Skip to Content

05. நெஞ்சுக்குரிய நினைவுகள் - ஆத்ம சமர்ப்பணம்

நெஞ்சுக்குரிய நினைவுகள்

ஆத்ம சமர்ப்பணம்

கர்மயோகி

  • இறைவன் உலகைப் படைத்தான் என்பதை பகவான், இறைவனே உலகமானான் என்பதால் உலகில் உள்ளவை அனைத்தும் இறைவனாகிறது. அதனால் அது தீமையாக இருக்க முடியாது.
    உலகில் இருள் இல்லை. தீமையில்லை என்றாகிறது.
  • பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவர்கள் கடவுள்கள். படைத்தல், காத்தல், அழித்தல் அவர்கள் கடமை என்பது நாமறிந்தது.
    பகவான் கூறுவது: பிரம்மாவும், மற்ற தெய்வங்களும் பிறந்த இடம் சத்திய ஜீவியம். அதுவே உலகைப் படைத்தது.
  • மனிதன் மோட்சத்தை மறுத்து, சத்திய ஜீவியத்தை அடைந்து இறைவனாவது திருவுருமாறுவதாகும்.
  • சமர்ப்பணம் ஆரம்பித்து, பலிக்க ஆரம்பித்த நிலையில் “எல்லாமே நம்பிக்கையிலிருக்கிறது. என்னால் முடியாததில்லை” எனத் தோன்றும். இதன் சூட்சுமம் “எதுவுமே என்னால் முடியாது” என்பது. கடவுள்கள் இந்த சூட்சுமத்தை அறியாத நேரம் இறைவன் அவர்களை அழைத்து ஒரு துரும்பை அவர்கள்முன் வைத்து தன்னை அவர்களிடமிருந்து விலக்கி அத்துரும்பை நகர்த்த வேண்டியபொழுது அவர்களால் முடியவில்லை. “இறைவனில்லாவிட்டால் நம்மால் துரும்பையும் நகர்த்த முடியாது” என கடவுள்கள் அறிந்தனர்.
    90 இலட்ச வீட்டை 30 இலட்சத்தில் பல மடங்கு செளகரியங்களுடன் கட்டி விட்டோம். நம்மால் அது முடியும் என்ற நேரம் அத்திறமையை சமர்ப்பணம் செய்ய வேண்டும். அதைச் செய்யும் மனிதன் தெய்வ நிலையைக் கடந்து உயர்கிறான்.
    இது முதற்கட்ட வெற்றி, முதலில் அறிய வேண்டிய யோக சூட்சுமம். யோகத்தில் பல கட்டங்களுண்டு. ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு சூட்சுமம் உண்டு. எந்த நேரம் சூட்சுமம் தவறுகிறதோ, அந்த நேரம் யோகம் தடைபடும்.
    சூட்சுமம் தவறாவிட்டால் யோகம் தடைபடாது.
  • சமர்ப்பணம் பலிக்கும் ஆரம்ப நாட்களில் ஏதாவது ஒரு செயலில் சமர்ப்பணம் முடிவுவரை பலிப்பதுண்டு. உள்ளே அந்த பாக்கியம் விழிப்போடு இருக்கும் நேரம் தெரியும். வெளியே பலன் தெரியும். அப்படிப் பலித்தபின், அதை முழுமையாகச் செய்வது ராஜயோகத்தை 3 நாட்களில் செய்வது போலாகும் என்றாலும் அதைக் கண்டபின், அதுவே நினைவாக இருந்தால், அந்நினைவே இடைவிடாத நினைவாக, இடைவிடாத இதயத்தின் அழைப்பாக மாறும்.
    • அழைப்பு முதலில் வாய்ச் சொல்லாகும்.
    • அடுத்த கட்டத்தில் மனதில் எழும் சொல்லாகும்.
    • மூன்றாம் கட்டம் மௌனமான சொல்லாகும்.
    • அழைப்பு அடுத்த நிலையில் எண்ணத்திலிருந்து விரிந்து மாறி பரந்த அழைப்பாகித் தொடரும்.
    • மனம் முழுவதும் அழைப்பை ஏற்கும் வரை நினைவு, சிந்தனை, கற்பனை, முடிவு போன்ற 12 அல்லது 15 மனத் திறமைகள் ஒவ்வொன்றாய்க் கரைந்து முழுமனமும் அழைக்கும்.
    • அந்த அழைப்பும் மௌனமானால் அதை மனத்தின் மௌன அழைப்பு எனலாம்.
    • மனத்தை அதுபோல் கடந்தால், அத்தனை கட்டங்களையும் உணர்ச்சியில் கடந்து அழைப்பு உணர்வைக் கடந்து, ஜீவனின் அழைப்பாகும். (இவற்றிடையே இன்னும் ஒரு கட்டமும் உள்ளது.)
    • நம் அழைப்பு ஜீவனின் அழைப்பாவது அழைப்பு.

********



book | by Dr. Radut