Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/7. உள்ளெழும் எண்ணத்தை வெளியில் சமர்ப்பணம் செய்ய இயலாது

  • சமர்ப்பணம் தவறாது பலிக்கும் அன்பர், சற்று பெரிய காரியங்களில் சமர்ப்பணம் எளிதல்ல எனக் காண்பார்.
  • நமக்குச் சமர்ப்பணம் காரியம் கூடிவர, யோகத்தில் சமர்ப்பணம் அகந்தை அழியப் பயன்படுவது.
  • அகந்தை பிரம்ம வாயில்வரை வரும்.
  • அகந்தையை விலக்கி ஒரு காரியத்தைச் அகந்தை அப்பலனைக் கேட்கும். செய்தபின்,
  • தைரியங்களில் பெரிய தைரியம் தன் குற்றத்தை ஏற்பது.
  • காந்திஜி மகாத்மாவானது அதுபோன்ற தைரியத்தால்.
  • ஆயுதமேந்திய புரட்சியின்றி சுதந்திரம் வராது என்பது பகவான் கருத்து.
  • இறைவன் பகவானை, யோகத்தை மேற்கொள்ள புதுவைக்கு அனுப்பி விட்டார்.
  • பகவானிடம் ஆர்வமாக வந்த பாரதி, பகவானுக்கு சுதந்திரத்தைவிட யோகம் முக்கியம் என்பதால் அவரைப் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டார்.
  • அஹிம்சைக்குப் பெரிய பவர் இருந்தாலும், சுதந்திரம் பெறும் வலிமையில்லை. முஸ்லிம் மனம் மாறவோ, ஜின்னா பாகிஸ்தானை விட்டுக் கொடுக்கவோ அஹிம்சை பயன்படாது. காந்திஜி அஹிம்சையை வலியுறுத்தினார்.
    ஜின்னா போராட்டம் எழுப்பினார். இலட்சக்கணக்கானவர்கள் மாண்டனர்.
    காந்திஜியின் மனம் விழித்துக் கொண்டது.
    நாட்டில் வன்முறை எழுவது ‘என் அஹிம்சையால்’ என்று கூறினார். அது உண்மை.
    உண்மையை ஒப்புக்கொள்ளும் தைரியமிருந்ததால், அந்த உண்மை மூலம் உண்மையான நாட்டின் வலிமை வெளிவந்தது.
    நாடு பிரிக்கப்பட்டாலும், சுதந்திரம் பெற்றது.
    உள்ளத்து எண்ணத்தை வெளியில் உள்ளபடி கூறுவது தைரியம்.
    அது சமர்ப்பணத்தைவிட உயர்ந்த தைரியம்.
  • 1942-இல் அதே உண்மையை ராஜாஜி எடுத்துக் கூறிய பொழுது மகாத்மா ஏற்கவில்லை.
  • ஏற்றிருந்தால் பாகிஸ்தான் வந்திருக்காது.
  • ஒருவரால் ஐம்பது லட்சம் தொகை புரட்ட முடியும் என்றால் சமர்ப்பணம் ஐம்பது கோடி தரும்.
  • அந்த உயர்ந்த நிலையில் சமர்ப்பணம் எளிதல்ல.
  • மனம் சமர்ப்பணத்தை விட்டு சிந்தனை செய்யும்.
  • சிந்திக்கும் பொழுது காரியம் கெடுவதையும், சமர்ப்பணத்தின் பொழுது கூடி வருவதையும் காணலாம்.
  • வாயால் பேசும் சொல்லைச் சமர்ப்பணம் செய்வது அரிது. மனம் எழுப்பும் சிந்தனைகளை வாயால் பேசலாம். பேசுவதைச் சமர்ப்பணம் செய்வது அரிது.
  • முடிந்தால் உட னே செயல் தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும். அந்த நிலையில் செய்யும் சமர்ப்பணம், யோகத் தகுதியைத் தரும்.
  • யோகம் என்பது எதுவும் செய்யாத நேரம் தானே சமர்ப்பணம் செயல்படுவது.

**********

 ஜீவிய மணி  

ஆழத்தைக் கடந்த அமைதி ஆனந்தம் தரும் உறுதி. சொல்லழிந்து எண்ணம் கரைந்தால் ஜீவன் ஆனந்த அமைதியாக மலரும்.

**********



book | by Dr. Radut