Skip to Content

13. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

 

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ

ஓம் ஸ்ரீ ஆனந்தமயீ சத்யமயீ பரமே

இக்கடிதத்தை மலர்ந்த ஜீவியம் ஸ்ரீ அன்னை அன்பர்களுடன் கலந்து கொள்ள விரும்புகிறேன்.

தவத்திரு ஸ்ரீ கர்மயோகி ஐயா அவர்கட்கு நமஸ்காரம். தங்களுக்கு நான் கடந்த 7.09.2010இல் ஓர் கடிதமெழுதியிருந்தேன். அதில் 15 சென்ட் எனது வீட்டு மனை விற்பனையில் கிட்டதட்ட 20 லட்சம் இழந்தது பற்றி எழுதியிருந்தேன். தாங்கள் எனக்கு 20.09.2010 பதில் எழுதியிருந்தீர்கள். அதில் அன்னையை மட்டும் முழுமையாக ஏற்றுக்கொண்டால் எந்த ஒரு பிரச்சனையுமிருக்காது என்றும், அதில் பகவான், அன்னை காயத்ரி மந்திரங்களையும் எழுதி பிரார்த்தனையுடன் சொல்லச் சொல்லியும், பிரசாதம் ஆசி, அன்பு, பாதுகாப்பு, சந்தோஷம் தாங்கி வருவது என குறிப்பிட்டு இருந்தீர்கள். அச்சமயம் நான் அன்னைக்கு காணிக்கைக் கூட அனுப்பி வைக்கவில்லை. 2 வருடங்களுக்கு முன்பாக ஓர் அடாவடிக்காரரின் வீட்டுக்கு வயரிங் வேலை செய்து கொடுத்தேன். அதன் கூலியை பல தடவைகள் கேட்டுப் பார்த்தும் கிடைக்காமல் போகவே அதை விட்டும் விட்டேன், மறந்தும் விட்டேன். தங்கள் கடிதம் கிடைத்த மறுநாள் நான் பல தடவை கேட்டும் கிடைக்காத சம்பள பணம் வீடு தேடி வந்து கொடுத்துவிட்டு போகின்றார். நான் இழந்து விட்டேன் எனக் கருதிய பணம் வீடு தேடி வருகின்றது. அது அன்னையின் அருளாக மெய்சிலிர்க்கின்றேன்.

நானும் இன்னும் இரு நபர்களும் வக்கீல் மூலமாக நடக்கும் ஓர் உரிமை கழகத்திற்கு மெம்பராக சேர்வதற்காக பணம் கட்டி இருந்தோம். அதில் மெம்பருக்கான ஐடிண்டிகார்டு கொடுக்க வேண்டும். போன் செய்து கேட்டால் போனை கட் செய்து விடுவார். இப்படியே பல மாதங்களாக போக்கு காட்டிக் கொண்டு இருந்தார். நான் 9.2.2011 மாலை 5.45 மணிக்கு அன்னையிடம் பிரார்த்தனை செய்து விட்டு மனக்கலக்கத்தில் படுத்துவிட்டேன். 5 நிமிடங்கள் கழித்து அதே வக்கீல் எனக்கு போன் செய்து எனக்கு அறிமுகமான நபரின் மூலமாக கொடுத்தனுப்பி வைக்கிறார். இதுவும் அன்னையின் அருள்.

எதற்கும் வம்பிற்கு இழுக்கும் ஓர் நபர் எனக்கு பிரச்சனை கொடுத்ததால் நான் போலீஸில் ரிப்போர்ட் செய்ய வேண்டிய நிலை வந்துவிட்டது. பின்பு உசிலம்பட்டியிலிருக்கும் ஸ்ரீ அன்னை தியான மையத்தில் சென்று 1 மணி நேரம் பிரார்த்தனை செய்துவிட்டு ஸ்டேஷனுக்கு போகின்றேன். நான் என்ன நியாயத்தை எதிர்பார்த்தேனோ அதே போன்ற தீர்வை தீர்த்து வைக்கின்றார்கள். அதன் பின்பு அந்த நபர் யாரிடமும் வம்புக்கு நிற்பதில்லை. இதுவும் அன்னையின் கருணையே!

சமய வழிபாடுகளை ஒதுக்கி ஸ்ரீ அன்னை, பகவான் ஸ்ரீ அரவிந்தர் மட்டும் முழுமையாக ஏற்று வணங்க ஆரம்பித்ததிலிருந்து எனது கோபம் போய்விட்டது. அதிகப்படியான தேவையற்ற பேச்சு போய்விட்டது. மது அருந்தும் பழக்கம் போய்விட்டது. எப்போதும் மனம் ஆனந்தமாக உள்ளது. இப்படியொரு பாக்கியத்தை அன்னை அருள்கிறார். இவைகளை வைத்து மனம் மேலும், மேலும் அன்னையை நாடுகின்றது. நான் இழந்ததைவிட அதிகமாக பெறுவேன். அந்த வாய்ப்பை அன்னை அருள்வார்.

அன்னைக்கு எப்படியாவது ஒரு தியான மையம் அமைக்க வேண்டும். அதற்கு சிட்டியில் இடமும் உள்ளது. இதெல்லாம் கண்டிப்பாக அன்னையின் அருளால் நடக்கும் என முழுமையான நம்பிக்கை உள்ளது. இப்படியொரு பேரானந்தம் கிடைக்கும் போது ஒரே இறைவன் இரு பகுதிகளாக பூமியில் வந்துள்ளார்கள். அவர்கள் பகவான் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையுமாகவே நான் முழுமையாக நம்புகிறேன். அவர்கட்கு எனது கோடானுகோடி நன்றியை அவர்களின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன். எனக்கு அன்னையை பற்றி கடிதமெழுதிய தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னையே சரணம்!

ஸ்ரீ அன்னையின் அன்பன் -- M. Thiagarajan, Usilampatti

*****

அன்புள்ள அப்பா,

தங்களின் மூலம் அன்னையை அறிந்து கொண்டோம். காணக் கிடைக்காத அற்புதச் சுரங்கத்தை அள்ளித் தந்தமைக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். எங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களின் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.

அன்புடன் -- Dr. A. Ganesh, Professor and Chair, School of Geosciences, Bharathidasan University, Tiruchirappalli - 620024, India.

A great joy is always deep in our heart, and always we can find it there – The Mother.

Dear Dr. Ganesh,

Your email deeply touches my devotion to Her. In a sense everyone who knew Her since 1914 felt the wonder She was, a wonder of Gold Mine. In another deeper sense of Spiritual Grace, very rarely She was understood by most who are Her devotees.

You are an exception in the best sense of the word, I have written to several devotees the following: 

  • அன்னையை அறிவது பாக்கியம்.
  • அன்னையை முழுமையாக அறிந்தவரில்லை.
  • அன்னையின் ஆன்மீக இரகஸ்யத்தை அறிவது பூரணயோக சித்தி. 

To know the Spiritual Truth of the Mother, one has to be awake in his physical consciousness.

Sri Aurobindo says, without Mother all His yoga siddhi would have remained with Him, not reached the people.

With Mother's Love & Blessings, Karmayogi

*****



book | by Dr. Radut