Skip to Content

02. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் மதர் ஸ்ரீ அன்னை!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

ஓம் அனந்தமயி சைதன்யமயி சத்தியமயி பரமே!

அன்னை அவர்களின் சமூகத்திற்கு அநேக கோடி நமஸ்காரங்கள். என் பெயர் கிறிஸ்டி. நான் என் தோழி பேபி (Baby) மூலம் அன்னையை அறிந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. அன்னைக்குச் சமர்ப்பணம் செய்து நான் செய்த செயல்கள் அனைத்திலும் எனக்கு மிகப்பெரிய வெற்றியே கிடைத்தது. நான் இங்கு முக்கிய சம்பவத்தை பகிர்ந்துகொள்கின்றேன். திண்டுக்கல்லில் உள்ள தியான மையத்திற்கு நானும் என் ஒரே மகனும் தியானத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்வோம். என் மகன் அன்னையின் அருளால் நன்றாகப் பயன் அடைந்திருக்கின்றான்.

நான் நர்ஸாக (Nurse) பணிபுரிகின்றேன். 15/04/2009 தேதி என் பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லும்போது இரண்டு திருடர்கள் என் கழுத்தில் உள்ள தாலிச் செயின் 5 பவுனை என்னை அடித்துவிட்டுப் பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். அவர்கள் பறித்துச் செல்லும்போது நான் என் அன்னையைத்தான் அழைத்தேன். அப்போது என்னுடன் பணிபுரிபவர்கள் நீங்கள் புதியதாக அன்னையை வணங்குவதால்தான் உங்கள் செயினை பறித்துவிட்டார்கள் என்று கூறினார்கள். நான் அவர்களிடம், அப்படிச் சொல்லாதீர்கள். என் அன்னையின்மேல் எனக்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறது. எனக்கு என் அம்மா அதைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிடுவார்கள் என்று கூறினேன். அதுபோல எனக்கு 13.07.2009 தேதியன்று என் நகை கிடைத்துவிட்டது. எனக்கு நகை கிடைத்தது அன்னையின் அருளால்தான். நானும் என் மகனும் என்றும் அன்னையின் அருளுக்குப் பாத்திரமாக இருக்கவேண்டும். அன்னையிடம் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றேன்.

அன்னையை நம்பியவர் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை. இதை நான் எல்லோரிடமும் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஸ்ரீ அன்னையை எனக்கு நன்கு அறிய வைத்த ஸ்ரீ கர்மயோகி அவர்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். திண்டுக்கல் தியான மையத்தில் பணிபுரிபவர்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அன்னைக்கு என் பல கோடி வணக்கங்கள். நன்றி

-- கிறிஸ்டி, எரியோடு.



book | by Dr. Radut