Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

56. மனித உறவு ஒத்துழைப்பு முழுவதுமில்லை என்ற நேரம் - உள்ளொளி ஒன்றே உறுதுணை என்ற நேரம் எழுவது.

  • காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்பது பட்டினத்தார் வாக்கு.
  • ஒரு பிரெஞ்சு ஆசிரியர் கடவுளை நோக்கி, "என்னை என் நண்பர்களிடமிருந்து காப்பாற்று, எதிரிகளை நானே சமாளித்துக் கொள்வேன்'' என்றார்.
  • நேரம் வர வேண்டும் என்பது தமிழ்நாட்டுப் பெருஞ்சொல், அது இந்திய கலாச்சாரத்திற்குரியது.
  • நேரம் வராமல் காரியம் கூடி வாராது.
  • வருமானமில்லாத நேரம் நண்பர்களையும், உறவினர்களையும் சோதனை செய்யும் உறைகல்.
    இல்லானை இல்லாளும் வேண்டாள்.
    ஈன்றெடுத்த தாய் வேண்டாள் என்பது இலக்கியம்.
  • இல்லை என்ற நேரம் பெரும்பாலோர் விலகி விடுவர். சிலர் உடனுறைவார்கள்.
  • ஆபத்து எனில் அவர்களில் பலர் விலகுவர், ஒருவர் தங்குவார்.
  • சத்தியம் அவசியம், அன்னையை விட்டு அகல முடியாது எனில் அவரும் விலகுவார்.
  • மருந்தில்லாத வியாதி, ஆபத்தானது எனில் டாக்டர்கள் உள்ளதை உறவினருடன் பகிர்ந்து கொள்வார்.
  • அவரை எந்த டாக்டரும் காப்பாற்ற முயல மாட்டார்கள்.
  • அரிதான டாக்டருக்கு அதைச் செய்யத் தோன்றி வெற்றி பெறுதல் தொழிலை அறியும்.
  • 60 நாள் எந்த மருந்திற்கும் இறங்காத ஜுரம், ஒரு டாக்டர் கொடுத்த வைட்டமின் மாத்திரையால் 2 நாளில் இறங்கியது.
  • அப்படிப்பட்ட டாக்டர் நோயாளியிடம் உள்ளதைக் கூறாமல் ஓரளவு இல்லாததைக் கூறி நம்பிக்கை இழக்காமல் காப்பாற்றுவார். அவருக்கு தெய்வாம்சம் உண்டு.
  • மாரிஸ் குட்மென் என்றவர் விமானத்திலிருந்து விழுந்து முதுகெலும்பில் முக்கிய பகுதிகள் நசுங்கி உடல் அசைவற்று பேசவும் முடியாமலிருந்த நிலையில் 24 மணிக்கு மேல் தாங்காது என டாக்டர் கூறினார்.
  • அவருக்குப் பேச வரவில்லை. கண்ணை மட்டும் இமைக்க முடியும். அதன் வழி மனைவியிடம் பேச முயன்று நான் 6 மாதத்தில் இதை விட்டு எழுந்து நடந்து வீட்டிற்கு வருவேன் என்றார்.
  • அவருக்குத் துணை மருந்தில்லை, டாக்டரில்லை, மன உறுதியே மருந்து.
  • தெய்வ பக்தியுள்ளவர், கிருத்துவர்.
  • நாளுக்கு நாள் எதிர்பாராத பலன் ஏற்பட்டது.
  • அவர் கூறியபடி கிருஸ்துமஸுக்கு முன் எழுந்து நடந்து வீட்டிற்குப் போனார்.
  • உடலை டாக்டர் கைவிட்ட நேரம்.
  • சத்திய ஜீவியம் சூழலிலிருப்பதால் முழு முயற்சி செய்தவருக்கு அது தரும் உதவி.
  • பஞ்ச தந்திரக் கதையில் நண்பனைத் துரோகம் செய்தவன் கரடி என்ன சொல்லிற்று என்று கேட்டபொழுது, உன்னைப் போன்ற நண்பனை நம்பாதே என்றது என்பது கதை.
  • வசதியுள்ள நேரம், நல்ல நேரத்தில் உடனிருப்பவர்கள் எளிய சாதாரண மனிதர்கள்.
  • ஆபத்து, வழக்கு, வம்பு, பெரிய இடத்துப் பொல்லாப்பு என்றால் அனைவரும் அடியோடு விலகுவர்.
  • உள்ளுறை தெய்வமே துணை.
  • எவருக்கும் எளிமையாக எழாத நிலை.
  • கடவுளை மட்டும் நம்பலாம் என்ற அறிவுரையைப் பெற வேண்டியவர்க்கு மட்டும் எழும்.
  • அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்.
  • அந்த நேரம் மனிதரைச் சரியாகப் புரிந்து கொள்ளலாம்.
  • எவரும் உடன் வரமாட்டார்.
  • அந்த நேரம் அன்னை தவறாது வருவார்.
  • அன்னை மட்டும் வருவார்.
  • ஆபத்திலிருந்து தப்புவது பெரிது.
  • அதனினும் பெரியது "இது பூரண யோக வாயில்" என அறிவது.
  • அந்த நேரம் அன்னை தரிசனம் ஆத்ம தரிசனம்.
  • அபூர்வமான நேரம், இவ்வுலகை விட்டு அன்னை உலகுக்கு அழைப்பு வரும் நேரம்.

தொடரும்.....

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
கண்ணை மூடி உள்ளே எழுப்பும் குரல் கடல் கடந்து கேட்கும்.
 

******



book | by Dr. Radut