ளது. அன்பர்கள் முன் வந்தால் அடிக்கடி செய்யலாம். கதையை நூலாக வாங்கிப் படிக்கலாம். ஏற்கனவே மலர்ந்த ஜீவியத்தில் கதை வெளிவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் முழுப் பலன் பெற கதையை விவரமாக அறிய வேண்டும். நான் இப்புத்தகத்தை கடந்த 10 ஆண்டுகளில் 30 முறை படித்தேன். படத்தை 15 முறை பார்த்தேன். இருந்தாலும் சில சொற்கள் விட்டுப்போகின்றன. அன்பர்கள் படத்தைப் பல முறை பார்த்தால் பயன் அதிகம். 2009 ஜனவரி முதல் இக்கதை வழியாக 95% அன்னை சட்டங்களைக் கூற முடியும். கதை வழியாகக் கூறும்பொழுது தெளிவாகப் புரியும் என நான் காண்கிறேன். அச்சட்டங்களில் பலவற்றைக் கீழே குறிப்பிட்டு வாழ்வில் அதன்படி எழும் பலன்களை எழுதுகிறேன். அவற்றுள் ஒரு சட்டம் கதையில் எல்லா இடத்திலும் செயல்படுவதை விவரமாகவும் எழுதுகிறேன்.

சட்டங்கள்

  1. பாராட்டினால் பலன் உண்டு.
  2. ஒரே விஷயத்தைப் பலர் பல வகையாகப் புரிந்து கொள்கின்றனர்.
  3. பிறருக்கு நாம் தரும் புத்திமதி பலன் தருவதில்லை, எதிராகவும் மாறும்.
  4. குறை கூறுவது எதிரான பலன் தரும்.
  5. பிறரைத் திருத்த முயன்றால் அவர் குறை வலுவடையும்.
  6. முடிவான பலனை நிர்ணயிக்கும் செயல்கள்.
  7. நேரம் பெரியதானால், சொல்லுக்கு உயிர் உண்டு.
  8. தவறான சொல்லும் பலிக்கும்.
  9. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசினால் பேசுவது பலிக்கும்.
  10. நல்ல காரியத்தை சொல் தடை செய்யும்.
  11. அதிர்ஷ்டமான நேரம், பெரு நேரம், அன்னை வரும் தருணத்தில் பேசப்படும் சொல் அப்படியே பலிக்கும்.
  12. தெம்பு இல்லாவிட்டால் செயல் கூடி வாராது.
  13. நாம் முனைந்து செய்யும் காரியம் கூடி வராது, எதிரான பலனைத் தரும்.
  14. க்ஷணத்தில் விஷயம் எப்பொழுது முடியும்? எப்படி அது நடக்கிறது?
  15. தயக்கம் தரும் பலன் என்ன?
  16. வற்புறுத்தினால் என்ன நடக்கும்?
  17. நல்ல எண்ணம் பெற்றுள்ள சக்தி.
  18. இரு நிகழ்ச்சிகட்குள்ள தொடர்பு.
  19. ஒரு செயல் கதையில் பல இடங்களில் ஏற்படுத்தும் பலன்.
  20. சமூகப் பழக்கங்கள் எப்படி ஒருவரைப் பாதிக்கிறது.
  21. நம் அபிப்பிராயம், அபிலாஷை ஏற்படுத்தும் விளைவுகள்.
  22. சமூகம் எப்படி ஒருவரை ஊக்குவிக்கும். 
  23. நாடு மாறுவதால் ஊரும், உலகமும், தனி மனிதனும் பெறும் பலன்.
  24. தெம்பு எப்படி சக்தியாகி, பவர் மூலம் பலன் அளிக்கிறது.
  25. டார்சி ‘பரவாயில்லை’ என்று கூறியதற்குள்ள 52 பலன்கள்.
  26. ஊர் பழக்கம்.
  27. பாத்திரங்கள்.
  28. சமூகத்தின் சக்தி.

தியான மையங்களில் இக்கட்டுரைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டால், அன்பர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை கதையுடன் ஒப்பிட முன் வந்தால், கலந்து கொள்ளும் அன்பர்கள் அனைவரும் பங்கு கொண்டால் பலன் அதிகம்.

