Skip to Content

07. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

பிரம்மத்திற்கும் உலகிற்கும் உள்ள பிரிவினையை நாம் கடப்பது அவசியம்

  • மரபு இறைவன் உலகை சிருஷ்டித்தான் என்கிறது.
  • குயவன் பானையைச் செய்தால் குயவனும், பானையும் வேறு, வேறு.
  • ஸ்ரீ அரவிந்தம் இதை மாற்றி இறைவன் தானே உலகமானான் என்கிறது.
  • இதனால் உலகம் வேறு, இறைவன் வேறு என்பது மாறி உலகமே இறைவன், உலகிலுள்ள ஒவ்வொரு பொருளும் இறைவன் - சர்வம் பிரம்மம் - என்றாகிறது.
  • உலகில் பொருள்கள் ஜடமாகவும், செயல்கள் சலனமாகவும், ஞானம் எண்ணமாகவும் தோன்றுகின்றன.
  • அவை தோற்றம்.
  • தோற்றம் எதுவானாலும், விஷயம் ஒன்றே. அனைத்தும் பிரம்மம்.
  • மனிதனுக்கு மூன்று அம்சங்கள் உள.
    • அவை உலகுக்குரிய ரூபம் (individual).
    • பிரபஞ்சத்திற்குரிய பொதுத்தன்மை (universal).
    • கடந்ததற்குரிய பிரம்மம் (Absolute transcendence).
  • இம்மூன்றையும் பகவான் ஜீவியத்தின் பொது ரூபங்கள் என்கிறார்.
  • நாமறிந்த அம்மனிதனுக்கும் அம்மூன்று அம்சங்கள் உள.
    • குடும்பம் நடத்தும் தனி மனிதன்.
    • ஊருக்குரிய பொது மனிதன்.
    • பிரம்மத்திற்குரிய பரம்பொருள் அம்சம்.
  • சிருஷ்டி என்பது ஒரே அம்சத்தாலானதல்ல.
  • உலகம் முழுவதும் ஜடமாகவோ, உயிராகவோ, பிரம்மமாகவோ இருந்தால் ருசிக்காது.
  • பல அம்சங்கள் பல நிலையில் வந்து கலந்து மிளிர்வது உலகம்.
  • சங்கீதம் என்றால் என்றும் ஒரே பாட்டு, உடை எனில் தினமும் ஒரே உடுப்பு, சாப்பாடு எனில் தினமும் ஒரே உணவு என்றில்லை.
  • அவை பலதரப்படுவதால் ரஸம் எழுந்து வாழ்வு ருசிக்கிறது.
  • விளையாட்டு, படிப்பு, கதை, நாடகம், பொழுதுபோக்கு ஆகியவற்றில் பலவகை எழுவதால் வாழ்வு சிறப்படைகிறது.
  • பல்வேறு பண்புகள் மொழிகளாக நாடு பிரிந்து கலந்து உயிர்த்தெழுந்து சிறப்பாகும் பரிணாம முயற்சியை இயற்கை இந்தியாவில் மேற்கொண்டதால் அதற்குரிய அடிப்படை ஐக்கியம். நாடு ஒருமைப்பட வேண்டி இயற்கை அந்நிய ஆட்சியை 600 ஆண்டுகட்கு முன் நாடியதாகப் பகவான் கூறுகிறார்.
  • அதுவே நாட்டின் கலாசாரச் சிறப்பு.

*******



book | by Dr. Radut