Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XXII. The Problem of Life
22. வாழ்வின் பிரச்சனை
Man develops into a self-conscious being.
Page No.215
 
மனிதன் தன்னை அறியும் ஜீவனாக வளர்கிறான்.
There he is a truly thinking being.
Para No.12
அங்கு அவன் உண்மையில் சிந்திப்பவன்.
He does it gradually.
இதை அவன் படிப்படியாகச் செய்கிறான்.
In that proportion he becomes aware of the
discord.
அந்த அளவில் அவனுக்கு இப்பிணக்கு தெரிய வருகிறது.
He becomes aware of the disparateness of his
parts.
அவன் கரணங்கள் வேறுபடும் அளவை அவன் அறிகிறான்.
He seeks to arrive at a harmony.
சுமுகத்தை அங்கெல்லாம் நாடுகிறான்.
It is sought in mind, life and body.
மனம், வாழ்வு, உடலில் அதைத் தேடுகிறான்.
He seeks a harmony of knowledge and will.
ஞானமும் உறுதியும் சுமுகமாகக் காண முயல்கிறான்.
It is a harmony of his members.
அவன் கரணங்களுடைய சுமுகமது.
Sometimes there is a relative peace.
ஓரளவு சாந்தி சில சமயம் எழுகிறது.
It is a workable compromise.
அது நடைமுறை சமரசம்.
He wants to stop short at that.
அத்துடன் நிறுத்திக் கொள்ள முயல்கிறான்.
A compromise is a halt on the way.
சமரசம் வழியில் களைப்பாறுவது.
There is the Deity within.
உள்ளே தெய்வமுள்ளது.
It will not be satisfied eventually.
அது அப்பொழுது திருப்திப்படாது.
It needs perfect harmony.
பூரண சுமுகம் அதற்குத் தேவை.
It combines itself with the integral development.
அது பூரண வளர்ச்சியுடன் சேரும்.
It is of our many sided potentialities.
நம்முள் உள்ள அத்தனைத் திறமைகளும் சேர்ந்தது அது.
This is the minimum.
இதைக் குறைக்க முடியாது.
Anything else is an evasion of the problems.
மற்ற எதுவும் பிரச்சனையைத் தவிர்க்கும்.
It is not a solution.
அது தீர்வாகாது.
Or else it will be a temporary solution.
இல்லையேல் அது தற்காலிகமானத் தீர்வு.
It is a resting place.
அது தங்குமிடம்.
The soul continually enlarges.
ஆத்மா தொடர்ந்து பெருகுகிறது.
It ascends so.
தொடர்ந்து உயருகிறது.
It is a resting place for the soul.
அப்படிப்பட்ட ஆத்மாவுக்கு அது ஒரு புகலிடம்.
A perfect harmony is possible.
சிறப்பான சுமுகம் ஏற்படலாம்.
It has several demands.
அதற்குத் தேவையானவை பல.
They are the essential terms.
அவை முக்கிய நிபந்தனைகள்.
Perfect mentality is one.
சிறப்பான மனநிலையொன்று.
Perfect play of vital force is another.
பிராண சக்தியின் சிறப்பான செயல் மற்றொன்று.
Perfect physical existence is one more.
சிறப்பான உடல் வாழ்வும் ஓர் அம்சம்.
Present condition is radically imperfect.
உள்ளது அளவு கடந்த குறையுடைய நிலை.
We seek power of perfection.
சிறப்பின் திறனை நாம் நாடுகிறோம்.
How can we find it?
இந்நிலையில் அதை எப்படி நாடுவது?
Mind is rooted in division.
மனம் பிரிவினையில் வேறூன்றியுள்ளது.
It is limited.
அது அளவுக்குட்பட்டது.
It cannot provide us that power.
அந்தச் சக்தியை மனம் தர இயலாது.
Life and body are the energy of mind.
உடலும் வாழ்வும் மனத்தின் சக்தி.
They are the frame of mind.
அவை மனத்தால் சூழப்பட்டவை.
Mind is limited and dividing.
மனம் பிரிப்பது, அளவுக்குட்பட்டது.
The principle and power of perfection are there.
