Skip to Content

03. தவறான அபிப்பிராயங்களும் உண்மையான நிலைப்பாடுகளும்

தவறான அபிப்பிராயங்களும் உண்மையான நிலைப்பாடுகளும்

N.அசோகன்  

வ.எண்
தவறான அபிப்பிராயங்கள்
உண்மையான நிலைப்பாடுகள்
1.
முன்னேற்றத்திற்கு பணம் தான் முக்கியக் கருவி.
பணம் முக்கியக் கருவியில்லை.
முன்னேற வேண்டும் என்ற ஆர்வம்தான் முன்னேற்றத்திற்கு முக்கியக் கருவி.
2.
சிவப்பான தோற்றமுடைய பெண் அழகான பெண்.
தோலின் நிறம் மட்டும் அழகை நிர்ணயிப்பதில்லை. முக லட்சணமும் முக்கியம். சிவப்பான நிறம் கொண்ட பெண்ணிற்கு முக லட்சணம் குறைவாகவும், கருமையான நிறம்
கொண்ட பெண்ணிற்கு முகம் லட்சணமாகவும் இருக்கலாம்.
3.
பட்டம் அறிவிற்கு அறிகுறி. உயர்ந்த பட்டம் வாங்கி இருந்தால் உயர்ந்த அறிவு இருப்பதாக அர்த்தம். வெளித் தோற்றமும், உள்சாரமும் என்றுமே ஒத்திருக்கும்.
பட்டமும், அறிவும் இரண்டும் ஒன்றில்லை. அம்மாதிரியே தோற்றமும், சாரமும் ஒன்றில்லை.
சாரம் இல்லாமல் தோற்றம் அமையலாம். அதுபோலவே தோற்றம் இல்லாமல் சாரமும் அமையலாம்.
4.
இனிய பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள் நல்லவர்கள்.
இனிய பழக்கவழக்கங்களை மட்டும் வைத்து ஒருவர் நல்லவர் என்று சொல்ல முடியாது. தீய குணம் படைத்த ஒருவர் போலியாக நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொண்டு தம் தீய குணத்தை மறைக்கலாம்.
5.
கணவனும், மனைவியும் சமமாகப் பழகலாம்.
நடைமுறையில் இப்படிச் சமமாகப் பழகுவது கடினம். ஒருவர் அதிகாரம் செய்ய மற்றவர் பணிந்து போவதுதான் வழக்கம்.
6.
பொய்மை நிறைந்த இந்த உலகத்தில் உண்மையாக வாழ்தல் கடினம்.
அன்னை பக்தராக இருப்பவர் உண்மையை அடிப்படையாக வைத்து வாழ்ந்து, வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
7.
பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுத்தால் அவர்கள் கெட்டுப் போய்விடுவார்கள்.
சுதந்திரமான சூழலில் வளரும்போதுதான் குழந்தைகளுடைய பர்ஸனாலிட்டி மலர்கிறது.
8.
நமக்கு வேண்டியதை நாம் கேட்கும் பொழுதுதான் அவை நமக்குக் கிடைக்கின்றன.
நாம் மௌன சக்தியைக் கடைப்பிடிக்கும்பொழுது நாம் கேட்டுப் பெறுவதைவிட நமக்கு அதிகமாகக் கிடைக்கும்.
9.
பண பலமும், பதவி பலமும் மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவை நமக்கு எதையும்
பெற்றுத் தரும்.
இவை எதுவும் செயல்படாத நேரங்கள் உண்டு. அப்பொழுது அருளால் மட்டுமே நமக்கு உதவ முடியும்.
10.
அதிகாரத்தைப் பயன்படுத்தினால் தான் வேலை வாங்க முடியும்.
அதிகாரத்தைச் செலுத்தாமலேயே அன்பான தலைமையை வெளிப்படுத்தியே அதிக வேலை
வாங்க முடியும்.
11.
செல்வ வளம் சந்தோஷத்தைப் பெற்றுத்தரும்.
செல்வ வளம் வசதியைப் பெற்றுத் தருமேயொழிய சந்தோஷத்திற்கு உத்திரவாதம் கொடுக்க முடியாது.
12.
ஒருவர் அவருடைய வாழ்க்கை இலட்சியத்தை எட்டிய பின்பு ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.