சட்டம்: குறை கூறுவது கதையில் தரும் பலன்

  • விக்காம் பொய்யாக டார்சியைப் பற்றிப் புகார் சொல்கிறான். அதற்கு நேரடியான பலன் அவன் சாயம் வெளுத்து அம்பலப்படுத்தப்படுகிறான்.
  • மிஸஸ். பென்னட் மிஸஸ். லூகாஸைப் பற்றியும், மிஸஸ். லாங்கைப் பற்றியும் அவதூறாகப் பேசுகிறார்.
    ஊர் முழுவதும் அவர் குடும்பத்தைத் தூற்றுகிறது.
  • காலின்ஸ் படிக்கும்பொழுது லிடியா குறுக்கிட்டதால் கோபித்துக் கொள்கிறான். லிடியா அடுத்தாற்போல் பெரிய காரியம் செய்து விடுகிறாள். காலின்ஸ் லிடியாவைத் திருத்த முயல்வதால் பலனில்லை. பெரிய தவற்றுக்குக் காலின்ஸ் சொல் காரணமாகிறது. நாம் கூறும் குறை அடுத்தவர்க்குப் பயன்படாது. லிடியாவைக் காலின்ஸ் கூறியது போல் 2 நாளில் காலின்ஸை எலிசபெத் குறை கூறுகிறாள்.
  • காரலின் எலிசபெத்திற்கு எச்சரிக்கை செய்தபொழுது தான் டார்சியை மணக்க விரும்பினாள். அதன் நேரடியான பலன் எலிசபெத் டார்சியை மணந்தாள். தான் எவரைப் பற்றிக் குறை கூறினாளோ - விக்காம் - அவருக்குத் தான் விரும்பிய உறவு - டார்சியுடன் - கிடைக்கிறது.
    நினைப்பு குறையானதால், எதிரான பலன் எழுகிறது.
    குறை கூறினால் எதிரான பலன் எழும்.
  • டார்சி அனைவரும் மட்டம் என நினைக்கிறான்.
    அனைவரும் அவனை மட்டமாக நினைக்கிறார்கள்.
    நாம் பிறரை எப்படி நினைக்கிறோமோ, அது போல் அவர்கள் நம்மை நினைப்பார்கள்.
  • எலிசபெத் லேடி காதரீனைக் கண்ட பொழுது இவள் கர்வமானவர் என நினைக்கிறாள். அதன் பலன் லேடி காதரீன் வீட்டிற்கு வந்து திட்டுகிறாள்.
    எண்ணம் வீண் போகாது. எலிசபெத் நினைப்பது சரியாக இருந்தாலும் அவளுக்கு அப்படி நினைக்க உரிமையில்லை.
  • எலிசபெத் டார்சியைப் பற்றியும் காரலினைப் பற்றியும் குறை கூறுகிறாள்.
    அவர் இருவரும் சேர்ந்து ஜேன் திருமணத்தைத் தடை செய்கின்றனர்.
    எண்ணமே கெட்டது என்கிறார் அன்னை. நமக்கு நினைக்க உரிமை இல்லை. அதுவும் தவறாக நினைக்க உரிமையில்லை. எலிசபெத் கூறியது உண்மை. ஆனால் அவளை பாதித்தது.
  • எலிசபெத் லிடியாவை பிரைட்டனுக்கு அனுப்பக் கூடாது என எச்சரிக்கிறாள். அதன் பலன் லிடியா ஓடிப்போகிறாள்.
    எலிசபெத்தின் கவலை லிடியாவுக்குத் தெம்பளிக்கிறது என்பது சட்டம். நாம் நினைக்கும் காரணம் எதுவானாலும், நம் தெம்பு நாம் நினைப்பவருக்குப் போகிறது. அவர் காரியம் நிறைவேறுகிறது. இது உண்மையானால் நினைக்காமல் எப்படியிருப்பது? வேறு என்ன செய்வது?

    எலிசபெத் மனம் கலங்குகிறது.
    கலங்கும் மனம் பிரச்சினையை உற்பத்தி செய்யும்.
    லிடியா போகும் பொழுது எலிசபெத் என்ன செய்திருக்க முடியும்?
    அந்த நிலையில் நாமிருந்தால் நாம் எப்படி நடப்பது?
    நாம் அன்பர்கள்.
    நம் மனம் கலங்க அனுமதிக்கக்கூடாது.
    அது போன்ற நிலையில் நாமிருந்தால் மனம் கலங்காமல் விஷயத்தை அன்னையிடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பலன் லிடியாவுக்கு நடந்ததற்கு எதிராக இருக்கும். அவளை மணக்க ஒரு ஆபீசர் பென்னட்டை வந்து உத்தரவு கேட்டு மணப்பான்.

    நம் கவனம் எதிரிக்குத் தெம்பு தரும்.

  • நெதர்பீல்ட் நடனத்தில் மிஸஸ். பென்னட் பேசுவதைக் கண்டு வெட்கப்பட்டு எலிசபெத் தகப்பனார் உதவியை நாடுகிறாள், பலனில்லை.