சிறப்பின் சக்தியும் சட்டமும் உள்ளன.
It is in the subconscient.
அவை ஆழ் மனதில் உள்ளன.
They are wrapped up.
அவை மூடப்பட்டுள்ளன.
A tegument and a veil wrap them up.
ஒரு போர்வையும், ஜவ்வும் மூடியுள்ளன.
They are of the lower Maya.
அவை தாழ்ந்த மாயையினுடையவை.
It is a mute premonition.
ஊமையான எதிர்கால நினைவு அது.
It emerges as an unrealised ideal.
கிட்டாத இலட்சியமாக அது எழுகிறது.
In the superconscient they await.
பரமாத்மாவில் அவை காத்திருக்கின்றன.
They are open, eternally unrealised.
வெளிப்படையாக இன்னும் சித்திக்காத இலட்சியமாக இருக்கின்றன.
Still they are separated from us.
இன்னும் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளன.
It is by a veil of self-ignorance.
தன்னையறியாத அஞ்ஞானத் திரையால் பிரிக்கப்பட்டுள்ளன.
There is the reconciling power and knowledge.
சமரசம் செய்யும் ஞானமும் பவரும் உண்டு.
It is not in our present poise.
அது நம்மிடம் இன்றில்லை.
Not below, but above, it is there.
அது நமக்குக் கீழேயில்லை, மேலேயுள்ளது.
Man is acutely aware of the discord.
Page No.216
மனிதனுக்கு இப்பிணக்கைக் கூர்ந்து அறிய முடியும்.
As he develops, he knows it.
Para No.13
வளரும்பொழுது அவன் இதை அறிவான்.
He is aware of this ignorance.
இந்த அஞ்ஞானத்தையும் மனிதன் அறிவான்.
They govern the relations with the world.
உலகத்தொடர்பை அவை பராமரிக்கின்றன.
Man is acutely intolerant of it.
மனிதனுக்கு அது பொறுக்கவில்லை.
He is more and more set upon finding a principle.
ஒரு சட்டத்தைக் காண அவன் முனைந்துள்ளான்.
It is a principle of harmony, joy, unity.
சுமுகம், சந்தோஷம், ஐக்கியத்தாலான சட்டமது.
This too can only come to him from above.
இதுவும் அவனுக்கு மேலிருந்துதான் வர வேண்டும்.
The individual has lost his own universal self.
மனிதனுக்குத் தன் பிரபஞ்ச அம்சம் போய்விட்டது.
He must recover it.
மீண்டும் அவன் அதைப் பெற வேண்டும்.
For that he must become one with that of his
fellow men.
அதற்கு உடனுடையவர்களுடைய வாழ்வுடன் மனிதன் ஒன்ற வேண்டும்.
It must be a spiritual oneness.
அது ஆன்மீக ஒருமையாக இருக்க வேண்டும்.
Also it must be practically so.
நடைமுறையில் அது ஒன்றாக இருக்க வேண்டும்.
It is done by developing him.
மனித வளர்ச்சியால் அதைச் செய்ய வேண்டும்.
His mind, will, emotions, life-force, body must be developed.
மனம், உறுதி, உணர்ச்சி, வாழ்வின் சக்தி வளர வேண்டும்.
He must have the mind of others.
பிறர் மனத்தை அவன் பெற வேண்டும்.
His mind shall have the knowledge of other minds.
மற்றவர் மனத்தின் அறிவை அவன் மனம் பெற வேண்டும்.
It should be as of itself.
அவன் மனம் பிறர் மனமாக வேண்டும்.
It must be free from mutual ignorance.
ஒருவரையொருவர் அறியாதது போக வேண்டும்.
Misunderstanding must go.
பிறரைப் பற்றிய தவறான அபிப்பிராயம் அகல வேண்டும்.
His will must feel with the will of others.
அவன் உறுதி மற்றவர் உறுதியாக வேண்டும்.
His emotional heart must contain the emotion of others.
அவன் உள்ளம் பிறர் உள்ளத்தைப் பெற வேண்டும்.
It is a life-force that senses others' energies.