வாழ்க்கை எவரையும் ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. ஒன்று நாம் முன்னேறிக்கொண்டிருக்கலாம் அல்லது கீழே போய்க் கொண்டிருக்கலாம்.
13.
வாழ்க்கை பாதுகாப்பை நாடுகிறது.
பாதுகாப்பைவிட துணிச்சலாக சாகசம் புரிவதையே வாழ்க்கை நாடுகிறது.
14.
எப்பொழுதும் எல்லோருக்கும் உதவி செய்வது நல்லது.
தராதரம் பார்த்து நாம் உதவி செய்ய வேண்டும். உதவி பெறுபவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வருவதால் அதன் விளைவாக உதவி செய்பவர்களுக்கே தீங்கு செய்யும்
அளவிற்குப் பண்பாடற்ற மனநிலையில் பலர் உள்ளதால் தராதரம் பார்த்துதான் உதவி செய்ய
வேண்டும்.
15.
பணத்திற்கு முதலிடம். மற்ற எல்லாவற்றிற்கும் இரண்டாவது இடம்.
மனிதர்களுக்கு முதலிடம். மற்ற எல்லாவற்றிற்கும் இரண்டாவது இடம்.
16.
முயற்சியின் தொடக்கத்தில் கெட்ட சகுனங்கள் வந்தால் வேலை கெட்டுவிடும்.
சகுனங்கள் வெறும் அறிகுறிகள்தான். நம்முடைய மனோபாவங்களை மாற்றிக் கொண்டால் தோல்வியைத் தவிர்க்கலாம்.
17.
ஆண்கள்தான் பெண்களைத் தேடுகிறார்கள்.
பெண்கள்தான் பெரும்பாலும் முதலில் ஆடவர்களின் கவனத்தைக் கவர்ந்து
இழுக்கும் வண்ணம் செயல்படுகிறார்கள் என்பதும் உண்மை.
18.
வாழ்க்கையில் சரிவு நிகழ்ந்துவிட்டால் மீண்டும் எழுவது கடினம்.
அன்னை பக்தர்களுக்கு போதுமான நம்பிக்கை இருந்தால் சரிவிலிருந்து
மீண்டு மற்றவர்களையும் குறுகிய காலத்தில் தாண்டியே செல்லலாம்.
19.
நம்மைச் சுற்றி உள்ளவர்களை சந்தோஷப்படுத்தினால் அவர்களுடைய அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
மனிதனுடைய ஆசைக்கு அளவில்லை. ஆகையால் யாரையும் பூரணமாக திருப்திபடுத்த முடியாது.
20.
சரளமாக ஆங்கிலம் பேசுவது புத்திசாலிதனத்திற்கு அறிகுறியாகும்.
சரளமாக ஆங்கிலம் பேசுவது மொழித் திறமையைக் காட்டுகிறதே தவிர புத்திசாலித்தனத்திற்கு அடையாளம் என்று வைத்துக்கொள்ள முடியாது.
21.
புலன்கள் வழங்கும் அறிவு சரியானது. அதுவே இறுதியானதும்கூட.
புலனறிவு முதல் அனுபவமேதவிர, அதுவே இறுதியானதில்லை. பகுத்தறிவாலும், உள்ளெழுச்சியாலும் உணர்த்தப்படும் அறிவு புலன்கள் தெரிவிப்பதைவிட வேறுபட்டிருக்கும்.
22.
வாழ்க்கையில் குறுக்கு வழிகளில் வேகமாக முன்னேறலாம்.
குறுக்கு வழிகளில் கிடைக்கின்ற ஆதாயம் தற்காலிகமானதுதான். நீண்ட காலக் கண்ணோட்டத்தில் பார்த்தால் குறுகிய வழியில் செல்பவர்களுக்கு முன்னேற்றம் குறைவாகத்தானுள்ளது.
23.
சமூகத்தில் நிலவும் அபிப்பிராயங்களுக்கும், பண்புகளுக்கும் ஏற்றபடி ஒத்துப்போவது நல்லது.
சமூகப் பண்பாடுகளோடு ஒத்துப் போவதில் நாம் சமூகத்தோடு சுமுகமாக இருக்கலாம். ஆனால் ஏதேனும் புதியதாகச் சாதிக்க வேண்டும் என்று விரும்பினால் சமூகத்தோடு ஒத்துப் போகின்றவர்களால் அது முடியாது. அவ்வகையில் சமூகத்தோடு ஒத்துப் போவது முன்னோடிகளுக்கு நல்லதில்லை.
