Skip to Content

08. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

100. காலம் கனவேகமாக நகர்கிறது.

  • பதவி ஏற்றவருக்கு ஐந்து வருட பீரியட் ஆறு மாதமாகத் தோன்றும்.
  • காதலை அனுபவிக்கும் நேரம் நேரமாகாது, மணி நிமிஷமாகும்.
  • Othello என்ற ஷேக்ஸ்பியர் நாடகத்தில் Iago என்பவன் வில்லன்.
    ஒரு பெரிய திட்டம் தீட்டி தன் தலைவர் தற்கொலை செய்துகொள்ளும்படி அது பலித்தது. இரவெல்லாம் அவர் மனதைக் கவரப் பேசியவன் வெற்றி பெற்றபொழுது, சூரியன் உதயமாயிற்று. தீட்டிய திட்டம் பலிக்கச் செய்த வேலை ஓரிரவு கழிந்ததையும் அறியவில்லை.
  • அன்பர் மாலை சமாதிக்கு வந்தார். அன்று ஏழரை மணிக்குப் பொதுத்தியானம். எட்டு மணிக்கு முடிந்தது. வந்து அரை மணியாகிறது என உணர்ந்தார். இரண்டு மணி அரை மணியாக ஆத்மா நெகிழ்வால் சென்றது.
  • படிப்பே வராத மாணவர்கள், SSLC வகுப்பு, ஒரு மாணவனும் பாஸாகாத வகுப்பு, தமிழாசிரியர் வருவார். இராமாயணம் நடத்துவார், பாட்டைப் பாடுவார், இலக்கண இலக்கிய நயங்களைக் கூறுவார். செய்யுளைக் கதையாகக் கூறுவார். மணியடித்தால் மாணவர்கள் ஏமாந்து போவார்கள். தமிழ், கதை, பாட்டு, சொல் நயம் மக்கு மாணவர்களை காலத்தின் கடுமையிலிருந்து விலக்குகிறது.
  • குடும்பம் நடத்த முடியாத வீட்டில் வளரும் பெண்களுக்கு எப்படித் திருமணம் செய்ய முடியும். பெரிய பெண் முப்பதைத் தாண்டியது. அது இருபத்து ஐந்து ஆண்டுகட்குமுன். பெண் பார்க்க வரன் என இதுவரை வந்ததில்லை. வந்தால் பெண் கட்டிக்கொள்ள நல்ல புடவையுமில்லை. பக்கத்து வீட்டுப் பணக்காரப்பெண் அன்பர். ஆசிரம தரிசனத்திற்கு வருபவர் அப்பெண்ணை அழைத்து வந்தார். திரும்பிப் போன கொஞ்ச நாட்கள் கழித்து, பம்பாய் வரன் வந்தது. இரு பெண்கட்கும் திருமணமாயிற்று. தம்பிக்கு பூணூல் போட்டனர். அப்பெண் எழுதிய நீண்ட கடிதம் உணர்ச்சிபூர்வமானது. விபரமான நன்றியறிதலைத் தெரிவிக்க முடியாமல் சிரமப்படும் எழுத்து. விபரமாக எழுதிய பெண் ஒரு கட்டத்தில் “அதற்கு மேல் நடந்தவையனைத்தும் கனவாக இருந்தது. இன்றுவரை கனவாக மனத்தை நிரப்புகிறது” என கடிதம் முடிகிறது.

மனம் உயர்ந்து ஆன்மாவானால், காலம் கடிய நடை போடும்.
அக்கறை ஆர்வமானால் நேரம் போவது தெரியாது.
வேலையில் மனமும் உணர்வும் ஈடுபட்டால் வேலை தெரியும்.
காலம் தெரியாது.
வாழ்வு மலர்ந்தால், வழக்கத்திற்கு மாறாக மலர்ந்தால், வழக்கமான காலம் தன்னை மறக்கும். நமக்கும் கால கண்ணுக்குத் தெரியாது.

பூரண யோக வாயில் திறப்பதின் ஆயிரம் வழிகளில் காலம் கழிவதும் ஒன்று. யோகம் மனிதர் குல மாணிக்கங்கட்கு மட்டும் உரிய இலட்சிய செயலான வாழ்வு. பூரண யோகம் செய்ய பூர்வ ஜென்ம புண்ணியம் தேவை. அல்லது இன்று செய்யும் புண்ணியம், பூர்வ ஜென்மம்வரைச் செல்வதாக அமைய வேண்டும் என்பது சட்டம்.

 

************

ஜீவிய மணி
 
அர்த்தமற்றதழிய அர்த்தத்தின் அர்த்தம் தெரிய வேண்டும்.
 



book | by Dr. Radut