பிறர் சக்தியை உணரும் வாழ்வு சக்தியது.
It accepts them as its own.
பிறர் சக்தியைத் தன் சக்தியாக அது ஏற்கும்.
It seeks to fulfill them as its own.
தனதாகவே அவற்றைப் பூர்த்தி செய்யும்.
It is a body that is not a wall of imprisonment.
உடல் சுவரல்ல, சிறையல்ல.
It is not a defence against the world.
அது உலகைத் தடுக்காது.
There is a law of Light and Truth.
ஜோதி, சத்திய சட்டமுண்டு.
It shall transcend the aberrations and errors.
எல்லா உடைப்புகளையும், தவற்றையும் அது கடக்கக் கூடியது.
It can do so with much sin and falsehood of
others.
பிறர் பாவம், பொய்யைப் பெரிய அளவில் கடக்கும்.
They are of others' minds, wills, emotions and life energies.
அவை பிறர் மனம், உறுதி, உணர்ச்சி வாழ்வு சக்தியினுடையது.
The subconscient has this life of the All.
அவன் ஆழ்மனம் அனைவர் வாழ்வையும் உட்கொண்டது.
The superconscient has it.
பரமாத்மா அதைப் பெற்றுள்ளது.
It is under the condition that necessitates our
motion upwards.
நாம் உயரும் வழி அதற்குரிய நிபந்தனை.
There is a Godhead.
இறைவன் உறைவிடம் உண்டு.
It is concealed in the inconscient ocean.
ஜட ஜீவிய சமுத்திரத்தில் அது ஒளிந்துள்ளது.
There darkness is wrapped within darkness.
அங்கு இருட்டு இருட்டில் மூழ்கியுள்ளது.
Man is not moving towards it.
மனிதன் அதை நோக்கிச் செல்லவில்லை.
It is in the highest ether of our being.
அது நம் உயர்ந்த ஆகாயத்தில் உள்ளது.
It is the original impulse.
அது ஆரம்ப உந்துதல்.
It has carried upward the evolving soul.
வளரும் ஆன்மாவை அது உயரே எடுத்துச் சென்றது.
It took to the type of our humanity.
நாமுள்ள நிலைக்கு அது எடுத்துச் சென்றது.
The race must aspire for this ascent.
Page No.217
மனித குலம் இவ்வுயர்வை நாட வேண்டும்.
It is conducted indeed through love.
Para No.14
இதை அன்பின் மூலம் அழைத்துச் செல்கின்றார்.
Mental illumination and vital urge to possession do so.
ஞானத் தெளிவும் பிராணனின் வேகமும் இதைச் செய்கின்றன.
Self-giving too does it.
பரநலமும் இதற்குத் துணை.
They lead beyond supramental unity.
அவை சத்திய ஜீவிய ஐக்கியத்தை நாடும்.
It transcends and fulfils them.
அது அவற்றைக் கடந்து நிறைவு பெறுவது.
Otherwise the race will fall by the wayside.
இல்லையெனில் மனித குலம் வழி தவறும்.
The victory will be left to other creations.
வெற்றி மற்றவரைச் சேரும்.
They are the new creations of the eagerly travailing Mother.
அவை புதிய சிருஷ்டிகர்த்தா. அன்னை வெளி வரும் பாதையிது.
The supramental unity is to be founded.
சத்திய ஜீவிய ஐக்கியம் ஏற்பட வேண்டும்.
It is a realisation of conscious unity.
அது தன்னையறியும் ஐக்கியமெனும் சித்தி.
It is with the One.
பரமாத்மாவுடன் இணைவது அது.
It is a unity with all.
எல்லா ஜீவாத்மாக்களுடனும் இணைவதுமாகும்.
Humanity seeks its goal and salvation.
மனித இனம் தன் இலட்சியத்தையும், மோட்சத்தையும் நாடுகிறது.
This is the fourth status of Life.
இது வாழ்வின் நான்காம் நிலை.
It is on the ascent towards the Godhead.
 
இறைவனை நோக்கி எழும் யாத்திரை இது.
Contd…..
தொடரும்......

*******



book | by Dr. Radut