Skip to Content

09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்தான்.
    திருநாளும் வெறுநாளாச்சு.

    சிரிக்காதவன் சிரித்தால் திருநாள் பெருநாளாகும்.

  2. விடியா மூஞ்சி வேலைக்குப் போனால், வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படாது.

    விடியா மூஞ்சி அன்பனானால், வேலை தேடி வரும்.
    வேலை செய்யுமுன் கூலி வரும்.

  3. வீட்டுக்குச் செல்வம் மாடு. தோட்டச் செல்வம் முருங்கை.

    மனிதனுக்குச் செல்வம் மனநிறைவு.

  4. கடுகு அளவும் களவுதான். கற்பூரம் களவும் களவுதான்.

    கருத்தின் ஆழத்தில் களவு சமர்ப்பணம்.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வேண்டியதைக் கேட்பது பிரார்த்தனை.
கொடுப்பதை ஏற்பது சமர்ப்பணம்.
ஏற்பவன் இல்லாமற் போவது சரணாகதி.
 

*******



book | by Dr. Radut