Skip to Content

09. அஜெண்டா

அஜெண்டா

ஆரோவில்லுக்குரிய மொழி இயல்பாக எழ வேண்டும்

Volume 11, page 57

  • மொழிவது மொழி, மனிதனுடைய இயல்பான செயல்.
  • மொழி வல்லுநர்கள் மொழி வளர்ச்சியை ஆராய்ந்தது ஏராளம், அறிந்தவை அநேகம். மொழியில் ஆர்வமுள்ளவர்க்குரிய ஆழ்ந்தகன்ற கடல் அது.
  • சொற்கள் உருமாறுகின்றன, கருத்தும் மாறும், திரியும். அவை தனி சாஸ்த்திரம்.
  • சாஸ்த்திரம் என்ற சமஸ்கிருத சொல் தமிழில் சாத்திரம் என்றாயிற்று.
  • ‘ழ’ என்ற எழுத்து தமிழுக்கே உரியது. பழம், தமிழ் என்பவை அந்நியருக்கு வாராது. வாழைப்பழம் என்பது தொன்று தொட்டு மா, பலா, வாழையிலிருந்து வந்தது. தமிழ் போற்றப்படுமிடங்களில் ‘வாளைப்பளம்’ என அது உச்சரிக்கப்படுவதுண்டு.
  • புதுவை பிரெஞ்சு மாநிலம்.
    Politician என்பதை நாம் பாலிட்டிஷியன் என உச்சரிப்போம்.
    புதுவையில் பிறந்தவர் பொலிட்டிஷியன் என்பர். அது பிரெஞ்சு உச்சரிப்பு.
  • Hostel என்பதை ஹாஸ்டல் என்பது வழக்கு.
    ஹோஸ்டல் என சில இடங்களில் கூறுவர்.
    Administration என்றால் நிர்வாகம், Account என்றால் கணக்கு.
    ஹாலந்தில் Administration என்றால் கணக்கு.
  • ஆசிரமம் எனில் தவம், யோகம் செய்யுமிடம்.
    அனாதை ஆசிரமம் என்ற பெயர் அனாதைகள் தங்குமிடத்திற்கு வந்து விட்டது.
    வழக்கு, வாழ்வு, சொல், கலந்து புது நிலை எழுவதுண்டு.
  • புனிதச் சொற்கள் வசைச் சொற்களாகவும் மாறும்.
  • குறவன் என்பது பழந்தமிழில் சான்றோர், தலைவன் என வழங்கியது.
    இன்று அது நரி பிடிப்பவனுக்குப் பயன்படுகிறது.
    அகராதி, மொழியின் அனைத்துச் சொற்களும் உடைய நூல்.
    அதிகப்பிரசங்கி என்ற பொருளில் இன்று வழங்குகிறது.
    பண்பு மாறும்பொழுது, சொல் வழக்கில் கருத்து மாறும், எதிராகவும் மாறும்.
    கூத்து என்பது பழந்தமிழ். டிராமா இலக்கிய நயமான சொல்.
    தெருக்கூத்து என்று இன்று வழங்குவது உன்னதமான சொல்லை தாழ்ந்த கருத்தை வெளியிடப் பயன்படுத்துகிறோம்.
    தந்தி போய் ஈமெயில் வந்துவிட்டது.
    பொதுவாக தந்தி கொண்டு வரும் செய்தி மரணம் என நாட்டில் வழக்கமாகி விட்டது.
    நம் நாட்டில் தந்தி சுருக்கமாக இருக்கும்.
    இங்கிலாந்தில் நூறு அல்லது இருநூறு சொற்களுள்ள தந்தி சென்ற நூற்றாண்டிலும் வழக்கமாக இருந்தாலும் கிராமப் புறங்களில் தந்தி வந்தால் தவறான செய்தியை எதிர்பார்க்கிறார்கள். ‘தந்தி-இங்கிலீஷ்’ என்ற சொல் ஆங்கிலம் தவறாக எழுதப்படுவதைக் குறிக்கும்.
  • ஆரோவில்லில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் கலப்பதால், அதன் வளர்ச்சி மொழி வல்லுநர்கள் ஆராய்ச்சிக்கும், ஆர்வத்திற்கும் உரியது.

*******

ஜீவிய மணி
 
பெற்றதை விட்டால் மௌனம் பெறலாம்.
பெறாததை விட்டு விட்டால், மௌனத்தைக் கடந்த மௌனம் பெறலாம்.
 



book | by Dr. Radut