    மிஸஸ். பென்னட் உரக்கப் பேசி அவமானப்படுகிறாள்.

    தாயார் டார்சி காதில் விழும்படி ஜேனைப் பற்றிப் பேசுவது சரியில்லை என எலிசபெத் மனம் புழுங்கி, வதைகிறாள். அதன் பலன் மிஸஸ். பென்னட்,

    "நான் ஏன் டார்சிக்குப் பயப்பட வேண்டும்?
    நான் இப்படித்தான் பேசுவேன்" என அடம் பிடிக்கிறார்.
    எலிசபெத் முயற்சிக்கு எதிரான பலன் வருகிறது.
    முனைந்து முயன்றால் பலன் எதிராகும்.
    முனையும் உரிமை மனிதனுக்கில்லை.
    எரிச்சல் படவும் உரிமையில்லை.
    எரிச்சல் படாமலிருந்தால் மிஸஸ். பென்னட் தானே அடங்குவார்.
    இது நம்ப முடியாதது.

    இது கதையின் முடிவில் உண்மையாகிறது.

நல்லெண்ணம்

  • எண்ணமே கெட்டது, நல்லெண்ணமும் உயர்ந்ததில்லை என்பது அன்னை கருத்து.
  • நல்லெண்ணம் நல்ல பலன் தரும்.
  • அனைவருக்கும் முதலில், எனக்குக் கடைசி என்ற சட்டத்தை நான் எழுதி வருகிறேன்.
  • 27ஆம் வயதில் இனி திருமணமில்லை, திருமணமில்லாவிட்டால் வருமானமில்லை என்பது சார்லோட் நிலை.
  • அந்த நிலையில் அவள் ஜேன் திருமணமாக என்ன செய்வது என்பதை நினைத்து எலிசபெத் திடம் பேசுகிறாள்.
    அவள் நிலையில் அந்த நல்லெண்ணம் எழ மனம் மிகவும் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
    எலிசபெத் ஷார்லோட் அபிப்பிராயத்தை மறுத்தாலும் ஷார்லோட் கூறும் அறிவுரையின் முக்கியத்துவம் முடிவில் டார்சி ஏன் திருமணத்தை தடை செய்தேன் எனக் கூறும் பொழுது புரிகிறது.
    ஷார்லோட்டிற்கு அறிவும், நல்லெண்ணமும், தன்னலமற்ற மனமும் உண்டு.
  • டார்சி எலிசபெத்துடன் நடனமாட வந்தபொழுது ஷார்லோட் மீண்டும் "விக்காமை நினைத்துக் கொண்டிருக்காதே. டார்சி பல மடங்கு உயர்ந்தவன். இவனை ஏற்றுக்கொள்" என முழு மனதுடன் காதில் மெதுவாகப் பேசுகிறாள்.
  • அவள் நிலையில் பொதுவாக எழக்கூடியது பொறாமை.
    முடிந்தால் இது போன்ற திருமணத்தைத் தடை செய்வாள்.
    ஷார்லோட் இரு முறை நல்லெண்ணத்தால் பூரிக்கிறாள்.
    எனக்குக் கடைசியில் என்ற நிலையுமில்லை.
    எனக்கில்லை. ஜேனும், எலிசபெத்தும் பெரு வாழ்வு வாழட்டும் என்கிறாள்.

    இரண்டு நாளில் ஷார்லோட் திருமணம் முடிகிறது. காலின்ஸுக்கு கிட்டதட்ட 1000 பவுன் சம்பளம். லாங்பார்ன் 2000 பவுனுடன் வருகிறது. கிட்டத்தட்ட பிங்லியின் வருமானம்.

    நல்லெண்ணம் இல்லாததை உற்பத்தி செய்து பெருவாரியாகப் பலிக்கிறது.

    • நம்மைச் சூழ்ந்துள்ளவர் அனைவரும் வளமாக இருக்க மனம் பூரிப்பது நல்லெண்ணம்.
    • நல்லெண்ணம் பலிக்க தவறாது.
    • அதன் நன்றியைத் தவறாது செலுத்தும்.
    மெரிடன் கிராமத்தில் பென்னட் குடும்பமே முதன்மையானது.
    ஷார்லோட் அந்த சொத்திற்கு உரிமை பெறுகிறாள்.
    அத்துடன் பென்னட்டுக்கு உறவாகிறாள்.
    டார்சிக்கும் உறவாகிறாள்.
    எலிசபெத் மூலம் லேடி காதரீனுக்கும் உறவாகிறாள்.

 

******

 



book | by Dr. Radut