24.
நமக்குக் கிடைக்கின்ற இயற்கை வளங்கள்தான் நம் முன்னேற்றத்தை நிர்ணயிக்கின்றன.
நமக்குள் இருக்கும் திறமைகள் இயற்கை வளங்களைவிட உயர்ந்தவை. இயற்கை வளங்களின் குறைபாட்டை மனித வளங்கள் ஈடு செய்யும். எவ்வளவு இயற்கை வளங்கள் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும் திறமை இல்லாதபட்சத்தில் அவை வீணாகும்.
25.
நமக்கு வேண்டியவற்றை நாம் எவ்வளவு தீவிரமாகத் தேடுகிறோமோ அவ்வளவு வேகமாக அவை நமக்குக் கிடைக்கும்.
பணத்தையோ, பதவியையோ, வாழ்க்கைத் துணையையோ நாம் தேடிப் போகவேண்டியதில்லை. நம்முடைய உள்மனோ பலம் உயர்ந்திருந்தால் மேற்சொன்னவைகள் தானே நம்மைத் தேடிவரும். உள்ளே தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் வெளியே இவற்றைத் தேடினால் நாம் எவ்வளவு தேடுகிறோமோ அந்த அளவிற்கு அவை விலகித்தான் போகும்.
26.
சிரமங்களும், நெருக்கடிகளும் தவிர்க்கப்பட வேண்டும்.
சிரமத்தின் மூலம் வாழ்க்கை நமக்கு என்ன பாடத்தை வழங்குகிறதோ அந்தப் பாடத்தை நாம் கற்றுக் கொண்டால் சிரமமாக வந்தது வாய்ப்பாக மாறிவிடும். நெருக்கடிகள் வருவதன்மூலம் நம் முன்னேற்றம் விரைவுப்படுத்தப்படுகிறது என்பதும் உண்மை.
27.
வரம்புக்குட்பட்டதும் வரம்பைக் கடந்ததும் இரண்டுமே நேர் எதிரானவை. வரம்பற்றது வேண்டுமென்றால் வரம்புக்குட்பட்டதை விட்டுவிட்டு வரம்பற்றதை நாட வேண்டும்.
வரம்புக்குட்பட்டதையே நாம் சரியாகக் கையாண்டால் அதற்குள்ளிருந்தே வரம்பற்றது வெளிவரும்.
28.
சுறுசுறுப்பாக இருப்பவர்கள் சும்மா இருப்பவர்களைவிட அதிகம் சாதிக்கிறார்கள்.
பிஸியாக இருப்பதால் சாதிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அர்த்தமில்லாத விஷயங்களை  செய்துகொண்டுகூட ஒருவர் பிஸியாக இருக்கலாம். இப்படி அர்த்தம் இல்லாமல் ஓடியாடிக்
கொண்டு இருப்பவரைவிட அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்து திட்டமிட்டபடி வேலை செய்பவர் அதிகமாகச் சாதிப்பார்.
29.
விஞ்ஞானிகள் எதையும் சரியாகப் புரிந்துகொள்வார்கள். அதாவது அவர்கள் செயல்பாடு அறிவுரீதியாக இருக்கும்.
விஞ்ஞானிகள்கூட துறையில் பெயர் எடுத்தவர்கள் சொன்னால்தான் புதிய கருத்தை ஏற்றுக்கொள்வார்கள். பெயர் எடுக்காதவர் சொல்வது உண்மை என்றாலும் அவருக்கு அந்தஸ்து இல்லை என்று சொல்வதை ஏற்பதில்லை. இது அறிவுரீதியான செயல்பாடே இல்லை.
30.
நமக்குப் பிடித்தவர்களை நாம் நல்லவர்கள் என்கிறோம். நமக்குப் பிடிக்காதவர்களை நாம் கெட்டவர்கள் என்கிறோம்.
ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்பது நம் விருப்பு, வெறுப்பைப் பொறுத்ததில்லை. நல்லவர்கள் மேல் நாம் பிரியம் வைக்க கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர நமக்குப்
பிடித்தவர்களை நல்லவர்கள் என்று பேசக்கூடாது.
31.
நம்முடைய பகுத்தறிவுதான் நமக்குக் கிடைத்துள்ள மிகச்சிறந்த கருவி.
