Skip to Content

10. சாவித்ரி

சாவித்ரி

 

P.110 Only when we have climbed above ourselves

நம்மை நாம் கடந்தபின்

  • பிரம்மம் நம் யாத்திரையைச் சந்திக்கிறது
  • காலத்தைக் கடந்த சத்தியத்துடன் நம்மை இணைக்கிறது
  • விதிக்கப்பட்ட கதியைச் சொல்லாக எழுப்புகிறது
  • அது தெய்வமான செயல், மரணமறியாத எண்ணம்
  • ஒளியின்கதிர் மூளையைப் பெருமையாகச் சூழ்கிறது
  • க்ஷணமழியும் பாதையில் இழிந்துவரும் போக்கு
  • காலத்தைக் கடந்த ரூபங்கள் வருகின்றன
  • அவை அறிவு பெறும் விருந்து, இதயம் அழைக்கும் உறவு
  • அழியும் சுருக்கத்தை அவை போற்றிப் பாராட்டும்
  • விடுதலைக்குரிய மின்னல் அரிதாக எழுந்தது
  • திருஷ்டியின் மென்மை கொண்ட ஐயம் பிடித்துக்கொண்டது
  • இங்குமங்கும் புவியில் நாமென்னஎன்ற பிம்பம்
  • நம்மைத் தொட்டுத் தொடர்கிறது
  • பூமியின் குறையே நாம் வாழ்ந்து வளரும் லோகம்
  • இயற்கையெனும் கண்ணாடி நம் உண்மை சொரூபத்தைக் காட்டுவதில்லை
  • அதன் பெருமை மறைவில் உறைகிறது
  • புவியின் ஐயம் நம் பிதிராஜ்ஜியத்தை மறக்கிறது
  • தூரத்து ஜோதி சொந்த சூரியனாகும்
  • இன்று வரும் பலம் அன்று நட்புள்ள சக்தியாகும்
  • சொல்லைக் கடந்தது குரலெழுப்பும் இரகஸ்யம்
  • ஜடமெனும் திரையில் அழியாதது எரிந்து சாம்பலாகும்
  • அழியுமுடல் தெய்வத்தின் ஆடையாகி மாற்றமுறும்
  • ஆத்மபெருமை நம் அழியாத ஊற்று
  • முடிவில்லாத காலத்தில் அது நம் முடிவாகும்
  • அறிவையும் புலனையும் அளவுகடந்து கடந்த பெரியது
  • நம்மைச் சூழ்ந்து ஊடுருவுகிறது
  • எழுச்சி பெற்ற ஏகன் நம்மை ஆடையாகச் சூழ்கிறான்
  • வாழ்வின் அம்சங்கள் சூட்சுமமாகச் சந்திக்கின்றன
  • சிருஷ்டியனைத்தும் ஒரே தொடர்சங்கிலி
  • மூடிய வாழ்வில் நம்மைத் தனித்து நிறுத்தவில்லை
  • ஜடமான சக்தி இருளான வேகமாக ஓடுகிறது
  • அறிய முடியாத பிரம்மம் அங்கு அரியாசனம் பெறுகிறது
  • ஆத்மசெயலில் வாழ்வு புனிதமான ஓட்டம்

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உலகில் அவதாரமாக நடமாடிய பொழுதும், மனிதனை தீவிரமாக நெருங்க அன்னை விரும்பினால் தோல்வி முதலியவற்றால் நெருங்குவதே அன்னை வழக்கம்.
 
உடனிருந்தபொழுதும் அன்னை முறை மாறவில்லை.

*****



book | by Dr. Radut