Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 160: It sees the hurrying crowd of moment’s stream

விரைவான க்ஷண நீரோட்டமானதைக் கண்டு அமைதியான பெருந்தன்மை அண்மையை நோக்கி வருவதைக் கண்டு

  • இப்பெரு உலகம் தன்னையறியாமல் திரும்பி
  • உறக்கத்தில் சிந்திக்கும் ஜடம் தன் இருளின் நிழலைக் காண்கிறது
  • தவறிய மறைபொருளைத் தன்னிடமே மறைத்து
  • காதுக்கெட்டாத கருணை மொழியை நம் இதயத்துள் புதைத்து
  • புரிய முடியாத ஆத்ம சிரமம்
  • ஒருவரும் அறியாத உயர்ந்த யந்திரம்
  • கலையும் நுணுக்கமும் புலனன்றி எழுந்தன
  • நுண்ணிய சங்கீத சதஸ் வாழ்வை விளக்கியது
  • இதயம் எழுப்பாத இசையின் சிகரம் நிலைத்தது
  • அறிந்தும் அறியாமல் திரும்பும் மனம்
  • மேலோட்டமாக மேல்மனத்தை ஆராயும்
  • வாழ்வு நோட்டம் பார்க்கிறது, இயற்கை வழியை அறிகிறது
  • ஏன் வாழ்கிறோம், எதற்காக செயல்படுகிறோம் என அறியாமல்
  • நியாயமான உபாயத்தைச் சலிக்காமல் பயன்படுத்தி
  • பொறுமையாக சிறந்த விவரத்தின் நுண்ணிய சிக்கலை
  • மதியைக் கடந்த ஆன்மாவின் துணிச்சலான புதுத்திட்டம்
  • அர்த்தமற்ற எண்ணிறந்த வேலையின் பேரளவு உயர்ந்து
  • நோக்கமற்ற அதன் முடிவுக்கு நோக்கத்தின் சிறப்பை சேர்த்து
  • வண்ண மாடிகள் உயர்ந்து, வளரும் கட்டடம் சிறந்து
  • கெட்டியான அஸ்திவாரம் அவளிட்டதின்மேல்
  • இல்லாத வானில் எழும்பும் கற்பனைக் கோட்டைகள்
  • கனவுலகக் கட்டடம் புதிரான சந்திர மண்டலத்தை எட்டி
  • அழியும் சிருஷ்டி ஆகாயத்தை எட்டும்
  • உலகை வெல்லும் மாயத் திட்டம் வேதனையால் வெளிப்பட்டு
  • மங்கிய மனத்தின் அவநம்பிக்கை என்ற தரையில்
  • சிரமப்பட்டு செப்பனிட்ட துண்டாடிய முழுமை
  • ஊடுருவ முடியாத புதிரை உன்னும் மனம்
  • நாமும் பகுதியான இப்பெருவாரியான திட்டத்தில்
  • அதன் சுமுகம் நாம் வாழும் வாழ்வை அலைக்கழிக்கும்
  • நம் சேவையை ஏற்கும் பெருநெறியை நாமறியோம்
  • பிரபஞ்சக் கருவிகளின் பிதிர்ராஜ்ய வேலை
  • பரந்த கடலின் சிறு ஓரத்தை நாம் காண்கிறோம்
  • நாம் பெற்ற கருவிகள் அதன் பெரும் ஜோதியைப் பெறவில்லை.

*********

 

ஜீவிய மணி

மலைபோன்ற அமைதி மனத்துள் உள்ளது.
எரிச்சலும் ஆசையும் அடங்கினால் க்ஷணம்
தாமதிக்காமல் செயல்படும்.

*******



book | by Dr. Radut