நம்முடைய பகுத்தறிவைவிட நமக்குள் இருக்கும் உள்ளெழுச்சித் திறன் பல மடங்கு உயர்ந்தது.
32.
நாம் தேர்ந்தெடுக்கின்ற அரசியல் தலைவர்களுக்கு நாம் அடிபணிய வேண்டும்.
மக்கள் தருகின்ற அதிகாரத்தால்தான் அரசியல்வாதிகள் தலை எடுக்கிறார்கள். ஆகவே மக்கள்
அதிகாரத்திற்குத் தலைவர்கள்தான் கட்டுப்பட வேண்டும்.
33.
வெளிநாட்டிலிருந்து பெறப்படும் நிதி உதவி முன்னேற்றத்தை விரைவுபடுத்தும்.
அப்படிக் கிடைக்கின்ற நிதிஉதவி சுய முயற்சியைக் கெடுப்பதால் அது முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தும்.
34.
முன்னேற்றம் படிப்படியாகத்தான் வரும்.
அப்படி, படிப்படியாகத்தான் வருமென்று வாழ்க்கையில் விதிமுறை ஒன்றுமில்லை. போதுமான முயற்சியும், அருளின் ஆதரவும் இருந்தால் முன்னேற்றம் வேகமாகவும்
பல மடங்கு அதிகமாகவும் வரும்.
35.
பணமும், அதிகாரமும் மக்களைக் கெடுக்கும்.
பணமும், அதிகாரமும் இயற்கையிலேயே கெட்டவை இல்லை. மனிதனுடைய அகந்தைதான்
இவற்றைத் தவறாகப் பயன்படுத்துகிறது.
36.
சில சமூகத்தினரும், சில ஜாதியைச் சேர்ந்தவரும் இயற்கையிலேயே மற்றவரைவிட அறிவில்
சிறந்தவர். அதனால்தான் அவர்கள் மற்ற சமூகத்தினரைவிட அதிகமாக முன்னேறி
இருக்கிறார்கள்.
அப்படி யாரும் இயற்கையில் உயர்ந்த அறிவு கொண்டவர்கள் இல்லை.
முயற்சி எடுத்துதான் அறிவை வளர்க்க வேண்டும். பின்தங்கிய சமூகத்தினர் எவரும் இப்படி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய போதுமான முயற்சி எடுத்தால்
முன்னேறிய சமூகத்தினருக்கு இணையாக இவருடைய அறிவையும் வளர்த்துக்கொள்ளலாம்.
37.
நல்லவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும். கெட்டவர்கள் சீரழிய வேண்டும்.
வாழ்க்கை நியாய தர்மங்களுக்குக் கட்டுப்படாதது. ஆகையால் நன்னடத்தைக்கு எப்பொழுதுமே வெற்றி கிடைக்கும் என்பதில்லை. வலிமையும், திறமையும் உள்ளவர்கள்
வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். வலிமையும், திறமையும் குறைந்தவர்கள் வாழ்க்கையில் தோல்வி பெறுகிறார்கள்.
38.
வாழ்க்கையில் வெற்றி கிடைத்துவிட்டது என்றால் அதை சமாளிப்பது சுலபம்.
சிரமங்களைச் சமாளிப்பதைவிட வெற்றியை சமாளிப்பதுதான் கடினம்.
39.
வெற்றி கிடைத்தது என்றால் அதை நாம் கொண்டாட வேண்டும்.
கொண்டாட்டங்களைக் குறைத்தோம் என்றால், நம்முடைய எனர்ஜி சேகரமாகி, நாம் மேலும் சாதிக்க உதவும்.
40.
நாம் பெறுவதன் மூலம் வளர முடியும். கொடுத்தால் நமக்குக் குறையும். வாழ்க்கை
வரம்பிற்குட்பட்டதாக இருப்பதால் இம்மாதிரி நேரிடுகிறது.
வாழ்க்கை உண்மையில் வரம்பற்றது. வரம்பற்றதன் விதிமுறைகளின்படி
பார்த்தால் நாம் எந்தளவிற்கு மற்றவர்களுக்குக் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு வளர்ச்சி வரும்.
41.
நாத்திகவாதிகளும், மத நம்பிக்கை இல்லாதவர்களும் கடவுளைவிட்டு விலகி நிற்கிறார்கள்.
உண்மையைத் தேடுகின்றபட்சத்தில் அவர்களும் ஆண்டவனுக்கு நெருக்கமாக இருப்பதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
42.
நம்முடைய சொந்தச் செயல்பாடுகளுக்கு மட்டும் தான் நாம் பொறுப்பு ஏற்க
வேண்டும். இல்லாவிடில் நமக்கு அனாவசிய தொந்தரவு வரும்.
தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கைக்குப் பொறுப்பு ஏற்பவர்களுக்குத் தன்னை மட்டும்
கருதுபவர்களைவிட மன விசாலம் அதிகமாக இருப்பதால் இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில்
அதிகமாகச் சாதிப்பார்கள்.
43.
தமக்கு வரும் சிரமங்களிலிருந்து மக்கள் சரியான பாடங்களைக் கற்றுக்
கொள்வதால் செய்த தவற்றை திரும்பச் செய்வதில்லை.
சிரமங்கள் வழங்கும் வாழ்க்கைப் பாடங்களைப் பலபேர் சரியாகக் கற்றுக் கொள்வதில்லை. ஆகவே செய்த தவற்றையே திரும்பவும் செய்கிறார்கள்.
44.
மனிதன் பகுத்தறிவோடு செயல்படுபவன்.
மனிதனுக்குப் பகுத்தறிவு இருந்தாலும் அவன் பகுத்தறிவோடு செயல்படுவது இல்லை.
பெரும்பாலானவர்கள் அவர்களுடைய உணர்ச்சிகளின் அடிப்படையில்தான் செயல்படுகிறார்களே தவிர அறிவுபூர்வமான செயல்பாடு என்பது இரண்டாம்பட்சம் ஆகும்.
45.
நம்முடைய பணத்தின் மதிப்புக் குறைவதால் பணவீக்கம் கெட்டதாகும்.
பணவீக்கம் என்பது முன்னேற்றத்தினுடைய ஓர் அறிகுறியாகும். ஆகவே, இரண்டும்
சேர்ந்துதான் வரும். ஆகவே ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.
46.
வெற்றியும், தோல்வியும் நம்முடைய வாழ்க்கையில் மாறி மாறித்தான் வரும்.
சாதிப்பதற்கான விதிமுறைகளை அறிந்தவர்களுக்குத் தொடர்ந்து இடையறாத வெற்றி சாத்தியம்.
47.
வாழ்க்கையில் முக்கிய விஷயங்களைக் கவனித்துக் கொண்டால் போதும். விவரமாக எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
சிறு சிறு காரியங்களையும் நேர்த்தியாகச் செய்யும்பொழுதுதான் நமக்குப் பெரிய அளவில் வெற்றி கிடைக்கிறது.
48.
நம்முடைய வாழ்க்கை நிலைக்கு ஏற்றவாறு நம்முடைய ஆசைகள் இருக்கவேண்டும்.
வாழ்க்கையில் உயர வேண்டும் என்று நமக்கு வரும் ஆர்வத்திற்கு அளவில்லை. ஆர்வம் எந்த
அளவிற்கு அதிகரிக்கிறதோ அந்த அளவிற்கு வாய்ப்பும் நம்மைத் தேடி வரும்.
49.
நம்முடைய வாழ்க்கை குறுகிய ஆயுள் காலத்தைக் கொண்டதால் வேகமாக
வாழ்ந்து ஆசைகளை எல்லாம் அனுபவித்துக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையை வேகமாக வாழ்பவர்கள் சீக்கிரம் சோர்வு அடைந்துவிடுகிறார்கள் என்பதும் உண்மை. இறுதியில் பார்த்தால் நிதானமாக போகிறவர்களைவிட இவர்கள் குறைவாகத்தான் சாதித்திருப்பார்கள்.
50.
தனிப்பட்ட சொத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டியது.
உலகம் சத்தியஜீவியமான பிறகு தனியார் சொத்து மற்றும் பரம்பரைச் சொத்தும் மற்றும் வாரிசு உரிமை என்று இவையெல்லாம் இருக்கா.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
கீழிருந்து நாம் பணத்தை எட்டினால் அது அசுரன். மேலிருந்து அதை நாடினால் அது அன்னையின் சக்தி.
 
பணம் அன்னை சக்தியாகும் அசுரன்.

******



book | by Dr. Radut